பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

வாங்க ரஜினி அவர்களே, இந்த நூறாவது பட்டிமன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

முன்பெல்லாம் மீந்து போனால் கொட்டுவதற்கு (மாட்டு) தொட்டி இருந்தது....இப்பொழுது தான் இருக்கவே இருக்கிறது (மனிதனின்) தொப்பை. குளிர் சாதன போட்டியில் பழசை பொக்கிஷமாக பாதுகாத்து நுண்ணலை அடுப்பு மூலமாக அதை பாலிஷ் செய்து அப்படியே புதுசு போல அதையே சாப்பிட வேண்டியது தான்.

எனக்கு தெரிந்த தோழியின் கணவருக்கு சர்க்கரை பொங்கல் பிடிக்கும். அவளும் அவருக்கு அடிக்கடி அவர் கேட்காமலே சர்க்கரை பொங்கல் செய்து தருவது வழக்கமாம். அவருக்கும் ஒருநாள் கேட்டே விட்டாராம் உனக்கும் தான் என் மேல் எவ்வளவு அன்பு ......அதற்க்கு அவள் சொன்ன பதில் தான் அசத்தல் "அன்பு தான் மாமா, அதனால் தான் மீதமான பழைய சாதத்தை பார்த்தவுடனே உங்களின் ஆசை தான் ஞாபகம் வருது"......எப்படி இருக்கு பாருங்க...

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க வனி அவர்களே, நூறாவது பட்டிக்கு உங்களை அன்புடன் வரவேற்ப்பதில் அளவில்லா மகிழ்ச்சி (?!)

அதெல்லாம் ஒரு அழிகிய நிலா காலம்......அந்த கேவலமான சாப்பாட்டையும் அரட்டை அடிக்க நேரம் வேண்டும் என்று தெரியாமல் வாயில் போட்டுட்டு அதை நாக்கில் படாமல் சாப்பிடும் சாகசம் இருக்கே......

நாமெல்லாம் விஞ்ஞானி வனி, சொன்னா உலகம் நம்பவா போவுது. பக்குவும் வரும்வரையில் ஏற்படும் இழப்பு நஷ்டம் எல்லாம் அந்த குப்பை தொட்டிக்கு தான் வெளிச்சம்! இருந்தாலும் அந்த சுவை இந்த சுவையில்லை என்று கண்டுபிடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அந்த நல்லா இல்லாததை வீட்டில் உள்ள ஆண்களுக்கு கொடுத்திட்டா அவ்வளவு தான்......அவங்களுக்கும் சுவை தெரியுமாக்கும்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க கவிசிவா அவர்களே, உங்களை நூறாவது பட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன். உங்களை எல்லாம் இப்படி ஒரு சந்தர்பத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :)

மகள்: அம்மா எனக்கு இட்லி பிடிக்காதுன்னு தெரியும் தானே.......தோசை வேண்டும்......
அப்பா/ அம்மா: என்னடி இப்படி வாய் வளர்த்தா போற இடத்துல எப்படி சமாளிப்ப......இட்லி தான்.....இஷ்டமோ கஷ்டமோ இது தான் சாப்பிடனும்.....

என்ன கொடுமை சார் இது.......இரண்டுக்கும் ஒரே மாவு தான்.......குழப்பத்துடன்......

யாரெங்கே இந்த சாலட் கண்டுபிடிதவரை கூண்டில் ஏத்துங்க .......(குறிப்பு கொடுதவங்களை எல்லாம் பாவம் விட்டுடுங்க......)

இங்கே எங்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் சாப்பிட கூப்பிட்டிருந்தார்கள். அவர்கள் "சாத்வீக" ரக சமையலை பழகியவர்கள். அந்த வீடு அன்பர் நன்றாக ருசித்து சாபிட்டார், சரி அவருக்கு பழி போன உணவு என்று விட்டு விட்டோம். நமக்கு "ப்ரசோதக" அல்லது "பயானக" கூட ஓகே தான்......ஆனால் இது ..... அன்று மாலை உணவு அனைவருக்கும் வீட்டில். அவர்கள் சமையலில் புகுந்து விளையாடிருந்தார்கள். அபார ருசி, மதியம் வேற சரியாக சாபிடாததால் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே உள்ளே போனது. இல்லையென்றாலும் சுவையாக இருந்தால் அளவு அதிகம் ஆவது இயற்க்கை என்று தான் நானும் நினைத்திருந்தேன், அந்த அன்பரை பார்க்கும் வரை. அவர் இவர்கள் வீட்டிலும் சுவையாக இருக்கிறது என்று அதிகம் சாபிடாமல் அவர் வீட்டில் சாப்பிடும் அதே அளவு சாபிட்டார். அவர் சொன்னார் உயிர் வாழ தான் உணவே தவிர நாவிற்கு இல்லை என்றார். நமக்கு முடியலை......

என்ன எதிரணி கேட்டீங்க தானே........நன்றாக இருந்தால் ருசிப்பதை விட்டுவிட்டு, இதில் என்ன இருக்கு, எப்படி செய்தாங்க என்று தான் மனம் போகும். அப்படி இருக்கும் போது எப்படி ரசிக்க முடியும்? இல்லை சும்மா தான் கேட்கிறேன்.............

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க ஆனந்த கௌரி அவர்களே, உங்களை பட்டிமன்றம் அன்புடன் வரவேற்கிறது.

இந்த அவசர உலகத்தில் எல்லோருக்குமே நேரமில்லாமல் போகிறது. சில நேரங்களில் நேருக்கு நேர் பார்த்து பேசிக்கொள்வதே அரிதாகிறது.

என்னதான் வேலை இருந்தாலும் பெண்களின் சமையலில் குறை கூறவில்லை என்றால் ஆண்களுக்கு தூக்கம் வருவதில்லை தான். ஒருவேளை அவர்களின் அன்பின் வெளிப்பாடோ அது?

இருந்தாலும் பெண்களே சமைத்து அதில் குறை கூறினால் நன்றாக இருக்குமா? ஆனால் அன்று அம்மாவின் சமையலில் கூறிய குறைகளுக்கு தான் இன்று இப்படி நடக்கிறதோ என்னவோ........

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க ரேவதி அவர்களே, உங்களை பட்டிமன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

யாருங்க சொன்னது "அடுப்பூதும் பெண்கள்" என்று........அடுப்பா அப்படினா என்ன?

காபியா டீயா நு கூட தெரியாதவங்களுக்கு சுவையை பற்றி என்ன தெரியும் சொல்லுங்க பார்ப்போம். ஒருவேளை அடிக்கு பயந்து உண்மை வெளிவருவதில்லை போலும்.........."இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?......என்ன பண்றது ஆரம்பத்துல நானும் நம்பலை தான் அப்புறம் நம்பினா தான் சோறு நு சொன்னாங்க....." இந்த கால் வயத்துக்காக எவ்வளவு செய்ய வேண்டி உள்ளது பாருங்க......

சிற்பி சிலையை கலைநயத்துடன் செதுக்குவான். பார்ப்பவர்களின் கண்களுக்கு அவரவரின் ரசனையை பொறுத்தே அது காட்சி தரும். அதே போல தான் ரசனை என்பது அவசியம் நு சொல்றாங்க......சரி தானுங்களே நான் சொல்றது?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே... நிறைய டிவி ஷோ பார்த்திருப்பீங்க, ஆண்கள் செஃப் வரும்போது பாருங்க, எண்ணெய் காயும் முன் கடுகு சீரகம் எல்லாம் போட்டு வைப்பாங்க. எதையும் சரியா வதக்க கூட விட மாட்டாங்க. அம்புட்டு தாங்க அவங்க ரசனை. வதக்கினா சுவை நல்லா இருக்கும் என்று தினம் சமைக்கிறவங்களுக்கும், முக்கியமா அதன் சுவையை உணர்ந்தாங்களூக்கு தெரியாம போகுமா?

பெண்கள் எப்பவும் எதிலுமே ரொம்ப ரசனை உள்ளவர்கள் நடுவரே... அதனால் தான் ஒரு உணவை சுவை பார்த்து குடும்பத்தினரின் ரசனைக்கு ஏற்றபடி பக்குவமா அவளால் சமைக்க முடியுது. அவங்களே ரசிச்சு ருசிச்சு சாப்பிடலன்னா எது எந்த அளவில் இருந்தா குடும்பத்தினர் நாவுக்கு ருசின்னு அவளால் எப்படி உணர முடியும்னு சொல்லுங்க பார்ப்போம்?? இதனால் தான் நடுவரே பெண்கள் எப்பவும் ரொம்ப நேரம் சாப்பிடுறாங்க... ரசிச்சு ருசிச்சு நிதானமா சாப்பிடும் பழக்கம்.

ஒருவரால் இன்னொருவர் ரசனைக்கு சமைக்க முடியுதுன்னா அது அவங்களும் அந்த உணவை ரசிச்சு சாப்பிட்டிருக்காங்கன்னு தானே அர்த்தம்?? அட... ஒரு உணவை சாப்பிட்டு நல்லா இருக்கு இல்லன்னு தாங்க ஆண் சொல்வாங்க... ஆனா பெண் தான் புளி கொஞ்சம் கம்மி, உப்பு கொஞ்சம் கம்மி அதனால் காரம் சொற்றுன்னு தெரியுதுன்னு பக்குவத்தை சரியா சொல்றவங்க. இதுவே அவங்க ரசிச்சு சாப்பிடுறதுக்கு ஆதாரம் இல்லையா நடுவரே?

நீங்க சொன்ன மாதிரி பிடிக்காத உணவில்லை நடுவரே... நிஜமாவே 2004, 2005’ல டைடல் பார்க் ஃபுட் கோர்ட் உணவு எனக்கு மிகவும் பிடிச்ச ஒன்று. ;) உணமியில் அந்த பொங்கலின் சுவை எனக்கு இன்னும் நினைவிருக்கு. அந்த வடையும் பொங்கலும் ஒரு நாள் சரியில்லன்னாலும் கொஞ்சம் மிஸ் ஆனாலும் என் நாக்கு சொல்லிடும். அது தான் நடுவரே ருசி உணர்ந்து உண்பது.

அப்படி ருசியை பெண்கள் உணர்வதால் தான் ரசித்ததால் தான் எந்த உணவகத்தில் எதை சாபிட்டாலும் அதில் உள்ள காம்பினேஷனை யூகித்து மீண்டும் வீட்டில் முயற்சிக்க உதவுது. ரசிச்சு சாப்பிடாதவங்களால் எப்படி ஒரு உணவை பிரியமா சமைச்சு பார்க்க முடியும் என்கிறார்கள் எதிர் அணி??

ஆண்கள் ரசிச்சு உண்பதானால் எங்கே வெளியே போனாலும் சமாலிக்க முடியாது நடுவரே. அவர்கள் பசிக்கு சாப்பிடுபவர்கள். பெண்களை இப்படி வெளியே சாப்பிட்டு 10 நாள் இருக்க சொல்லுங்க... நாக்கு வீட்டு உணவுக்கு ஏங்கும். கம கமன்னு வீட்டு ரசம் தேடும். அவங்களை போய் ரசிச்சு சாப்பிடுறதில்லை, ஓடி ஓடி முழுங்கிட்டு போறோம்னு சொன்னா எப்படிங்க?? நியாயமே இல்லை தானே?

இன்னு இருக்கு நடுவரே... இந்த எதிர் அணி மக்கள் நேரமில்லை என்ற ஒரு காரணத்தை விட்டு பதிவை போடட்டும் வனி வந்துடுறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே மீண்டும் வந்துட்டோம்ல‌. நடுவரே எதிரணித் தோழி சொல்வதைப் போல‌ ஆண்கள் சமைக்கும் போது வேணும்னா ரசனை இல்லாதவங்களா இருக்கலாம். ஆனால் சாப்பிடற‌ விஷயத்துல‌ அவங்க‌ ரசனை இருக்கே... அம்மாடியோ நாக்கு அவங்களுக்கு ரொம்ப‌ நீளமுங்கோ. சமையலில் வேணும்னா பெண்களின் ரசனை வெளிப்படலாம். அதை ருசிப்பதில் ரசனை கொண்டவர்கள் ஆண்களே!

அடைன்னா காம்பினேஷன் அவியல் அல்லது வெல்லமும் வெண்ணெயும், புட்டுன்னா வேகவைத்த‌ பாசிப்பயிறு, பழம் , பப்படம், சர்க்கரை, நெய் (தனித்தனியா இல்லீங்கோ இது அத்தனையும் சேர்ந்த‌ காம்பினேஷன்) இல்லைன்னா கடலை கறி அல்லது நான்வெஜ் குழம்பு இப்படி ஒவ்வொன்னுத்துக்கும் அததுக்குன்னு சரியான‌ காம்பினேஷன் இருக்குங்க‌. இப்போ எதிரணியினர் ஓடி வருவாங்க‌ இவ்வளவையும் ரசனையோட‌ சொல்றது பெண்ணாகிய‌ நீங்கள்தானேன்னு. வெய்ட் பண்ண‌ சொல்லுங்க‌ நடுவரே. இனிமேல்தான் மேட்டரே :). அப்புறம் இம்பூட்டும் எதுக்கு டைப் பண்ணி என்னைய‌ படிக்கச் சொன்னேன்னு வையப்படாது நடுவரே! பொறுமை பொறுமை :)

எல்லா காம்பினாஷன்களும் நமக்கு அத்துப்படிதான் நடுவரே. ஆனா என்ன‌ பாருங்க‌ நமக்கு மட்டும் செய்யணும்னா அடைக்கு வெறும் துவையல் வச்சுட்டோ புட்டுக்கு வெறுமே சர்க்கரையை சேர்த்துட்டோ பசிக்கு சாப்பிட்டு அக்கடான்னு அடுத்த‌ வேலையை பார்க்க‌ போயிடுவோம். இதெல்லாம் இல்லைன்னு சொல்லப்படாது. இன்னிக்கு எனக்கு மட்டும்தான் அதான் இருப்பதை வைத்து ஒப்பேத்திட்டேன்னு சொல்லுவாங்க‌. இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான் நடுவரே. பெண்கள்தான் ரசிச்சு ருசிச்சு சாப்பிடறவங்களாச்சே. இன்னிக்குத்தான் நமக்கு மட்டுமே பிடிச்சதை செய்யலாமே, பிடிச்சதை செய்து ரசிச்சு ருசிச்சு சாப்பிடலாமேன்னு ஏன் செய்ய‌ மாட்டேங்கறாங்க‌. கேட்டு சொல்லுங்க‌ நடுவரே. இதுவே ஆண்களுக்கும் சேர்த்து சமைக்கிறோம்னு வைங்க‌ கரெக்ட் காம்பினேஷன்ல‌ சூப்பரா செய்வோம். ஏன் தெரியுமா ஆண்கள் ருசிக்கு சாப்பிடுபவர்கள். சரியான‌ காம்பினேஷனோட‌ கொடுத்துப் பாருங்க‌ அந்த‌ சாப்பாட்டின் ருசியை அவங்களோட‌ முகத்தில் பார்க்கலாம். அப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க‌.

தொலைக்காட்சிக‌ளில் வரும் செஃப் பற்றி சொன்னாங்க. பெண் செஃப்கள் சமைக்கும் போது இதை ரொட்டியோடு சாப்பிடலாம் தோசையோடு சாப்பிடலாம்னு சொல்லி ஷார்ட்டா முடிச்சுடுவாங்க‌. ஆனால் நம்ப‌ ஆண் செஃப் இருக்காரே ஒவ்வொரு சமையலும் செய்துட்டு அதை எப்படி சாப்பிடணும்னு சொல்லும் போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊறும். அப்படி ரசிச்சு சொல்லுவார். அவர் சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறதாலதான் சொல்வதைக் கூட‌ அவ்வளவு ரசனையோட‌ சொல்ல‌ முடியுது. நாமதான் பசிக்கு சாப்பிடறவங்களாச்சே. எல்லாத்தையும் பட‌ படன்னு சொல்லிட்டு போயிடுவோம் :)

சாப்பாட்டில் ரசனை கொண்ட ஆண்கள் க்ரூப்பாக‌ சேர்ந்து ஊர் ஊராக‌ போய் அங்குள்ள‌ ஸ்பெஷல் உணவுகளை ருசித்துவிட்டு அதை ஃபேஸ்புக்கில் பகிர்கிறார்கள். இப்படி ருசிக்காக‌ பல‌ கிலோமீட்ட்ர்கள் பயணிக்க‌ நிச்சயம் நம் பெண்கள் தயாராவதில்லை. காரணம் நேரமில்லை , சமூக‌ சூழல் அப்படி இப்படீன்னு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் உண்மையான‌ காரணம் பெண்களுக்கு சாப்பாட்டில் அந்த‌ அளவுக்கு ஈடுபாடு கிடையாது என்பதே! அதனால்தான் சொல்கிறோம் உணவை ரசித்து ருசிப்பதில் பெண்களை விட‌ ஆண்களே ஒரு படி முன்னால் இருக்கிறார்கள் என்பதை நடுவர் மீதே அடித்து... இல்லை இல்லை நடுவர் முன்புள்ள‌ மேசை மீது அடித்து சொல்கிறோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே... இதை எல்லாம் நம்பாதீங்க. நீங்க எப்படி, நான் எப்படின்னு நமக்கே தெரியும் ;) இங்க பழைய சாப்பாடு மிச்சம் இருந்தா வனி சாப்பிட மாட்டேன். என் ரசனைக்கு தகுந்த உணவு இல்லை என்றால் அது மாமியார் பரிமாறினாலும் பயத்துல கூட எனக்கு உள்ள போகாது. நான் சமைச்சு கொடுத்து விடும் உணவு இவௌக்கு நல்லா இருக்கோ இல்லையோ வீனாக கூடாதுன்னு சாப்பிட்டு முடிப்பார். ஆனால் நான்... அன்னைக்கு சாப்பிடாம கூட இருப்பேன், நான் சமைச்சது கூட பிடிக்கலன்னா நோ தான்.

அது மட்டும் இல்லை நடுவரே... இவருக்கு காலையில் அவர் ரசனைக்கு எதை செய்து கொடுத்தாலும் என் ரசனைக்கு ஏற்ப தான் ம்திய உணவை சமைத்து சாப்பிடுவேன். அவருக்காக கூழ் செய்தாலும், நமக்கு அது உள்ள போகாது. நான் இட்லி, தோசைன்னு செய்து சாப்பிட சோம்பினதே இல்லைங்க. என் நாக்கு உணவு ருசிக்கு அடிமைங்க.

இவருக்கு பிடிக்கவே பிடிக்காதுன்னு நான் கேக் செய்யாம இருக்கேனா, குக்கீஸ் செய்யாம இருக்கேனா??? எனக்கு பிடிச்சதை நான் செய்யாம இருந்ததே இல்லைங்க. இவருக்கு பொங்கலுக்கு சட்னி தான் பிடிக்கும். எனக்கு சாம்பார். அதனால் இரண்டையுமே செய்வேன். சோம்பிப்போய் சட்னி மட்டும் போதும்னு பிடிக்காத காம்பினேஷனை சாப்பிட்டதே இல்லைங்க.

இவருக்கு பூரி பிடிக்காது. சப்பாத்தி தான். ஆனா நான் எனக்காக பூரி + கிழங்கு செய்துட்டு இவருக்கு அதே கிழங்கோடு சப்பாத்தி கொடுப்பேன். ;) என் நாக்கு விரும்பும் சுவை எனக்கு முக்கியமே. நாங்க எல்லாம் எதிர் அணி போல தியாகி இல்லைங்கோ. நாங்க கூட தான் பல உணவகங்களில் சாப்பிட்டு அந்த அனுபவத்தையும், பிடிச்ச சுவையையும் இங்கே அறுசுவையிலேயே பகிர்ந்துக்கறோம். ஒத்துக்குவாங்களா எதிர் அணி??? நாங்க ரசிச்சு தான் சாப்பிடுறோம்னு ;) அதனாலயே சொல்றேன், பெண்ணால் தான் உணவை ரசித்துச் சாப்பிட முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீண்டும் வந்துட்டோம்ல .

நடுவரே என்னதான் ஆண்கள் காம்பினேஷனோட ரசனையா சாப்பிட்டாலும் அதை ரசித்து சாப்பிட தூண்டியது நம்மை மாதிரி ஒரு ரசனையான பெண்தானே நடுவரே .

ஒரு கப் காபி கூட நாம்தான் நடுவரே ரசனையா ரசித்து குடிப்போம் . வெளீய மழைசாரல் அப்படியே இளையராஜா பாடல் கேட்டு அந்த மழைச்சாரல்ல நாமும் நனைந்து நம்ம காபி கப்பில் சில சாரல் விழுந்து அதை குடிக்கறதே தனி ரசனைங்க . இது மாதிரி எத்தனை ஆண்கள் ரசிக்கிறாங்க சொல்லுங்க நடுவரே .

Be simple be sample

மேலும் சில பதிவுகள்