பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

பொம்மலாட்டத்தில் கயறு எப்படி ஏறி இறங்குதோ அதற்க்கு தகுந்தார் போல தானே ஆட்டமும் இருக்கும்.......கைநீட்டி காசு வாங்கிட்டா.......நாக்கு நீட்டி ருசித்து சொல்லித்தானே ஆகோணும்......அப்புறம் அங்கே சுவைக்க வைத்திருக்கும் அளவு ரொம்பவும் கம்மி அதான் பருக்கை ருசி பார்க்க......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பொருத்தது போதும் என்று பொங்கி எழ வேண்டாம் ......தீர்ப்பு வந்துக்கொண்டே இருக்கிறது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சிறப்பு மிக்க பட்டிமன்றத்தில் என்னை நடுவராகிய என் அறுசுவை தோழிக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுகின்றன!

பட்டிமன்றத்தை சிறப்பிக்க வந்த அணைத்து அறுசுவை அன்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுகின்றன!!

சிறிது இடைவெளிக்கு பின்பு வருகின்றதால் பலருடைய வாதங்கள் இவ்வாறு தான் இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. அதுவும் நன்று தான்.....அதனால் தான் ரசித்து ரசித்து எதிர்ப்பார்த்து படிக்க முடிந்தது. பட்டிமன்றத்தில் வெளுத்து கட்டி காய போட்ட அனைத்து தோழிகளும் ஒரு "ஓ போடு"!

தலைப்பு : " உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?"
//தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி//

முதலில் பட்டிமன்றத்தில் இந்த தலைப்பை எடுத்த போது குழப்பம் இல்லை. பிறகு வாதங்களை பார்த்தவுடனே குழப்பம். தோழிகள் அனைவருமே பெண்களுக்கு நேரமில்லை என்பதையே மையப்படுத்தி வாதிட்டதால் வந்த குழப்பம் தான். அதனால் தான் தலைப்பின் இலவச இணைப்பாக ஒரு கொசுறு தகவலை சேர்த்தோம் " ஒருவேளை பெண்களுக்கும் ஆண்கள் போல் நேரம் காலம் சந்தர்ப்பம் அமைந்தால்....." ஆனாலும் யாரும் அதை கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன் :(

இங்கே நான் கூறும் விளக்கம் பெரும்பாலோரை கருத்தில் வைத்து மட்டுமே தானே தவிர ஒருசிலரை கணக்கில் கொண்டில்லை!

நம் வீட்டில் நாம் யாருக்காக சமைக்கிறோம்? திருமணமான புதிதில் கணவருக்காக தேடி தேடி சமைப்போம். எதற்க்காக? அவரிடம் பாராட்ட பெற வேண்டும் என்பதற்காக தானே? அதுவும் விதம் விதமாக எதற்க்காக சமைக்க வேண்டும்? தினமும் சாம்பார் செய்தால் சாப்பிட மாட்டார்களா.......சாப்பிடுவார்கள் என்றால் இன்று இங்கே வாதாடும் பாதி பெண்கள் அறுசுவைக்கே வந்திருக்க மாட்டார்கள். எல்லாம் எதற்க்காக அம்மாவின் கைமணம் என்று பேசுபவரை என் மனைவி சமையலின் ருசி தான் பெஸ்ட் சொல்ல வைக்க தானே! கேள்வி பட்டிருக்கிறேன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் திருமண சீரில் அவர்கள் சமுதாயத்தின் பிரதான குறிப்புகள் அடங்கிய ரெசிபி புத்தகமும் கண்டிப்பாக இருக்குமாம்.

முதலில் கணவரை நம் ருசிக்கு அடிமை ஆகிவிட்டது. பின்பு வேறு யார் பிள்ளைகள் தான். பின்னே,நம் பிள்ளைகளுக்கும் என் அம்மா தான் பெஸ்ட் குக் என்று சொல்லவேண்டாமா......இருந்தாலும் பாட்டி சமையல் சாப்பிட்டவுடன் நம் சமையலை கொஞ்சம் மட்டம் தட்ட தான் செய்வார்கள்......குழந்தை பிறந்து திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் காலத்திலருந்தே அவர்களுக்கு நாம் பல சுவைகளை அறிமுக படுத்துவோம். அவர்களுக்கு பிடிக்கிற வயசு வரும் போது ருசியை போதிப்போம்.

எப்படி? என் கணவருக்கு உப்புமா (ஏறக்குறைய பல ஆண்களுக்கு) என்னால் நம்மால் அப்படியே வாழ முடியுமா......என் குழந்தைக்கு பழக்கி விட்டேன்.....தங்கம் இது அம்மாவுக்கு மிகவும் பிடித்தது நீயும் சாப்பிட்டு பார் என்று.....
செல்லம் இந்த பப்பு பூவாயில கொஞ்சூண்டு நெய் சேர்த்து இப்படி குழைய பிசைஞ்சி சாப்பிட்டா அமிர்தம் மாதிரி இருக்கும். கூடவே இந்த அப்பளத்தையும் கடிசிக்கோ......பாத்தியா நல்ல இருக்கு இல்ல.....
இந்த தயிர் சாதத்துல ஒரு வாய் எடுத்து அந்த வத்த குழம்பு/புளி குழம்பு ஒரு ஸ்பூன் விட்டு சாப்பிட்டு பாரேன் அப்புறம் உண்ணும் வேணும் வேணும் அடம் பிடிப்பே.....
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.......அவர்களுக்கு காம்பினேஷன், சுவையை ருசிக்க சொல்லி கொடுக்கிறோம். சில இடங்களில் ஆண்களும் சொல்லி கொடுப்பார்கள்.

பெரும்பாலும் சமையலுக்கு தேவையான உப்பு புலி மிளகாய்,காய்கறி என்று எல்லா வற்றையும் வாங்குவது பெண்கள் தான். அதுவும் வெவ்வேறு கடையில் தான் கேட்டால் அங்கே இது நன்றாகும் இங்கே அது நன்றாக இருக்கும் என்றும் ஒரு சாக்கு. அப்படி தப்பி தவறி ஆண்கள் போகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு குறிப்புகள் சொல்லி அனுப்புவார்கள். சொல்லி அனுப்பிவிட்டு கடைக்காருக்கும் போன் போட்டு சொல்லி விடுவார்கள். ஆண்கள் சொல்லாமல் வாங்கி வந்து விட்டால் வசை தான். எதற்க்காக எல்லாம் ருசிக்க வேண்டும் என்பதற்காக தான்.

அப்படி பார்த்து பார்த்து சமைக்கும் பெண்கள் என் சிறிதளவு மட்டுமே சாபிடுறாங்க? ஒருவேளை பிடிக்கவில்லையோ? ருசிக்கவில்லையோ? இல்லை ருசிக்க தெரியவில்லையோ? சிறிதளவு சாபிட்டலும் ருசித்து சாபிட்டால் தான் பெண்களுக்கு உள்ளே இறங்கும். இல்லையென்றால் தட்டில் கோலம் தான் போடுவார்கள்.

நன்றாக சமைக்க தெரிந்தவர்களுக்கு பெரும்பாலும் வெளியில் ருசியாக இல்லையென்றால் சாப்பிட பிடிக்காது. ருசித்து விட்டால் கேட்கவே வேண்டாம் அடிக்கடி செல்வார்கள். நாவிற்கு அடிமையானவர்கள் சமையல் சாப்பாடு பற்றி நாள் முழுக்க வேண்டுமென்றாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

ஆண்களுக்காக சமைக்கிறோம் என்றால் அவர்கள் சமைத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் அதனால் தானே? நீங்களே சொல்லுங்க, உங்கள் வீட்டிற்கு வருபவருக்காக விருந்து சமைத்து வைக்க வந்தவர்கள் சிறிது சிறிதாக சாபிட்டால் பிடிக்குமா இல்லை,கேட்டு கேட்டு வாங்கி சாபிட்டால் பிடிக்குமா? ஆண்கள் சங்கோஜப்படாமல் ருசியாக இருந்தால் இரண்டு பந்தி கூட இருந்து சாப்பிட்டு விட்டு தான் எழுந்திருப்பார்கள்.

எனக்கு என் அப்பா சாப்பிடும் போது ஒரு வாய் ஊட்டி கொள்ளா விட்டால் அன்று இரவு தூக்கமே வராது. அவர் பிசைந்து சாப்பிடும் போது (அதற்க்கு முன் தான் சாப்பிட்டு அதையே எழுந்திருந்திருப்பேன்) நாக்கில் ஜொள் ஒழுகும். அவர்களுக்கு தெரியாத காம்பினேஷனே இல்லை எனலாம். தினம் தினம் கண்டுபிடித்து கொண்டே இருப்பார்களோ என்னவோ?

இருட்டுக் கடை அல்வா கடையில் ஆண்கள் கூட்டம், பரோட்டா கடையில் ஆண்கள் கூட்டம், பிரியாணி கடையில் ஆண்கள் கூட்டம்,டீக்கடையில் ஆண்கள் கூட்டம் இப்படி எந்த ஒரு உணவகத்திலும் ஆண்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் சொல்லியும் வந்திருக்கலாம்,இருந்தாலும் பெரும்பாலோனோர் அவர்களின் நாவிற்கு கட்டுப்பட்டே வந்திருப்பார்.

என் உறவினர் ஒருவருக்கு திருமணம். நான் அவரிடம் கேட்டேன் "தம்பி, தேனிலவு எங்கே என்றேன், அதற்க்கு அவர் சொன்னார் அக்கா,மதுரை போகிறேன் என்றார் .....என்ன மதுரையா என்றவுடன் அவர் சொன்னார் ,அங்கே ஒரு புட் டூர் இருக்கு அது தான் இதன் ஹைலைட் என்றார்"அதாவது மக்களே கேட்டுக்கோங்க,சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு ஒன்பதரை வரை மதுரையில் இருக்கு இண்டு இடுக்கு பொந்து சந்துக்குள் இருக்கும் மதுரை உணவை அதன் பிரத்தியேகமான விடுதியில் கொண்டு உங்களை திணற திணற சாப்பிட வைப்பதே இதன் நோக்கமாம்.

இங்கிருந்து இந்தியாவிற்கு நாங்க சுதந்திரம் வாங்கிய நேரத்திற்கு பின்னர் தான் வந்து இறங்குவோம். பிறகு அங்கிருந்து ஊருக்கு/வீட்டுக்கு போக எப்படியும் விடிந்து விடும். அப்படி ஒரு நண்பர் ஊருக்கு சென்றார் அவரை அவரின் மைத்துனர் ரிசீவ் செய்துள்ளார். மணி இரவு ஒன்றரை. எங்களுக்கு அது மதியம் நேரம் அதுவும் இல்லாமல் விமானத்தில் கொடுத்த உணவை சாப்பிட்டு கண்டிப்பாக இறங்கியவுடன் ஒரு அசுர பசி வரும் பாருங்க அப்பொழுது எது கொடுத்தாலும் இறங்கும். நம்பரின் மைந்துனர் கூறிவிட்டாராம் காஞ்சிபுரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில இருக்கும் பரோட்டா கடையில் மட்டுமே நிறுத்த வேண்டும் அந்த கடை இல்லையென்றால் வண்டியை நேராக தஞ்சாவூர் விடு என்றாராம். இப்படி வெறி தனமாக ருசிக்கு அடிமையானவர்கள் ஆண்கள்.

"நள பாகம்"என்று கூறுவார்கள். அது நளன் என்னும் அரசனின் சமையலை குறிக்கும். ருசியாக இருந்ததால் தான் இன்றும் அது ஸ்டாண்டர்ட் ஆக கருத படுகிறது. சமைக்க தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக அதன் சுவையை ருசிக்கவும் தெரிந்திருக்கும். இல்லையென்றால் சமையல் ருசிக்காது. சமையலில் சேரும் ஒவ்வொரு பொருளின் சுவையை உணர்திருந்தால் மட்டுமே சுவையான சமையலை சமைக்க முடியும்.

இன்றைய கால கட்டத்தில் ஆண்களோ பெண்களோ எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். வண்டி ஓட்டும் போது காலை உணவு,மதியம் மீட்டிங் போது மதிய உணவு, இரவு டிவி முன்பு உணவு என்று இருக்கும் போது யார் தான் ரசித்து ருசித்து சாபிடுறாங்க. இந்த நண்டு சிண்டு கேட்ட கேடு அது சாபிடற அரை தோசைக்கு "டார்லிங் டம்பக் " பாட்டு போட்டா தான் சாபிடுது.

உண்மையை சொல்லுங்க, இந்த காலத்தில் யாராவது எந்த உணவகத்தை அல்லது ரெசிபியை உங்களுக்கு ரெகமண்ட் பண்ணாமல் போயிருப்போமா அல்லது ட்ரை பண்ணியிருப்போமா? கிடையவே கிடையாது. அறுசுவையை எடுத்துக் கொள்ளுங்கள், எத்தனை பின்னூட்டம் இருக்கோ அது தான் பெஸ்ட் ரெசிபி என்று நாமே முடிவு செய்து விடுகிறோம். ஆனால் உண்மையில் அது சரி இல்லை.

உணவை ருசிக்க தெரிந்தால் மட்டும் போதுமா, இல்லை அதில் என்ன இருக்கும், என்னென்ன இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்தால் எது இல்லை என்றும் சொல்ல முடியும். அவ்வாறு இருக்க சுவைக்க மட்டும் தெரிந்தவர்களால் எவ்வாறு ருசிக்க முடியும். அதனால் "நன்றாக" சமைக்க தெரிந்தவர்கள் அனைவருமே உணவை ருசியாக புசிக்க தெரிந்தவர்களே என்பது தான் என் ஆணித்தரமான தீர்ப்பு.

இந்த பட்டிமன்றத்தின் விருதளிப்பு விழா நாளை தொடரும்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//உணவை ருசிக்க தெரிந்தால் மட்டும் போதுமா, இல்லை அதில் என்ன இருக்கும், என்னென்ன இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்தால் எது இல்லை என்றும் சொல்ல முடியும். அவ்வாறு இருக்க சுவைக்க மட்டும் தெரிந்தவர்களால் எவ்வாறு ருசிக்க முடியும். அதனால் "நன்றாக" சமைக்க தெரிந்தவர்கள் அனைவருமே உணவை ருசியாக புசிக்க தெரிந்தவர்களே என்பது தான் என் ஆணித்தரமான தீர்ப்பு.// உண்மையிலேயே நன்றாக‌ சமைக்கத்தெரிந்தவர்கள் அனைவருமே ருசிக்கவும் தெரிந்தவர்கள்தான்.

அருமையான‌ தீர்ப்பை வழங்கிய‌ நடுவருக்கு, என் மனமார்ந்த‌ பாராட்டுக்கள்.

அன்பு நடுவருக்கு,

பட்டிமன்றத்தை ரொம்பவும் நன்றாக‌ நடத்தி, அருமையான‌ தீர்ப்பையும் கொடுத்திட்டீங்க‌.

எல்லோருடைய‌ வாதத்துக்கும் பதில் சொல்லும்போது, சரளமாக‌ உரையாடுவது போல் பதிவிட்டிருந்தது ரொம்பப் பிடிச்சிருந்தது.

அதுவும் படிக்கறப்ப‌ எனக்கு உங்க‌ குரல் காதில் ஒலிக்கிற‌ மாதிரியே இருந்தது.:)

பங்கேற்ற‌ அனைவருக்கும் மனம் நிறைந்த‌ பாராட்டுக்கள். அனு செந்திலின் கடைசிப் பதிவு படிச்சிட்டு, நானும் பதில் சொல்லறதுக்கு யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன், எதுவும் தோணலை. அந்த‌ அளவுக்கு அழுத்தமான‌ வாதங்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

இந்த‌ மாதிரி எல்லா பட்டிமன்றத்திலும் பங்கேற்று, எதிரணியினரை திக்கு முக்காட‌ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பங்கேற்ற‌ அனைத்துத் தோழிகளுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

உங்க‌ வாதங்கள் அருமை .நம்ம‌ அணியை தாங்கிப் பிடிச்சதுனு சொல்லலாம்.
ஆணித்தரமான‌ கருத்துக்கள். வாழ்த்துக்கள்
ஒவ்வொரு பாயிண்டும் சூப்பர்.

நல்ல‌ தலைப்பு தோழி. சூப்பர் . எது சரின்னு நானே நடுவில் குழம்பிட்டேன்.
உங்களோட‌ பதில்கள் அருமையா இருந்தது.
ருசியா சமைக்க‌ தெரிந்தால் ரசித்து சாப்பிடலாம்
அனைத்து தோழிகளும் ரொம்ப‌ அருமையா வாதிட்டாங்க‌.
வாழ்த்துக்கள்

புதிய‌ தோழி சக்தி தேவி அருமையா வாதிட்டாங்க‌

.

நீங்க‌ சாப்பிடும் போது சொன்ன‌ காம்பினேஷன் அருமை.
என் தோழி சொல்லித் தான் எனக்கு அடைக்கு வெண்ணையும்,வெல்லமும் தொட்டு சாப்பிடலாம்னு தெரியும். அது என் பையனுக்கு ரொம்ப‌ இஷ்டம்.
அது போல‌, இட்லிப் பொடி செய்யும் போது சிறு துண்டு வெல்லம் போட்டால் சுவை அலாதி தான்.
தேங்காய் சட்னியில் எண்ணெய், தக்காளி சட்னின்னா இட்லியில் நெய் நீங்க‌ இந்த‌ காம்பினேஷன் பற்றி ஒரு பெரிய‌ பதிவு போட்டால் நல்லது.
போடுவீங்க‌ தானே சீதா

நீங்க‌ மாம்பழம் சாப்பிடும் விதம் சொன்னீங்க‌ பாருங்க‌ அசந்துட்டேன்.
உண்மையிலேயே நீங்க‌ ரொம்ப‌ ரசித்து தான் உணவை சாப்பிடுறீங்க‌ .
பதில் சொல்ல‌ முடியலை எனக்கு.
எனக்கு மாம்பழத்தை தோல் எடுத்துட்டு அப்படியே கடித்து சாப்பிட‌ பிடிக்கும்
என் தங்கை தோலில் ஒரு துளையிட்டு அப்படியே உறிஞ்சுவாங்க‌.
ஒவ்வொன்றும் ஒரு சுவை.
அருமையான‌ பதிவுகள்

அம்மணி... ரொம்ப நாளைக்கு பின் வந்து பேச்சுலையே எல்லாரையும் கவுத்துபுட்டீங்க. ஐ லைக் இட் :) சீதா சொன்ன மாதிரி உங்க வே ஆஃப் ரிப்ளை எனக்கு பிடிச்சுது. தீர்ப்பும் சூப்பர். நான் அப்போ நல்லா சமைக்கறேன்னு சொல்றீங்களோ?? ;) இதுக்கு தனியா பட்டி வெச்சுடாதீங்க. நமக்கு இப்ப தான் உடம்பு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு, அதான் தாமதமான பதிவு, மன்னிச்சுடுங்கன்னு உங்ககிட்ட சொல்லி உதை வாங்க நான் தயாரில்லை. :) வனி வரலன்னா காரணம் இருக்கும்னு உங்களுக்கு தெரியும்.

மொத்தத்தில் இந்த பட்டி எனக்கு ருசியா திருப்தியா இருந்தது லாவி கண்ணா. எனக்கு பிடிச்ச நடுவர், எனக்கு பிடிச்ச உணவை பற்றிய தலைப்பு... குறைவா இருந்தாலும் நச்சுனு கருத்துகள்.... அம்சமா மகுடம் வெச்சது போல ஒரு தீர்ப்பு. சூப்பர். பாராட்டுக்கள். இனி தொடர்ந்து வரணும், அது தான் முக்கியம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்