பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

முதல்ல 100வது பட்டியில் கருத்து பதிவிட்டு வாதித்து சிறப்பித்த எல்லா தோழிகளூக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். உங்க எல்லாருடைய வாதங்களும் இல்லன்னா பட்டிமன்றம் அழகிழந்து போயிருக்கும். பாராட்டுக்கள். :)

நிகிலா.. நன்றி நன்றி ;) மாம்பழம் அப்படி சாப்பிட்டா தான் நான் சாப்பிடவே செய்வேன், கட் பண்ணி யாரும் தட்டில் கொடுத்தா தொடவே மாட்டேன்.

அனு செந்தில்... முடியலம்மா... இப்படியா விடாம எதிர் அணிக்கு ஆப்பு வைப்பீங்க ;) சூப்பரா இருந்தது உங்க கருத்துகள், மொபைலில் அப்பப்ப படிச்சேன்.

ஆனாலும் எனக்கு இம்முறை எங்க அணி ஜெயிக்கும்னு நம்பிக்கை தந்தது நம்ம சீதா & சக்தி வாதம். சீதா எழுத்தை பற்றி நான் சொல்லவே வேண்டாம். ஆனா சக்தி... புது முகமா இப்போ தான் சில பட்டியில் வராங்க... பூந்து விளையாடுறாங்க. போன முறை கோயமுத்தூர் ஸ்டைல், இப்போ இப்படி... எல்லாமே ரசிச்சு படிச்சு ஆமாஞ்சாமி சொல்லும்படி இருந்தது. வாழ்த்துக்கள் சக்தி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் என்னுடய‌ வாதத்தை பாராட்டிய‌ அன்புள்ளங்கள் சீதாம்மா, நிகி & வனி அனைவருக்கும் என் மனமார்ந்த‌ நன்றிகள். மோதிரக் கையால் குட்டு வாங்கறதுன்னு சொல்வாங்களே!! அது இதுதானோ!!!
உண்மையிலேயே உங்களின் பின்னூட்டத்தை படித்தவுடன், நாம‌ அப்படியா வாதிட்டுருக்கோம்னு ஒரு சந்தேகமே வந்துடுச்சு.....:‍)))

உண்மைய‌ சொல்லப்போனா நானுமே ரசிச்சு சாப்பிடற‌ கூட்டத்தில‌ ஒருத்திதான், நீங்களெல்லாம் ஆணித்தரமா கருத்தை சொல்லும்போது, பட்டியில் நான் எந்தபக்கம் வாதிடுகிறேன்னு மறந்துபோய்,எங்கே எனக்குள் இருக்கிற‌ சாப்பாட்டு ரசிகை வெளியே வந்துடுவாளோன்னு பயந்தேன்..:‍))))))

வர‌ வர‌ பட்டியில் கலந்துக்கவே கொஞ்சம் பயம்மா இருக்குங்க‌, அப்பப்பா!!! சீதாம்மாவுடைய‌ அசைக்கமுடியாத‌ வாதம், வனியுடய‌ ரசனையான‌ வாதம், திடீர்னு புயலைப்போல‌ வர்ற‌ நம்ம‌ சக்திதேவியோட‌ வாதம், கவிசிவாவோட‌ கலக்கலான‌ வாதம் (நல்ல‌ வேலை இந்த‌ பட்டியில‌ ஒரே அணி), நம்ம‌ கிறிஸ்மஸ் இருக்காங்களே காமெடி பன்றமாதிரியே சீரியஸ் மேட்டரா சொல்லிப்போடுவாங்க‌! இன்னும், இன்னும் நிறைய‌ மக்கள் சீனியர்ஸ் & ஜூனியர்ஸ் இருக்கறீங்கோ! என்னை விட்டா எல்லாரையும் புகழ்ந்தே ஒரு பதிவு ஆரம்பிச்சுடுவேனுங்க‌!

எப்படி இருந்தாலும் பட்டியில் வாதிடும் அனைத்து தோழிகளுமே, வாதம்னு வந்திட்டா, ஒரு கலக்கு கலக்கிடுறீங்க‌! அனைவருக்கும், நம்ம‌ ஸ்பெஷல் நடுவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய‌ மனமார்ந்த‌ பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி அனு செந்தில்.

உங்களை நான் "அணு" என்று சொன்னதில் எந்த வித தவறுமே இல்லை. ஏனென்றால் பட்டிமன்றத்தில் உங்களின் வாதங்கள் கண்டிப்பாக அணு குண்டு (சத்தியமாக உங்களை சொல்லலை) போல் இருந்தது. நீங்கள் இந்த சதம் அடித்த பட்டிமன்றத்தின் ஸ்டார் ஸ்பீக்கர் . இந்த பட்டிமன்றத்தின் பிரியாணி பொட்டலம் அனு என்று கூறுவதில் மகிச்சி அடைகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு நன்றி சீதாலக்ஷ்மி.

உங்களுடைய பிசியான நேரத்திற்கு இடையேயும் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு ஆணித்தரமான அழுத்தமான கருத்துக்களை பதித்ததற்கு வாழ்த்துக்கள்.

நான் உங்களை எந்த அளவு ஆட்கொண்டிருந்தால் பதிவு கூட என் வாய்சில் கேட்கும்.......அங்கிள் மன்னிச்சு......

காம்பினேஷனை வகை வகையாய் அடுக்கி எங்களை திக்கு முக்காட வைத்ததால், இந்த பட்டிமன்றத்தின் சர்க்கரை பொங்கல் வடகறி நீங்கள் என்று பெருமை பட கூறுவேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு நன்றி நிகிலா.

நீங்கள் இந்த பட்டிமன்றத்தின் பச்சடி என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு நன்றி வனி.

என்ன இப்படி கேட்டுபுட்டீங்க? //நான் அப்போ நல்லா சமைக்கறேன்னு சொல்றீங்களோ?? ;) // சரியா போச்சு போங்க.

அணைத்து வாதங்களும் தீர்ப்பெழுத ஏதுவாகவே அமைந்தன.

எனக்கு எப்பொழுதுமே கம்போர்ட் புட், ஹோம் புட் என்றால் ரசம் சாதம். எத்தனை தடவை சாபிட்டாலும் அலுக்காது. அதே போல் படிக்க படிக்க திகட்டாத பதிவுகள்.

நீங்கள் இந்த பட்டிமன்றத்தில் ரசம் சாதம் அப்பளம் என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹிஹிஹி... ஈ.... தேன்க்யூ தேன்க்யூ :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான தீர்ப்பு.விருது பெற்ற இல்லை பட்சனப்பட்டம் பெற்ற பேச்சாளர்கள் அனைவருக்கும் அனந்துவின் வாழ்த்துக்கள்.

சீதாம்மா,வனி மேடம்,அனு மேடம்,சக்தி மேடம் உங்களுடைய வாதங்கள் தான் என்னுடைய INSPIRATION.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நடுவரே, நீங்க‌ என்னை "அணு உலை" என்று சொன்னால்கூட‌ வருத்தப்படமாட்டேன்!! அதுதான் எனகுப் பிடித்த‌ "பிரியாணி பொட்டல‌" விருது கொடுத்திட்டீங்களே! உண்மையில் "திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி" சாப்பிட்ட‌ ஆனந்தம் எனக்கு.

இத்தனை அனுபவம்மிக்க‌ சிறந்த‌ "ஸ்டார் பேச்சாளர்கள் "(எழுத்தாளர்கள்) கலந்துகொண்ட‌ சிறப்புவாய்ந்த‌ 100வது பட்டியில், எப்படி பேசனும்னு இப்பொழுதுதான் அனுபவப்பாடம் கற்றுக்கொண்டிருக்கும் ஒரு புதுமுக‌ மாணவியை
"ஸ்டார் ஸ்பீக்கர்" நு சொல்லிட்டீங்களே!!! ஆனந்தம்! ஆனந்தம்! மற்றும் நன்றிகள்.

வெற்றி, வெற்றி பட்டியில் நமது அணிக்கே வெற்றி (நாங்களும் ஒரு வாதம் பெண்களே அணிய ஆதரிச்சி போட்டுருக்கொம்ல) சமையல் பத்தி, ரசனை பத்தி கிறிஸ், நினைச்சா சிரிப்பு வருது. அருமையான, அனுபவம்மிக்க நடுவர். தீர்ப்பு //''நன்றாக" சமைக்க தெரிந்தவர்கள் அனைவருமே உணவை ருசியாக புசிக்க தெரிந்தவர்களே//நா இல்ல, நா இல்ல. இது எனக்கு இல்ல.
ஸ்டார் ஸ்பீக்கர் - அனு செந்தில். வாழ்த்துக்கள். வாழ்த்தி பாமாலை பாட நேரமின்மையால், இந்த பூமாலையை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றும் நம் உற்றார், உறவினரியும் வாழ்த்தி கலர் சோளப்பூ கொடுக்கிறோம். (இப்போதைக்கு அருசுவைல ஸ்டாக் இது தாங்க) நன்றி, நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்