பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

எந்த‌ காலத்துல‌ இருக்கோம்னு கேட்காங்களே. காலையில் பசங்க‌ ஸ்கூல் போறாங்க‌. கணவர் வேலைக்கு போறாங்க‌ அந்த‌ டைம் ல‌ நீங்கலா சொல்லுங்க‌ நடுவர் அவர்களே அவங்க‌ கூட‌ உட்காந்து ரசித்து சாப்பிட‌ முடியுமா.அவங்க‌ போன‌ பிறகுமே வீடு வேலை எல்லாம் முடிச்சு நம்ம‌ ரசித்து சாப்பிட‌ முடியுமா எப்ப‌ வேலை முடிப்போம் அடுத்த‌ வேலை பாப்போம்னு தான் அல்லது ரெஸ்ட் எடுப்போம் தோனுமே தவிர‌ எங்க‌ ரசித்து சாப்பிட‌ முடியும் யாராவது செய்து கொடுத்து நம்ம‌ சாப்பிட்ட‌ ரசித்து சாப்பிடலாம்.நம்மள‌ செய்து எங்க‌ ருசித்து சாப்பிட‌....ரசனை வேற கூச்சம் வேறனு எங்களுக்கும் தெரியும் நடுவர் அவர்களே.ஆனால் எந்த‌ இடத்துலா கூச்சம் இல்லாம‌ சாப்பிடுறோமோ அந்த‌ இடத்துலா தான் ரசித்து ருசித்து சாப்பிட‌ முடியும்.ரென்டு இட்லியோ,பொங்கலோ அதை மட்டுமே ரசித்து சாப்பிடறதுக்கு பேர் ரசனை கிடையாது.நல்ல‌ ருசித்து ரசித்து சாப்பிடறவங்க‌ என்னைக்குமே அளவு பாத்து பயப்படவெ மாட்டாங்க‌.நல்ல‌ சாப்பிடுவோம் தான் நெனைப்பாங்க‌.மேக்ஸிமம் லேடிஸ் நம்ம‌ தான் இதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவோம் அதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவொம்னு கன்ரோல் பன்னுவோம்.என்னைக்கு நம்ம‌ சாப்பாட்டை கன்ரோல் பன்ரோமோ அப்புறம் எங்கிட்டு ருசித்து சாப்பிட‌ முடியும்.என்னைக்காவது லேடிஸ் 4 அல்லது 5 இட்லி மேல‌ சாப்பிட்டோம்னு சொல்ல‌ சொல்லுங்க‌ பாப்போம்.ஆனால் ஆண்கள் சாப்பாடு நல்ல‌ இருந்தா நார்மலா சாப்பிடறாத‌ விட‌ நல்ல‌ சாப்பிடுவாங்க‌.நம்ம‌ நல்லவே இருந்தாலும் அந்த‌ ரென்டு அல்லது மூன்று மேல‌ போகாது.இதை யாராவது இல்லைனு மட்டும் சொல்லுங்க‌ பாப்போம்.அவங்க‌ சாப்பிடறத‌ வைச்சே இந்த‌ சாப்பாடு அவ்ங்களுக்கு பிடிக்குது பிடிக்கலைனு தெரிஞ்சுக்கலாம். எங்க‌ ஏரியா வந்து கிராமம் இல்ல‌ நகரம் இல்ல‌ ரென்டுக்கும் இடைப்பட்ட‌ ஒரு ஊர் இங்க‌ எல்லாம் ஒரு பங்சன் மறுநாள் என்றால் கரி விருந்து போடுவாங்க பாத்துக்கோங்க‌ அங்க‌ மேக்ஸிம் ஆண்கள் தான் சக்கை போடு போடுவாங்கா.எனக்கு பாத்தே பசி மறந்துறும்..ரோட்டோர‌ கடையில‌ கூட‌ நின்னு இட்லி,ஆம்லேட் சாப்பிடுவாங்க‌ கிராஸ் பண்ணும்போது ஒரு வாடை அடிக்கும் அதை அங்க‌ நின்னு சாப்பிட‌ முடியுமா.அப்பா கிட்ட‌ சொல்லி வாங்கி வரச்சொல்லி வீட்டில்தான் சாப்பிட முடியும்.ஆனால் ஆண்கள் சாப்பிடனும் நெனைக்காங்காளா எங்க‌ நல்ல‌ இருக்கோ அங்கயே உட்காந்து சாப்பிடுவாங்க‌.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//நல்ல‌ ருசித்து ரசித்து சாப்பிடறவங்க‌ என்னைக்குமே அளவு பாத்து பயப்படவெ மாட்டாங்க‌.நல்ல‌ சாப்பிடுவோம் தான் நெனைப்பாங்க‌.மேக்ஸிமம் லேடிஸ் நம்ம‌ தான் இதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவோம் அதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவொம்னு கன்ரோல் பன்னுவோம்.என்னைக்கு நம்ம‌ சாப்பாட்டை கன்ரோல் பன்ரோமோ அப்புறம் எங்கிட்டு ருசித்து சாப்பிட‌ முடியும்.என்னைக்காவது லேடிஸ் 4 அல்லது 5 இட்லி மேல‌ சாப்பிட்டோம்னு சொல்ல‌ சொல்லுங்க‌ பாப்போம்// - ஆகா!!! இப்படிலாம் கூட சாப்பிடாம இருப்பாங்களா எதிர் அணி?? 2 இட்லி எந்த மூலைக்கு? ஆஹாங்... நமக்கு இதெல்லாம் செட் ஆவாது நடுவரே... நானெல்லாம் சாதாரணமாவே 4 இட்லி முழுங்குவேன். எனக்கு பிடிச்ச சிக்கன் கறியெல்லாம் சைடிஷா பண்ணா, இன்னும் 2 கூட போகும். கண்ணு வைக்காதீங்க யாரும், அப்பறம் உங்களுக்கே வயிற் வலிக்கும். 3:)

ரோட்டோர கடை... இதை நாங்க 12 வருஷம் முன்னடியே பண்ணிருக்கோம் நடுவரே. ரோட்டோரம் ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்று கூட விட்டதில்லை. இரவு 10 மணிக்கு கூட க்ரூப்பா போய் பெண்கள் சாப்பிட்டு வந்திருக்கோம். போங்கங்க... எதிர் அணியில் எல்லாரும் எங்களை விட வயசானவங்களா இருப்பாங்க போலயே!! இப்போ பெங்களூரில் பாருங்க,ரோட்டோரம் எத்தனை பெண்கள் சாப்பிடுறாங்கன்னு. கையேந்திபவனா இருந்தா என்ன? ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருந்தா என்ன? பசியும், வயிறும், நாக்கும் எல்லா மனுஷனுக்கு உள்ளது தானே நடுவரே!!!

இன்னைக்கு ரோட்டோர கடையில் டீ குடிக்க எனக்குப் பிடிக்கும். சின்ன பணியாரக்கடை கண்ணில் பட்டா, மாலை நேரம் தப்பாம வாங்கி சாப்பிடுவேன்.

அதே மாதிரி கல்யாண வீடு... நம்ம சின்ன அம்மணி (யாருன்னு சொல்ல வேணாம் தானே நடுவரே) கேட்டுப்பாருங்க.. நான் இங்க வந்த நாளா எங்க போயிட்டு வந்தாலும் இந்த ஊர் உணவையும் விருந்தையும் பற்றித்தான் பேசி இருக்கேன். அறுசுவையில் எழுதியும் இருக்கேன். புடவை, நகையை பார்க்கும் வழக்கமே எனக்கு இல்லைங்க. என்னை பொருத்தவரை நான் உடுத்தி இருப்பது தான் உலகத்துலையே பெஸ்ட் ;)

நான் யார் வீட்டுக்கு போயும் சாப்பிடாம வந்ததில்லை நடுவரே... ஸ்டைல் எல்லாம் பார்க்க மாட்டேன், பிடிச்சதை சொல்லி அதை வாங்கியே சாப்பிடுவேன். முன்பு மங்களூர் போனப்போவும் ரவை மீன் வறுவல் ஒரு தட்டை முழுசா நானே முடிச்சேன். என்னவர் என்னை பேன்னு பார்த்தார்... “எப்படி நீ யாரையும் கண்டுக்காம சாப்பாடே கண்ணா இருக்க??”னு கேட்டார். இதில் இருந்து என்ன தெரியுது நடுவரே??? இவருக்கு தான் மற்றவர் முன் சாப்பிட சங்க்டம்... அம்மணி எனக்கில்லை. மனுஷன் கஷ்டப்படுறதே இந்த வயிற்றுகாக தாங்க.. அதுக்கு ஏன் வஞ்சம் வைக்கணும்??

இந்த எலும்பு கடிக்கிற வேலை... சிக்கன்ல கொஞ்சம் சாஃப்ட் எலும்பு உண்டு, வெள்ளையா இருக்குமே நடுவரே... அதுக்கு பேரு தெரியல. என் ஃபேவரட்... நான் அதை கடிச்சு முழுங்குறதை எதிர் அணி மக்கள் ராஜ்கிரனை பார்க்குறது மாதிரி தான் இவர் பார்ப்பார். ;) பசியே போயிடுச்சும்பார். இப்பவே சொல்லிப்புட்டேன்... யாரும் கண்ணு வெச்சா அவங்க அவங்க வயிறு தான் வலிக்கும். ஆசையா இருந்தா நீங்களும் எங்களை மாதிரி ருசிச்சு சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் அப்படிதான் நான் சாப்பிடுறதுக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாமா இருப்பேன்.நானும் பெண்கள் ருசித்தே சாப்பிட‌ மாட்டாங்க‌ சொல்லலா.அதிகம்பட்சம் ஆண்கள்தான் சொன்னேன்.எங்க‌ வீட்டுலையும் அப்படிதான்.என்னொடா கணவர் குறையே சொல்ல‌ மாட்டார்.எனக்கு சமையல் எல்லாம் அவ்வளவு தெரியாது.செய்றது ஒரளவுக்கு நல்ல‌ பன்னுவேன்.எங்க‌ அம்மா சமையல் டேஸ்ட் என்னதான் பாக்கவே சொல்லுங்வாங்கா.சோ பெண்களுக்கு ருசித்து சாப்பிட‌ தெரியாதுனு சொல்ல‌ வரலே.ஆனால் 50/100 பேர் பெண்கள் ருசித்து சாப்பிடுவாங்க‌.ஆனால் ஆண்கள் 80/100 ருசித்து சாப்பிடுவாங்கா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

வாழ்த்துக்கள் நூறாவது பட்டிக்கும், சூப்பர் தலைப்புக்கும்... உணவை ரசித்து உண்பவர்கள் ஆண்களே... முதலில் சில உதாரணங்களை பார்க்கலாம்..
1. தோசையயை கனமா ஊத்தி 10 கரண்டி நெய்ய வெளி சைடு ஊத்தி 6 கரண்டி நெய்ய உள் சைடு ஊத்தி இட்லி பொடிய மழை சாரல் மாதிரி தூவி... வடிவேல்
2 கரிசல்காட்டூ பூவே படத்தில் நெப்போலியன் சாப்பிடுவது
இதெல்லாமே ஆண்களின் ரசனைக்கு உதாரணங்களே..

ஒரு சமயல நம்ம புதுசா ட்ரைபண்ணி நாம சாப்டா நல்லா இருக்கிற மாதிரியும் இருக்கும் நல்லா இல்லாத மாதிரியும் இதையே அப்பாகிட்டவோ வீட்டுகாரர் கிட்டவோ கொடுத்தது பாருங்க பக்குவத்த அள்ளி வீசுவாங்க... எதிரணி வீட்டுல அவங்க நல்லா ரசிச்சு சாப்பிடுவாங்கன்னா அவங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்குது(ககண்ணு போடலீங்கோ)... எல்லோருக்கும் கிடைப்பதில்லையே

இங்க வாய்ப்புகள்னா நினச்சத நினச்ச நேரத்துல செஞ்சுட முடியுமா என்பது... எல்லோருடைய ரொம்ப பேவரைட் அரிசிபருப்பு சாதம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. ஆ படிக்கும் காலத்தில் தம்பிக்கு வேண்டி டிபன் பாக்ஸ்ல அதயேதான் அம்மா செய்வாங்க.. வேற வழியே இல்லாம அதை தான் சாப்பிடுவேன்... இப்போ கல்யாணத்துக்கு பின் கணவரோட பேவரிட்.. வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்னு அடிக்கடி செய்வோம்.. மீதமாகிறத கீழ போட்டுட்டு தனியா நமக்குனு வேற செய்ய முடியுமா.. மாமியாரோட முனகல், அரிசி பருப்புவிலை இதெல்லாமும் நினச்சு பேசாம சாப்பிட பழகிட்டேன்.. ஆனா அத எப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிட? ஆனா கணவர் நெய் ஊத்தி ஒரு வாட்டி, ஊறுகாயோட, தயிரோடனு ரசித்து சாப்பிடுவார்... சரி ஓட்டலுக்கு போலாம்னு பாத்தா அங்க போய் பையனுக்கு ஊட்டி விட்டுட்டு நாம பொறுமையா சாப்பிட முடியுமா எங்காளு முறைப்பார் லேட்டாகுதுனு... சோ அங்கயும் நம்ம ரசன அடிவாங்குது...
என்னை தனிபட்ட முறையிலனு பாத்தா நல்லா சாப்பிடுவேன் எதிரணி தோழி சொன்ன மாதிரி நான்வெஜ் சைட்டிஷ் இருந்தா இட்லி சப்பாத்தி எல்லாம் நல்லா உள்ள போகும்... ஆனா என் தோழிகள்னு பாத்தா பாதி பேர் கடமைக்கு தான் சாப்பிடுவாங்க... ருசியான சாப்பாடுனாலும் அளவாதான் சாப்பிடுவாங்க.... ரசிச்செல்லாம் சாப்பிடமாட்டாங்க..அப்ப நினச்சிருக்கேன் எப்படி இப்படி இருக்காங்கனு... இப்ப பாத்தா நானும் அத போலதான் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஒரு விளம்பரத்துல வருமே துண்டு துண்டாய் சாப்பிட்டு வாழ்கிறேனே அப்படி சாப்பிட வேண்டியதா போச்சு.. ஒரு ஸ்வீட், ஸ்நாக்ஸ் சாப்டா கூட ஹெல்த் கான்சியஸ் தான் .... ருசிக்க முடியுமா அடுத்த துண்டை... ஆண்களுக்கு வெயிட் பத்தி எல்லாம் கவல இல்ல என் முன்னாடியே இரண்டு மூணு மினி ஜிலெபி இல்ல கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பானு வெளுத்து கட்டுவார் மனுஷன்.... அதுவும் கமெண்ட்ஸோட.... இவ்வளவு ஏங்க டெய்ரி மில்க் ரொம்ப பிடிக்கும் பையனுக்கு கோல்டு அதனால வாங்கறத பெரும்பாலும் தவிர்த்துடறேன்....

கணவர் ஊருக்கு போய்ட்டார்னா எனக்கும் ஜாலி தான்... ஆனா அவங்க சொல்ற மாதிரி இல்லைங்க... சிம்பிள் சமயல் தான்... நான் மட்டும் இல்லைங்க அம்மா, மாமியார், எனக்கு தெரிந்து பல வீடுகள்ள இப்படிதான்... நான் மட்டும் தனியா இருந்தா காலை டிபனே தான் மதியத்துக்கும்...
சரி நம்மள விடுங்க படிக்கும் பிள்ளைகள் பத்தி கொஞ்சம் பாக்கலாம் அரக்கபரக்க புக் ஒருகையில அதோட சாப்பிடறது... எக்ஸாம் பயத்துல சாப்பாடே உள்ள போகாது எங்க ரசித்தும் ருசித்தும் புசிக்கிறது... ஆறிய மதிய டிபன் பாக்ஸ் சாப்பாடு... பாவம்பா.... ஆனா எந்த பையனையும் புக்கோட உக்காந்து சாப்பிட்டுபாத்ததே இல்ல...
அடுத்ததா நம்ம ரசனையை தான் கணவர் வீட்ல திணிக்கிறோம்னு எதிரணி சொன்னாங்க.. கணவர் வீட்ல வெஜிடேரியன் என்பதால் நான் வெஜ் சாப்பிடுவதையேவிட்டுட்டாங்க என் அத்தை..

அட எதிரணி வாதத்தை நல்லா கவனிக்க நடுவரே . அவங்க எல்லாம் சூழ்நிலையால் ரசனைய விட்டுருக்காங்களே தவிர எ பிடிக்காதுன்னு யாரும் சொல்லே . வாய்ப்புகள் கிடைத்தால் அங்கேயும் ரசனை வளரும் என்பது உண்மை ஆகுது .எங்க புகுந்தவீட்டு மக்கள் எல்லாருக்கும் தெரியும் ரேவதி கூச்சபடாம நல்லா சாப்பிடுவேன்னு நல்லா கவனிப்பார் .டேஸ்ட் பார்க்கவும் நம்மளதான் முதல் கூப்பிடுவாங்க.

Be simple be sample

நீங்கள் சொல்லும் அந்த நபர் சமையலை நானும் ரசித்து பார்ப்பது வழக்கம். உங்களை போலவே வேறு ஒரு தோழியும் சொல்லியிருக்கார் என்னது இது இவர் இப்படி மஞ்சள் தூளை கூட அள்ளி வீசுறார். மஞ்சள் தூள் சிட்டிகை அளவில் அல்லவா சேர்க்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும்........

ஆராய்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள் இன்பதை கண்டிப்பாக ஒற்றுக் கொள்கிறேன். அப்படி ஒன்று ஒன்றாக ஆராய்ந்து வீட்டாரின் ருசியறிந்து சமைக்கிறார்கள் பெண்கள் என்று சொல்றீங்க. கண்டிப்பா சுவை அறிந்திருந்தால் தானே அதை சுவையாக சமைக்க முடியும் சொல்லுங்க........

இந்த ரசம் இருக்கே அதற்க்கு நான் அடிமை. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ரசம் கண்டிப்பாக கம்போர்ட் புட் தான். எங்கே சென்று வந்தாலும் வீட்டில் சுட சுட ரசம் சாதம் அப்பளம் அந்த காம்பினேஷனை எது மிஞ்ச முடியும்.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இதுவும் சரியாக தான் இருக்கிறது. காம்பினேஷன் எனக்கு தெரிந்து ஆண்களுக்கு நிகர் ஆண்களே.எங்கள் வீட்டிலும் அந்த பொறுப்பு அவர்களுடையதே!

அது என்னவோ அந்த காம்பினேஷன் பற்றி அந்த ஷெப் சொல்லும் போது அப்படியே நமக்கும் நாவூறும் (அவருக்கும் தான்!)

கண்டிப்பாகபெண்கள் தனியாக இருந்தால் சமையல் அறைக்கு லீவ் தான். இப்பொழுதெல்லாம் என்றும் பேருமே சேர்ந்து லீவ் விட்டுட்டு ஹோட்டலில் ஆர்டர் பண்றாங்களாமே! ஒருவேளை ரசனை மாறி போச்சோ?

புதுசாக ஒன்று ட்ரை பண்ணி சொதப்பி விட்டால் அதை ஆண்கள் கண்ணில் கூட காட்டாமல் கொட்டி விட மாட்டோமே? அப்புறம் எங்கே அவங்களுக்கு கொடுப்பது? எல்லாம் நன்றாக ருசியாக இருந்தால் மட்டும் அது மேஜை வரை போகும் எல்லாம் என்றால் குப்பை தொட்டியில் தஞ்சம் புகும்.

மதுரையில் உள்ள பிரபலமான உணவை அதற்க்கு பிரபலமான கடையில் கூட்டிக் கொண்டு போய் வயிறு புடைக்க புடைக்க சாப்பிட வைக்க ஒரு பாகேஜ் இருக்காம், என் உறவினர் கூறினார். கண்டிப்பாக இது ஆண்கள் ஸ்பெஷல் ஆகா தான் இருக்கும்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்