பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

நீங்களே சொல்லுங்க‌ நடுவர் அவர்களே நாங்களும் பெண்கள் ரசித்து ருசித்து சாப்பிட‌ கூடியாவாங்காதான் சொல்ரோம்.ஆனால் அதிகபட்ச‌ வாய்ப்புகள் ஆண்களுக்குத்தான் ரசித்து ருசித்து சாப்பிட‌ கிடைக்குது.நம்ம‌ வீட்டில் சின்ன‌ குழந்தை இருக்குது.அம்மவே மாமியாரோ என்ன‌ சொல்லுவாங்கா தெரியுமா குழந்தை தூங்கும்போதை சாப்பிடுனு சொல்லுவாங்க‌.அப்படி சாப்பிடும் போது குழந்தை அழுதாலும் நம்ம‌ போய் தூக்கனும்.கணவர் போய் தூக்க‌ சொல்ல‌ முடியுமா.ஏன் முடியாதுனு நீங்க‌ கேட்கலாம்.அவங்க‌ தூக்கியும் குழந்தை அழுது கிட்டே இருக்கான் என்ன‌ பன்னுவீங்க‌ ரசித்து சாப்பிட்டு கிட்டேவா இருப்பிங்க‌.நம்ம‌ போய்தான் குழந்தை சமாளிக்கனும்.அப்புறம் எங்கிட்டு ரசித்து சாப்பிட‌.சின்ன‌ குழந்தை வைச்சு இருக்க‌ அம்மாகிட்ட‌ கேளுங்க‌ அவங்க‌ கஸ்டம் தெரியும்.என்னைக்காவது கணவரும், மனைவியும் சேர்ந்து சாப்பிடும் போது குழந்தை அழுகுது கணவர் காலையில் இருந்து மனைவிதான் வைச்சு இருக்க‌ இப்ப‌ சாப்பிடுறா நம்ம‌ போய் தூக்குவோம் தூக்குவாரா மாட்டாங்க‌ நம்மள‌ தான் போய் குழந்தையா போய் பாருனு சொல்லுவாங்க‌ (ஒரு சில‌ பேரு சொல்லலாம் என்னொட‌ வீட்டுக்கார்ர் செய்வார்னு) நிரைய‌ வீட்டுக்காராங்க‌ அப்படி செய்ய‌ மாட்டாங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நடுவரே என்னை இப்படி "அணு" வாக்கிட்டீங்களே !

சரி அத‌வுடுங்க‌, நம்ம‌ வாதத்துக்கு வருவோம்,எதிரணி எனக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திட்டாங்க‌, எங்க‌ வீட்டுக் குட்டிப்பையன் இருக்கானே, கோவிலுக்கு போலாம்னு கூப்பிட்டீங்கன்னா வரவேமாட்டான், பார்க்குக்குதான் போகனும்னு அடம் பிடிப்பான். அதுவே புளியோதரை பிரசாதம் குடுக்கிற‌ பெருமாள் கோவிலுக்கு போலாம்னா உடனே சரின்னுடுவான். பெருமாள் கோவில் புளியோதரை டேஸ்ட் அவனுக்கு பிடிச்ச‌ பார்க்கைகூட‌ மறக்கச்செய்யும்னா பார்த்துக்கோங்களேன்.
இதுல‌ இருந்தே தெரியலீங்களா நடுவரே, ஆண்கள் சின்ன‌ வய‌சில‌ இருந்தே நாக்குக்கு அடிமைன்னு.

ஆண்கள் உணவை எவ்வளவு ரசிச்சு சாப்பிடுறாங்கன்னு தெரியறதுக்கு சில‌ சினிமாப் பாடல்களே போதும் நடுவரே.அந்தகாலத்து சினிமா பாட்டு ஒன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்,

''கல்யாண சமயல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்,
இது கௌரவப்பிரசாதம் இதுவே எனக்குப்போதும்''

இந்த‌ பாட்டில் வர்ற‌ வித‌ விதமான‌ சாப்பாடு மட்டுமல்ல‌, இன்னொரு பாட்டு இருக்கு அதைவிட‌ சூப்பரா,

'' நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா''

இந்த‌ 2 பாட்டிலயும் சொல்லியிருக்கிற‌ சாப்பாடு வெரைட்டீஸ், எத‌ எத‌ எப்படி சாப்பிடனும்னு சொல்ற‌ சாப்பாடு காம்பினேசன்ஸ், இது எல்லாம் கேட்டீங்கன்னாலே போதும், பத்து விருந்துக்கு போய் சாப்பிட்ட‌ மதிரி இருக்கும்.
அவ்வளவு ரசித்து எழுதியிருப்பாங்க‌ 2 ஆண் பாடலாசிரியர்களும். அவங்க‌ சாப்பாட்டை பத்தி அவ்வள்வு ரசிச்சு, ருசிச்சு எழுதனும்னா கண்டிப்பா அப்படி ரசிச்சு சாப்பிடறவங்களாலதான் எழுத‌ முடியும்.

இன்னொரு சூப்பரான‌ சினிமா வசனம் இருக்கு, அதை எழுதியதும், நடிச்சதும் இரண்டுமே ஒரு ஆண்தான். சம்சாரம் அது மின்சாரம்னு ஒரு படம், அதில் பெண்பார்க்க வர்றவங்களுக்கு கொடுக்கிறதுக்காக‌, கேசரி, பஜ்ஜி & காஃபி செய்யச்சொல்லி சொல்லுவார் விசு சார், அத‌ அவரு ரசனையோட‌ விளக்குவார் பாருங்க‌!!!! சாதாரண கேசரி,பஜ்ஜியையே இவ்வளவு ரசிச்சு சாப்பிட்டா, மத்த‌ சாப்பாட்டையெல்லாம் எவ்வளவு ரசிச்சு சாப்பிடுவாங்க‌ இவங்க‌ !

ஆண்கள் உணவை இப்படி ரசித்து சாப்பிடுறதனால‌தாங்க‌, இவ்வளவு ரசனையாகவும் எழுதமுடியுது.
எனவே நடுவரே, நான் சொல்லிக்கிறது என்னனா பெண்களால‌ ரசிச்சு சமைக்க‌ மட்டும்தான் முடியும், அதை ரசிச்சு சாப்பிடறவங்க‌ ஆண்கள்தான்.

நடுவரே, நேரம், காலம், அவகாசம், சந்தர்ப்பம் அமைந்தால், உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் பெண்களே. எதிர் அணியினர் சொல்லுற மாதிரி குழந்தை தூங்கும்போதை சாப்பிடுறது, கணவரை, குழந்தையை வேலை, பள்ளி அனுப்புற அவசரத்துல சாப்பிடுறது இதுல வராது.

வீட்ல உள்ளவங்க வெளில போயிருக்காங்க, முழுசா மூணு,நாலு நாள் ரெஸ்ட். அப்பதாங்க, நமக்குள்ள உள்ள சாப்பாட்டு ரசிகை வெளில வருவாங்க. சிம்பிள் டிஸ். ஆனா இதுவரைக்கும் ட்ரை பண்ணாத டேஸ்ட்ல செஞ்சி ரசிச்சி சாப்பிடுறது நாங்கதாங்க. மூணே தோச, ஆனா மூணு வெரைட்டி. ஒரு கப் காபி/டீ, இன்னொரு கை ஆலு பரோட்டா, இரண்டாவது பரோட்டாக்கு, இன்கிரிடேண்டும், டேஸ்டும் அதிகமாகும். மூணாவதுக்கு இன்னும் அதிகம். ஆண்களால முடியுமா?

மழைகால மாலை, சொல்லவே வேண்டாம். நம்ம உணவு ரசிகை ஆட்டமே போடுவாங்க. வெரைட்டி, வெரைட்டி ஸ்நாக்ஸ். நாம விரும்புற பக்குவத்துல, நாமலே ரசிச்சி செஞ்சி சூடா, ஏதோ கொஞ்சம் குறைஞ்சாலும் இன்கிரிடேண்ட் மாத்தி, ரசித்து சாப்பிடுவதில் சுகம், சுகம்.

ஆண்கள் கடைல வாங்கி, கொஞ்சம் டேஸ்ட் அப்படி, இப்படி இருந்தாலும் அதையே ரசிச்சி சாப்பிடுறது. இது ரசனையா? டேஸ்ட்டா இருக்குன்னு சாப்பிட்டு இருக்கிற டிஸ்ல, ஒரே ஒரு அழுகின வெங்காய பீஸ் அல்லது தக்காளி பீஸ் (இதெல்லாம் ஹோட்டல்ல சாதாரணம்) அவ்வளவுதான், உங்க ரசனை ரிவேர்ஸ் கியர் போட்டுரும்.
\\ஒவ்வொரு ஆணும் தனக்கு விருப்பமான இடத்தை தேடிச்சென்று உண்ணுகின்றனர்\\//சாப்பாட்டில் ரசனை கொண்ட ஆண்கள் க்ரூப்பாக‌ சேர்ந்து ஊர் ஊராக‌ போய் அங்குள்ள‌ ஸ்பெஷல் உணவுகளை ருசித்துவிட்டு அதை ஃபேஸ்புக்கில் பகிர்கிறார்கள்\\
இதெல்லாம் சம்பளம் வாங்கின முதல் இரண்டு நாள் தான் நடுவரே. ஆனா எங்களுக்கு டிஸ் பிடிச்சா செய்முறையே வாங்கிடுவோம். அப்புறம் அடிக்கடி வீட்ல, ரசனை போர் தான். அதும் இல்லாது, இப்பல்லாம் ஹோட்டல்ல நாவிலுள்ள சுவை நரம்பை தூண்டுற குறிப்பிட்ட இன்க்ரீடெண்ட் சேர்க்கிறாங்க. அத எதுல சேர்த்தாலும் சுவை இருக்கிற மாதிரியே இருக்கும். அத கொஞ்சம் சுடு தண்ணில போட்டு, கொஞ்சம் பேப்பர், அவித்த காய் போட்டு சூப்புன்னு குடுத்தாலும் அதையும் ரசிச்சி, குடிச்சி சூப்பர்ன்னு கமெண்ட் குடுப்பாங்க ஆண்கள். அவ்வளவுதான் அவங்க உணவ ரசிக்கிற தன்மை.

அதனால உணவை ரசிச்சி, உண்ரதுல டாப்பு பெண்கள் தான் நடுவரே.

உன்னை போல் பிறரை நேசி.

அன்பு நடுவருக்கும் பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை புரிந்திருக்கும் எங்கள் அன்புத் தோழி, ஆருயிர்த் தலைவி, இன்சொல் அரசி, .... வருக, வருக, வருக! தங்கள் வரவு நல்வரவு ஆகுக!!!

’ENTERING WITH A BIG BANG' என்று சொல்வாங்க,( நாங்க இங்க்லீஷிலும் சொலவடை சொல்வோமாக்கும்). அது போல, சிறப்பு மிக்க இந்த நூறாவது பட்டிமன்றத்தின் நடுவர் ஆக வந்திருக்கும் சீர்மிகு தோழிக்கு வாழ்த்துக்கள்!

உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவது பெண்களே என்ற அணியில் என் வாதங்களை எடுத்து வைக்கிறேன்.

சாப்பிடுவது கொஞ்சமா ரொம்பவா என்பதல்ல விஷயம். அதை எப்படி ரசித்து, ருசித்து சாப்பிடுறாங்க என்பதுதான் மேட்டர்.

பெண்கள் எப்பவுமே மல்டி டாஸ்கிங் செய்யறவங்க. சமையல், ஆஃபிஸ், வேலை என்று எத்தனை இருந்தாலும் அவங்க சாப்பிடுவதை ரசித்துத்தான் சாப்பிடுவாங்க.

எது செய்தாலும் ருசி பார்த்துத்தான் பிறகு பரிமாறுவாங்க. பெர்ஃபெக்‌ஷன் வர்றவரைக்கும் விட மாட்டாங்க. சட்னிக்கு மிளகாய் போடறப்பவே தெரியும், இந்த மிளகாய் காட்டமா இருக்கு, ஒரு மிளகாய் குறைச்சுப் போடணும்னு.

ஆண்களுக்கு சாய்ஸ் கம்மிதான், வீட்டில் பரிமாறுவதை சாப்பிடுவாங்க, டைனிங் டேபிளில் என்ன இருக்கோ அதுதான், அதனால அதுக்கு அவங்க ட்யூன் ஆகிடுவாங்க.

சரியா இருக்கு, சரியாக இல்லைன்னு கமெண்ட்ஸ் சொல்லுவாஙக என்பது நிஜம். சில பேர் கமெண்ட்ஸ் சொல்றதுக்குக் கூட கொஞ்சம் யோசிப்பாங்க.

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்பது பழமொழி. அதுவும் பட்டிமன்றத்தில் விதிகளின்படி நடக்கணுமே.

இருந்தாலும் சொல்லாம இருக்க முடியல. பெரியவங்களே மனைவி சமையலைப் பற்றி, ‘நோ கமெண்ட்ஸ்’னு முடிச்சிக்கறாங்கன்னா பாருங்களேன்:):)(யாரைச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியாது, விடுங்க)

ஆனா, பெண்கள் அப்படியில்ல. அவங்க சாப்பிடுறப்ப, சட்னி கொஞ்சம் உரைக்குதுன்னா, உப்பு பத்தலைன்னு சொல்லி, கொஞ்சமா டேபிள் சால்ட் கலக்கிக்குவாங்க. அல்லது எண்ணெய்/நெய்/தயிர் ஊத்தி அதை சரிபண்ணித்தான் சாப்பிடுவாங்க.

மாவு சரியில்லன்னா, அரிசி/பருப்பு அளவு மாத்துவாங்க அல்லது கடையையே மாத்திடுவாங்க.

ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் சாப்பிட்டா, ரசிச்சு சாப்பிட்டுட்டு, ரெசிபியும் வாங்கிட்டு வருவாங்க.

நேரம் இருக்கோ இல்லையோ, அவங்க சாப்பிடும் ரசனை அற்புதம்தான்.

அவசரமா டிஃபன் பாக்ஸில் உப்புமா கொண்டு போனால், அதன் மேல் கொஞ்சம் சர்க்கரை தூவிக் கொண்டு போவாங்க. இதிலும் நாட்டுச் சக்கரை அல்லது வெள்ளைச் சர்க்கரை என்று விதம் விதமாக காம்பினேஷன் ட்ரை பண்ணுவாங்க.

ஆண்கள் மனதில் சில வகை உணவுகள் என்றால் ட்ரை பண்ணிக் கூட பார்க்க மாட்டாங்க. (கூழ், களி, கொழுக்கட்டை இந்த மாதிரி உணவுகள்)இது எனக்குப் பிடிக்காது என்று முதலிலேயே ஒரு விதமான ப்ரீ கன்சீவ்ட் டெசிஷன் எடுத்துக்குவாங்க.

ஹோட்டலில் சாப்பிடுவது, நண்பர்களுடன் பார்ட்டியில் சாப்பிடுவது, போன்ற பீர் ப்ரஷர் ஆண்களுக்கு அதிகம். அதனால் அவங்க ரசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, மற்றவர்கள் அபிப்ராயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க.

என்னைப் பொருத்தவரை, காலையில் காஃபி அருந்தும்போதே என் ரசனை ஆரம்பமாகி விடும்.

காஃபி குடிக்கும் ஐந்து நிமிஷம் கிட்டத்தட்ட தவம் மாதிரி ஒரு க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு.

நல்ல சூடாக இருக்கணும். சர்க்கரை கரெக்டாக இருக்கணும். குடிக்க ஆரம்பிக்கறப்ப கொதிக்கும். துளித் துளியாக குடிச்சு முடிக்கறப்ப, சூடு பதம் சரியானபடி ஆறியிருக்கும்.

இட்லிக்கு தொட்டுக்க தேங்காய் சட்னின்னா - சட்னியில் நல்லெண்ணெய், அதுவே கத்தரிக்காய் கொத்சுன்னா - இட்லி மேல எண்ணெய், இதுவே தக்காளி சட்னி அல்லது தக்காளி சாம்பார்னா, இட்லி மேலேயும் சட்னி/சாம்பார்லயும் உருக்கின நெய் அரை ஸ்பூன் ஊத்திக்கணும்.

இந்த காம்பினேஷன் இருக்கே அதெல்லாம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன்.

மோர்க்குழம்புன்னா அதுக்கு பொரியல்தான் சரி. கூட்டு செய்ததே கிடையாது. சாம்பார்னா உருளைக் கிழங்கு பொரியல்/அவியல்/கூட்டு எதுவானாலும் மேட்ச்தான்.

ரசம்னா, அப்பளம், கூழ் வடகம், கடலைத் துவையல் இருக்கணும்.

ரசம் சாதத்துக்கு ஃப்ரெஷ் ஆக வாங்கின கத்தரிக்காயும் முருங்கைக்காயும் நறுக்கிப் போட்டு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய் அரைச்சு ஊத்தி, கூட்டு செஞ்சு, தொட்டு சாப்பிட்டா - ஆஹா!

கலந்த சாதம்னா, உருளைக் கிழங்கு சிப்ஸ், பிரியாணிக்கு ரைத்தா, ஃப்ரைட் ரைஸுக்கு பட்டாணி குருமா.

உளுத்தம்பருப்பு சாதத்துக்கு தேங்காய்த் துவையல் அல்லது எள்ளுத் துவையல், இதோட கீரை வதக்கல் சேர்ந்தால் சூப்பர்.

சொதிக்கு இஞ்சிப் பச்சடி, இடியாப்பத்துக்கு தேங்காய்ப் பால்.

நடுவரே, பசிக்குது, சுடச் சுட தோசையும் மிளகாய்ப் பொடியும் ரெடியா இருக்கு. சாப்பிட்டுட்டு வந்து பதிவு போடறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

இன்னது இது இப்படி பட்டிமன்ற இழையை படு பாதளுத்துக்கு தள்ளி இருக்கீங்க? நன்றாகவே இல்லை......

எல்லோரும் சமர்த்தா விவாதம் பண்ண ஓடி வாங்க பார்ப்போம்.......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அதென்னவோ சரி தான் வனி......எனக்கு தெரிந்த நிறைய ஆண்கள் அவர்களின் முதுமை காலத்தில் சர்க்கரை, ப்ரெஷர் அது இது என்று காபிக்கு கூட சர்க்கரை இல்லை தான் குடிக்கிறாங்க......ஒருவேளை முதலிலே வாயை கட்டியிருந்தால் .......

ஏன் நம்ப தோழி சுகி கூட இப்படி தானே கல்யாணத்துக்கு முன்னாடியே எத்தனை குறிப்புகள்......கல்யாணத்துக்கு அப்புறம் தான் அம்மிணி பிசி......

அம்மா சமையல் பத்தி ஞாபக படுத்தினா இனி தீர்ப்பு எதிரணி பக்கம் தான்......ஊருக்கு வந்த போது தோழியை பார்த்தது அப்புறம் பிசி என்று நடுவில் அவரை சந்திக்கவே முடியலை, அப்புறம் ஒரு மாதம் என்னவோ கழித்து சந்தித்த போது சொன்னார் "ஊரில் இருந்து வந்ததுக்கும் இப்பொழுதும் நிறையவே மாற்றம், மின்னுறீங்க லாவி" என்றார், எல்லாம் போஷாக்கான புஷ்டி தான் காரணம் ;)

(முதல் மரியாதை) ராதா சாப்பிடும் மீனை கட்டி தான் என் குழந்தைகளுக்கு மீன் சாப்பிடும் ஆசையை வளர்க்க ட்ரை பண்றேன்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கல்யாணத்துக்கு முன்னாடி தான் நமக்கு போதிக்கராங்களே அப்புறம் எங்கிட்டிருந்து நமக்கு பிடிச்சதை செய்ய......

மேலும் வாங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாருங்கள் பிரேமா......நூறாவது பட்டிமன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

எனக்கு தெரிந்த தோழி தான் சமைத்தால் சாப்பிடவே மாட்டார். அவருக்கு அந்த சமையல் வாடையே பிடிக்காது......வீடு முழுதும் காண்டிலை பொருத்தி வைப்பார். நான் கூட கேட்ப்பேன், நீங்கள் எங்களுடன் சாப்பிடவே மாட்டீர்களா என்றால் வாடை போகட்டும் என்பார்......

ஹோட்டலில் சாப்பிடுவது இப்பொழுதெல்லாம் பேஷன், ஸ்டேடஸ் என்றாகி விட்டது.

அம்மா சமையல் போல் வருமா என்று சொன்னால் கூட பரவாயில்லை.......என் பாட்டி தான் பெஸ்ட் என்று சொல்பவர்களை என்ன சொல்ல......மாமியாரின் கைபக்குவத்தை கூட கஷ்டப்பட்டு வாழ்நாளில் பிடித்து விடலாம், பாட்டியின் சுவை எல்லாம் எட்டாக்கனி தான்......

மேலும் வாங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பெண்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் வீட்டில் அஞ்சரை பெட்டி தான்.......

ஊர் ஊராக சென்று சாபிடுவதில் ஆண்களை மிஞ்சும் பெண்கள் கண்டிப்பாக குறைவு தான்.

கண்டிப்பாக அந்த பாடலை கேட்டுடுவோம்......நடுவர் கொஞ்சம் படத்தில் இப்பொழுதெல்லாம் வீக்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பட்டிமன்றத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அப்படி அவர்கள் சூப்பர் என்று சொல்லி மறுமுறை அதில் மாற்றம் செய்து சொதப்பியதும், எதற்கு இப்படி எக்ஸ்பெரிமென்ட் பண்ணனும், நான் தான் முன்னாடி சமைத்ததே நன்றாக இருந்தது என்று உன்னுடைய விழ பரீட்சைக்கு முற்றிபுள்ளி வைத்தேனே என்பார்கள்.......(எல்லாம் ஊதுபத்தி சுருளாக கண் முன்னே வருகிறது!)

மேலும் வாங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்