பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

அதற்க்கு பெயரே "தின்னி பீதி" அது வி.வி. புறத்தில் இருக்கிறது. எனக்காக அக்கி ரொட்டி, மைசூர் மசாலா தோசை, இட்லி கார சட்னி, ப்ரூட் சாலட் கடைசியாக அந்த பாதாம் பாலை மறக்காதீங்க சரியா?

இருந்தாலும் நீங்க இப்படி திருந்திருபீங்க என்று தெரிந்திருந்தால் எப்படியாவது உங்களுடன் சென்னையில் இருக்கும் போதே சேர்ந்திருப்பேன்.....வாட் டு டூ.......விதி......

சரி சரி அடுத்த முறை வேறு (சென்னையில்) இடத்திற்கு கூட்டிட்டு போகணும் சரியா.....பெங்களூர் என்றால் அது என் முறை சரியா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குழந்தையை சமாதனம் பண்ணிட்டு வந்து திரும்பவும் சாப்பிடலாம் இல்ல.......என்று நான் கேட்கவில்லை......எதிரணி கேட்பாங்கோ.....

அவங்க தூக்கிட்டாலும், இந்த பொடுசுங்க சும்மாவா இருக்கும்.....என்னது நாம் அழுவுறோம் அவள் அங்கே நிம்மதியா இருக்காளா என்று மேலும் அழும்........எல்லாம் அனுபவம் பேசுது......

இருந்தாலும் நம் எல்லோருடைய சொந்த கதையும் சோக கதை தான் :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இதற்க்கு தான் மகாபாரதம் பார்த்துட்டே பதில் போடப்படாது......வெறி ஜாரி.....இப்போ சரியா?

அப்போ இந்த அம்மாக்களை தான் வையணும்......சின்னதிலிருந்தே இப்படி ருசியை சொல்லி சொல்லி வளர்க்கறது...... எங்கம்மாவும் இப்படி தான் கோவில் என்றால் நகர மாட்டோம் என்று, போயிட்டு சரவணா பவனில் டிபன் என்றால் உடனே ரெடி.

நெல்லு சோற்று பாடலை பாடியது பெண் தானே? நீங்க பாடல் ஆசிரியரை சொல்றீங்களா.....நான் அந்த சிச்சுவேஷனை நெனச்சிட்டேன்...

தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைப்போம்.......படத்திலாவது பெண்களுக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட், சூப் என்று கொடுக்காமல் வேறு எதாவது கொடுங்க........நாங்களும் தெரிஞ்சிக்கறோம்......பெண்கள் ரசனை உள்ளவர்களா இல்லையா என்று......கொழப்புராங்கைய்யா.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இப்படி உண்மையை கூறி நடுவரை உங்கள் வசம் இழுக்க முயற்சிக்க கூடாது :(

என்னங்க இப்படி காஞ்சனா வெளியே வருவது மாதிரி சொல்றீங்க.....பயமா இருக்கு......

இதை இதை தான் எதிர்ப்பார்த்தேன்.....சரியா சொல்றாங்க......சிம்பிள் ஆகா இருந்தாலும் சுவைத்து சாப்பிட தெரிந்தவர்கள் பெண்கள் தானாம் கேட்டுக்கோங்க எதிரணியினரே......

சிவாஜி கணேசன் டி.டி.ஆர் வேடத்தில் நடித்த படம். பெயர் ஞாபகம் இல்லை. சரிதாவுடன் நடித்த படம். அவர் அதில் தினமும் ரயிலில் வேலை முடித்து போகும் போது, ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்குவார். அதில் ஒரு நாலு கடலையை தனியே எடுத்து வைப்பார் அது எதுக்கென்றால் பல நேரத்தில் பொட்டலத்தில் உள்ள கடைசி கடலை சொத்த கடலையாகி விட்டால் நாக்குக்கு பிடிக்காது வேறு எதாவது சாபிட்டால் தான் சரி ஆகும் அதற்காக தனியாக எடுத்து வைத்துள்ளேன் என்பார்.

இது வேறையா.....கழுதை சாப்பிடுவதையா நாம் சூப் என்று குடிக்கிறோம்? சிந்திக்க வேண்டிய விஷயம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வணக்கம் நண்பர்களே
திருமணத்திற்கு முன் அம்மா செய்யும் உணவை எதுவும் சொல்லாமல் அப்படியே சாப்பிட்டு பழக்கம் எனக்கு.
திருமணத்திற்கு பின், நான் செய்யும் உணவை என் கணவர் ரசித்து ருசித்து அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து (???!!!) சரி செய்து சாப்பிடுவதை பார்க்கும் போது, ஆண்கள் தான் ரசித்து சாப்பிடுகிறார்கள்.

நூறாவது பட்டிமன்றம் உங்களை சிரம் தாழ்த்தி கைகூப்பி சிகப்பு கம்பளத்தில் வரவேற்று மகிழ்கிறது.

(நாங்களும் சொல்லுவோம்ல.....)

//BIG BANG // விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.....இதற்கான விளக்கம் நேரில் சொல்றேன்.

இந்த பட்டிமன்றத்தின் விதிமுறையை மீறி நான் ஒரு பட்டமளிப்பு விழா எடுக்கிறேன்.......இந்த பொழுதிலிருந்து நீங்கள் "பழமொழி ஆச்சி" என்று அறியப்படுவீர்கள். யாரங்கே.......

இங்கே எனக்கு தெரிந்த தோழி ஒருவரும் அப்படி தான்..... இட்லிக்கு என்றால் அரிசி அதே ப்ராண்ட் தான், உளுந்தை ஒரே கடையில் ஒரே ப்ராண்ட் தான் வாங்குவார், அந்தந்த காய்கறிக்கும் என்ன சேர்க்க வேண்டும் எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும் ஒரு சரியாக சொல்வார். அப்படி தான் ஒரு முறை அவர் தீபாவளிக்கு பாதாம் ஹல்வா செய்தார், அதில் சேர்த்திருந்த பாதாமின் அளவு என்னவோ கப் அளவு தான்......ஆனால் அவருக்கு அந்த கப்பில் எத்தனை பாதாம் இருந்தது அதில் சொத்தை இத்தனை என்பது முதற்கொண்டு சொன்னார். அசந்து விட்டேன்......டெடிகேஷனில் தான் ரசனை உருவாகிறது....

இந்த உப்மா மாட்டர் இருக்கு பாருங்க......நான் அப்படியே சாப்பிடுவேன்......

அந்த காபி குடிக்கும் நேரமிருக்கே அது தான் உலகில் நாம் வாழ்வதற்கும் இப்படி ஆழமாக சிந்திப்பதற்கும் ஆதாராமாக இருக்கிறது என்று என் மனமும் சொல்லுது. இருந்தாலும் உங்களை பார்த்தாலே இப்படி எல்லாம் பேச சொல்லுது என்ன செய்ய....

கேட்டுக்கோங்க தோழிகளை எழுத்துக்கள் அழிந்து போயிருந்தால் அதற்க்கு காரணம் நான் விட்ட ஜொள்ளு தான்.....பின்னே இப்படி சாப்பாடு அதன் காம்பினேஷன் சொல்லி என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர் இந்த வாதத்திற்கு உரியவரே!

ப்ரெஷா வாங்கின முருங்கக்காய்........வேண்டாம்......"DONT PULL WORD FROM MY MOUTH 'S' "

யாரங்க இவரை நாடு கடத்துங்கள்.......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நூறாவது பட்டிமன்றத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!

ஒருவேளை அம்மா நன்றாக சமைப்பார் என்று நினைக்கிறேன் ;)

மேலும் வாங்க......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அறுசுவை அன்பர்களே.......நாளை தானே சுதந்திர தினம்.... அதற்குள்ளே எல்லோரும் கொடி ஏற்ற போயிட்டீங்களா என்ன? வாங்க வாங்க நடுவர் பசியுடன் காத்திருக்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே... அடடே... அவசியம் போயிருவோம் ;) இங்கையும், அங்கையும்.

நடுவரே என்னமோ எதிர் அணி ஆறிப்போன சாப்பாட்டை அவங்க தான் தினம் சாபிடுறதா சொல்றாங்களே... நல்லா யோசிங்க. வீட்டில் இருக்க பெண்கள் அதிகம் தான், அவங்களாவது மதியம் சாதம் மட்டுமாவது சூடா வெச்சு சாப்பிடலாம். காலை உணவை எல்லாரும் கிளம்பின பின் நிதானமா ரசிச்சு ருசிச்சு சாப்பிடலாம் ( நான் பல நாள் அப்படித்தான் 9 மணிக்கு எல்லாருக்கு டாட்டா காட்டிட்டு உட்கார்ந்து 1/2 மணி நேரம் சாப்பிடுவேன்) ஆனா இந்த ஆண்கள் நிலை படு மோசம்... பின்ன? காலையில் நாம கட்டிக்கொடுத்து விட்ட ஆறிப்போன உணவு, ஒழுங்கா கழுவாம போட்டுட்டா இன்னும் வாடையும் ஒரு விதமாகிப்போகும். கொடுமையே... சாரி கடமையேன்னு அதைத்தானே மதியம் சாப்பிடுறாங்க?? அதை எங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிட அவங்க?? பாவம் தானே??

பெண்களை விட ஆண்கள் தான் மதிய உணவு எடுத்து போய் சாப்பிடுறவங்க அதிகம். ஒத்துக்குறீங்களா? வெளிய சாப்பிடுவாங்க தான், அது எனைக்காவது நம்ம கொடுக்கலன்னா, அல்லது வெளிய தங்கி வேலை பார்த்தா. அப்பவும் வீட்டு சாப்பாடு கிடைக்காது, ரசிச்சு சாப்பிட.

இங்க பக்கத்துல ஒரு தமிழ் ஆளுங்க கையேந்திபவன் வெச்சிருக்காங்க. அங்க செய்யும் சிக்கன் வாசம் அந்த சாலை வழியா போகும் போது நம்மை அங்க கொண்டு போய் நிக்க வெச்சுடும் நடுவரே. கீழவே ஒரு எலி அவங்க சிந்துறதை சாப்பிடும்... அதை பார்த்து நான் ரிவர்ஸ் கீர் போட்டுடுவேன். ஆனா பாவம் வேலைக்கு போறவங்க பல ஆண்கள் அந்த இடத்தில் நின்னு சாப்பிடுவாங்க... எலி ஒதுங்குதோ இல்லையோ அதுக்காக இவங்க ஒதுங்க வழி விட்டுட்டு நிப்பாங்க. கலியும் சிக்கன் கறியும் உள்ள எம்புட்டு வேகமா போகும் தெரியுமா? ஆட்டோ காரங்க வண்டியை போட்டுட்டு கட கடன்னு முழுங்கிட்டு சவாரிக்கு ஓடுவாங்க. கடக்காறங்க கடையை போட்டுட்டு வந்திருக்கோம்னு வேக வேகமா ஓடுவாங்க. நின்னு நிதானமா சாப்பிடும் ஆண்கள் இது போல ஃபாஸ்ட் ஃபுட், கையேந்திபவனுக்கு வருவதில்லை நடுவரே. அவசர கதியா பசிக்கு பெரிய உணவகம் போனா காத்திருக்க நேரும், வேகமா முடிச்சுட்டு வேலையை பார்க்கணும்னு தான் பலரும் இப்படி உணவகங்களில் சாப்பிடுறாங்க. இது பெரும்பாலும் ஆண்களே. காரணம் நின்னு நிதானமா ரசிச்சு ருசிச்சு சாப்பிட நேரமின்மை.

வீட்டில் உள்ள பெண் நிச்சயம் இவர்களை விடவும் கொடுத்து வெச்சவங்க தான்.. நிதானமா ஆக்கி நிதானமா நேரம் கிடைக்கும் போது ரசிச்சு சாப்பிடலாம். இன்னைக்கு எல்லாரையும் அனுப்பிட்டு காலையிலயே சூடா லேசா குழைய வெச்ச சாதமும் மொச்சை கொட்டை குழம்பும் (அதுல சுவை கூட்ட ஒரே ஒரு முள்ளு கத்திரிகாய்)... ஆகா ஆகா... எம்புட்டு சுவையா இருந்தது தெரியுமா? நடுவரே... சாப்பிட வாரது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மா நன்றாக‌ சமைப்பார்கள்.
My name is pronounced as zeegan.
நன்றி நடுவர் அவர்க‌ளே

மேலும் சில பதிவுகள்