பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

நடுவரே ஆண்கள், பெண்கள்னு விதியாசமில்லாம‌ எல்லாருமேதான் ரசிச்சு சாப்பிடுவாங்க‌, ஆனா அதிகமா ரசனையா ரசிச்சு சாப்பிடுரது யார்னு பார்த்தீங்கன்னா ஆண்கள்தான்.

//இப்போ ஆண்கள் தான் அதிகமா ஜிம்ல ஓடிக்கிட்டு இருக்காங்க நடுவரே. கொலஸ்ட்ரால், சுகருன்னு ஆயிரம் விஷயத்துக்கு வாயை கட்டி வெச்சிருக்க ஆண்கள் நிறைய பேருங்க.// நடுவரே எதிரணியே உண்மையை ஒத்துக்கிட்டாங்க‌ ஆண்கள்தான் சாப்பிடுவதை ரசிச்சு சாப்பிடறாங்கன்னு! இப்படி ஆண்கள் சின்ன‌ வயசில‌ இருந்தே நாக்குக்கு அடிமையாகி ரசிச்சு அதிகமா சாப்பிட்டுடறதாலதான், ஒரு வய‌சுக்குமேல‌ பிபி, சுகர்னு வந்து வாக்கிங் போறது, ஜிம்ல‌ ஓடுரதுன்னு செய்யறாங்க‌. அவங்க‌ வாயை சில‌ சமயம் கட்டி வெச்சிருக்கிறதெ, ஒரு காலத்தில‌ அதை ரொம்ப‌ அவிழ்த்து விட்டிருப்பாங்க‌ அதனாலதான்!.....:)))

ஒரு வீட்டில‌ ஒரு பெண்மணி ரசனையோட‌ சாப்பிடறது பெரிய விஷயமில்லைங்க‌, அத்தனை ஆண்களுமே ரசைனையா சாப்பிடறதுதானே பெரிய‌ விஷயம்! எங்க‌ வீடே அதற்கு பெரிய‌ உதாரணம். எங்க‌ தாத்தாவுக்கு சாதாரண‌ பருப்புகுழம்பே அவரு சொல்றமாதிரிதான் இருக்கனும், இல்லைன்னா சாப்பிட‌மாட்டார்.பழம் சாதமோ, பருப்பு சாதமோ அதுல‌ நெய் இல்லைன்னா அவ்வளவுதான் பூகம்பம்தான் வீட்டில! அடுத்தது எங்க‌ அப்பா, அவருக்கு நீங்க‌ எத்தனை சாம்பார் வெச்சிருந்தாலும் இட்லிக்கு சட்னிதான் இருக்கனும், இட்லி கொதிக்க‌ கொதிக்க‌ இருக்கனும், இல்லைனா சரியாவே சாப்பிடமாட்டார்.ஒரு கடலைப்பொரியகூட‌ எப்படி சாப்பிட்டா டேஸ்ட்டா இருக்குமோ அப்படிதான் சாப்பிடனும் அவருக்கு, பொரியை வெண்ணெயும், தட்டிப்போட்ட‌ பூண்டும் சேர்த்து வறுத்தாதான் பிடிக்கும்,செய்யலைன்னா கவலைப்படாம‌ அவரே போய் செய்துக்குவார்.

எங்க‌ அத்தைங்க‌, அம்மா, பெரியம்மா எல்லாம் வய‌சாயிடுச்சுன்னு, ஒரு வயசுக்குமேல‌ நான்வெஜ் சாப்பிடுறதையே விட்டுட்டாங்க‌. ஆனா அவ‌ங்க‌ கணவர்மார்கள் எல்லாம், நாங்க‌ சில‌ மாதம் வீட்டில் நான்வெஜ் செய்யவும் மாட்டோம் சாப்பிடவும் மாட்டோம்(விரத‌ நாட்கள்)அந்த‌ சமயத்திலகூட‌ எங்களால‌ நான்வெஜ் சாப்பிடாம‌ இருக்கமுடியாதுன்னு ஹோட்டலுக்கு போய்டுவாங்க‌.

அடுத்து எங்க‌ வீட்டுக்கு பக்கத்தில‌ ஒருத்தங்க‌ இருந்தாங்க‌, அந்த‌ மனைவி சூப்பரா ரசிச்சு சமைப்பாங்க‌, அவங்க‌ ரசிச்சு சாப்பிட்டு நான் ஒரு நாளும் பார்த்ததில்லைங்க‌! அவங்க‌ அப்படி சமைக்கிறதே அவரோட‌ கணவர் பயங்கர‌ சாப்பாட்டு பிரியர்ங்கறதாலதான். அவருக்கு எதெது எந்தெந்த‌ டேஸ்ட்ல‌ இருக்கனுமோ அப்படி இருந்தாதான் பிடிக்கும்.பெங்களூர்ல‌ எந்தெந்த‌ ஹோட்டல்ல‌ எந்த‌ சாப்பாடு சூப்பரா இருக்கும்னு அத்துபடி அவருக்கு. ஆனா நல்ல‌ மனுசங்க‌ அவரு ரசிச்சு சாப்பிட்டுவிட்டு பாராட்டவும் செஞ்சுடுவார், என் வீட்டுக்காரம்மா இப்படி சமைச்சாங்கன்னா நான் ஹோட்டல் பக்கமே போகவேண்டி இருக்காதுன்னுவார்!

இன்னொரு ஃப்ரண்ட் இருக்காங்க‌, அவங்க‌ கணவர் ரசனைக் கேத்தமாதிரிதான் அவங்க‌ வீட்டு சமயலே இருக்கும். அவர்களிடம் நீங்க‌ வெச்ச‌ முட்டைகுழம்பு நல்லாயிருக்குன்னு சொன்னீங்கன்னா, உடனே சொல்வாங்க‌, இப்படி முட்டை குழம்பு வெச்சாதாங்க‌ என் கணவர் இன்னும் 2 சப்பாத்தி சேர்த்து சாப்பிடுவார்னு.

சரி எங்க‌ வீட்டுக்கதைக்கு வருவோம், என் கணவர் இருக்காரே நான் என்ன‌ சமச்சு குடுத்தாலும் குறை சொல்லாம‌ சாப்பிட்டுவிடுவார். என்னடா இவ்வளவு நல்ல‌ மனுசனான்னுதானே யோசீக்கறீங்க‌! அதெல்லாம் இப்பத்த‌ கதைங்க‌. அவரு சின்ன‌ வய‌சில‌ இருந்து, இன்னைக்கு வரைக்கும் அவரு சொந்தக்கார‌ங்க‌ யார் வீட்டில‌ எல்லாம் சாப்பிட்டு இருக்காரோ, அவர்கள் ஒவ்வொருத்தரும் என்ன‌ ஸ்பெஷலா செய்வாங்க‌, அதோட‌ டேஸ்ட் எப்படி இருக்கும்னு அவருக்கு அத்துபடி!
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று சொல்வாருங்க‌! என் நிலமைய‌ கொஞ்சம் நினைச்சு பாருங்க‌.... :)). என் கணவரிடம் ஒரு வித்தியாசமான‌ பழக்கம் இருக்குங்க‌, அவரு எதையாவது ரசிச்சு சாப்பிட்டார்னா, அந்த‌ டேஸ்ட் அவரு நாக்குலயே கொஞ்ச‌ நேரத்துக்கு இருக்கனுமாம், வேற‌ ஏதாவது சாப்பிட்டு அந்த‌ டேஸ்ட் போயிடுச்சுன்னு வைங்க‌, உடனே சொல்லுவார் என் நாக்கே கெட்டுப்போயிடுச்சுன்னுவார், அவ்வளவு ரசனை ! எனக்கு காஃபின்னா ஏதோ சூடா இருந்தா போதும், அவருக்கு நுரையோட‌ இருந்தாதான் காஃபின்னே ஒத்துக்குவார்.

ஒருத்தர‌ சுத்தி சாப்பிடுவதில் ரசனையுள்ள‌ இத்தனை ஆண்கள் இருந்தா, பாவம் அவங்களும்தான் என்ன‌ பன்னுவாங்க‌ சொல்லுங்க‌ நடுவரே? பட்டிமன்றத்துல‌ போய்தானே முறையிடனும்.....

நடுவரே... எங்க வீட்டுக்கதை உங்களுக்கு தெரியாததில்லை... என் மகனுக்கு எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். மகளிடம் அப்படி இல்லைங்க. என் சமையலுக்கு என் அம்மா சமையலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கிற அளவு ரசனை உள்ள ஆளு. நெய் கூட அவளுக்கு அவளுக்கு பிடிச்ச அளவில் தான் இருக்கணும். பாலில் சர்க்கரை... அவளுக்கு மிதமா இருக்கணும், கூட இருந்தா குடிக்க மாட்டா, குறைஞ்சாலும் தொட மாட்டா. இவளை விட ரசனை என் பிள்ளைக்கு இல்லைங்க.

அட என் வீட்டில் விரதமென ஒரு மேட்டரே கிடையாது... என்னால் தான் ;) எனக்கு விரதம் என நினைவு வெச்சு அசைவத்தை தவிற்க இயலாது. சாப்பிட்டுருவேன். இவரு உன்னால சிக்கனை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது, விரதமெல்லாம் உனக்கு செட் ஆகாதுன்னு விட்டுட்டார் :P

என்னவரிடம் நீங்க எவ்வளவு ருசியா சமைச்சாலும் ஒரு வாய் ருசி பார்ப்பதோடு சரி. அதிகம் போகாது. நான் பாயாசம் எல்லாம் செய்தா மற்றவர்களுக்காக காத்திருக்கவே மாட்டேன்... சூடா கப்பில் போட்டு உட்கார்ந்து ரசிச்சு ஸ்பூனை கூட சப்பி சாப்பிடுவேன் ;)

அட... என் தோழி பள்ளி படிக்கும் போது சொல்லிக்கொடுத்தது, இன்னைக்கும் எனக்கு பிடிச்ச காம்பினேஷன். திருநெல்வேலி பக்கம் கருப்பட்டி காபி, இல்ல சாதாரண காபி, டீ எதுவா இருந்தாலும் அதுல முறுக்கு அல்லது மிக்சர் போன்றவை உள்ளே போட்டு குடிப்பாங்க. அது ஒரு தனி சுவைங்க. எனக்கு பிடிச்சு போச்சு அந்த சுவை. வீட்டில் முறுக்கோ மிக்சரோ இருந்தா அந்த தோழி நினைவும் வரும், அந்த சுவையும் நினைவுக்கு வரும். மிஸ் பண்ணாம போட்டுருவேன் ;) ஒரு வாய் காவி, நடுவில் சிக்கும் அந்த காரசார முறுக்கு அல்லது மிக்சர்... அட போங்கங்க. ரசிச்சுப்பாருங்க, தெரியும். எவ்வளவு ரசிச்சு சாப்பிட்டிருந்தா இன்னைக்கும் அந்த சுவையை நினைவில் வெச்சிருப்பேன்?? நீங்களே சொல்லுங்க.

அட... தென்காசியில் கோவிலுக்கு எதிரே ஒரு சின்ன கடையில் சுடச்சுட திருநெல்வேலி அல்வா ஃப்ரெஷ் வாழை இலையில் நெய் ஒழுக தருவாங்க. ஆண்கள் அதை வாங்கி லபக்குன்னு முழுங்கிட்டு போவாங்க. ஆனா எனக்கு கையில் பிடிக்க முடியாம பிடிச்சு சின்ன சின்ன பீசா கிள்ளி வாயில் போட்டு, இதமான சூட்டில் அது வழுக்கிக்கொண்டு தொண்டைக்குழியில் இறங்குறதை ரசிச்சு சாப்பிடுவேன்... ஒவ்வொரு வாய்க்கும் கிள்ளிப்போட்ட இரண்டு விரலையும் அதுல ஒட்டிய நெய்காக ஒரு சப்பு. ம்ம்... ஆகா!!! போங்கப்பா... ரசிக்கிறதுன்னா இதுக்கு பேரு தான் ரசிக்குறது... ராஜ்கிரண் மாதிரி அள்ளி வாயில் தினிக்கிறது இல்லை.

நடுவரே... திருநெல்வேயில் இருந்து ஃப்ரெஷா அல்வா வந்திருக்கு. சூடா தான் இல்ல :( பரவாயில்லை... என்ன இருந்தாலும் அல்வா அல்வா தான்... சுவை அலாதி தான். வாங்கோ உங்களுக்கும் ஒரு கிலோ அல்வா தரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

/வீட்டில் இருக்க பெண்கள் அதிகம் தான்/
இக்காலத்தில் வீட்டில் இருந்தாலும் வேலை செய்து சம்பாதிக்கும் பெண்கள் தான் அதிகம். நான்கில் மூன்று பெண்கள் ஆரின சாப்பட்டைத்தான் சாப்பிடுகிறோம்.

/நடுவரே ஆண்கள், பெண்கள்னு விதியாசமில்லாம‌ எல்லாருமேதான் ரசிச்சு சாப்பிடுவாங்க‌, ஆனா அதிகமா ரசனையா ரசிச்சு சாப்பிடுரது யார்னு பார்த்தீங்கன்னா ஆண்கள்தான்./
இதுதான் உன்மை நடுவரே.

இங்கு ஒரு தோழி ஒரே ஒரு பெண்ணை,அவர் சார்ந்த விஷயங்களையும் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான பெண்களின் இன்றைய நிலை என்ன என்று சிந்திக்க வேண்டும்.

/வீட்ல உள்ளவங்க வெளில போயிருக்காங்க, முழுசா மூணு,நாலு நாள் ரெஸ்ட். அப்பதாங்க, நமக்குள்ள உள்ள சாப்பாட்டு ரசிகை வெளில வருவாங்க. சிம்பிள் டிஸ். ஆனா இதுவரைக்கும் ட்ரை பண்ணாத டேஸ்ட்ல செஞ்சி ரசிச்சி சாப்பிடுறது நாங்கதாங்க. மூணே தோச, ஆனா மூணு வெரைட்டி. ஒரு கப் காபி/டீ, இன்னொரு கை ஆலு பரோட்டா, இரண்டாவது பரோட்டாக்கு, இன்கிரிடேண்டும், டேஸ்டும் அதிகமாகும். மூணாவதுக்கு இன்னும் அதிகம்./
எந்தப்பெண்னுக்கு மனசு வரும் வீட்டிருப்பவர்களை விட்டு விட்டு சாப்பிட?

சிறு குடும்பம் என்றால் சரி.நாமே சமைத்து சாப்பிடலாம். எங்களைப்போல் பெரிய குடும்பம் என்றால், சமைத்தவுடன் சாப்பிட முடியவே முடியாது. அந்த எண்ணெய் வாசனையை நினைத்தாலே, அப்ப்ப்ப்பா! எப்படி ரசித்து சாப்பிட முடியும்.

/ஆனா, பெண்கள் அப்படியில்ல. அவங்க சாப்பிடுறப்ப, சட்னி கொஞ்சம் உரைக்குதுன்னா, உப்பு பத்தலைன்னு சொல்லி, கொஞ்சமா டேபிள் சால்ட் கலக்கிக்குவாங்க. அல்லது எண்ணெய்/நெய்/தயிர் ஊத்தி அதை சரிபண்ணித்தான் சாப்பிடுவாங்க./
இப்படித்தான் என் அம்மா தன் சமையலில் ரசம் வைக்கும்போது அதில் உப்பு அதிகமாகிவிட்டால் சிறிது சுடு நீர் கலந்து வைத்துவிடுவார்கள். என் தந்தையோ சாப்பிட்ட அடுத்த நொடியே 'சுடுதண்ணி கலந்துட்ட போலனு' கண்டுபிடித்துவிடுவார். இப்பொழுது சொல்லுங்க நடுவரே, சுடுதண்ணி கலக்கறது ரசனையா? அதை கண்டுபிடிக்கறது ரசனையா?

No pains,No gains

ANANTHAGOWRI.G

நடுவருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

ஆண்களிடம் கான்சட்ரேஷனே இருக்காது சாப்பிடும்போது. பக்கத்துல அடிச்சிட்டிருக்கும் மொபைல், ஆஃபிஸில் கவனிக்க வேண்டிய அசைன்மெண்ட், வண்டிக்கு பெட்ரோல் போட்டாச்சா.. இப்படி பரபரப்பா இருப்பாங்க(அதாவது அப்படி இருக்கிற மாதிரி காமிச்சுக்குவாங்க).

எங்க அம்மா சமையல் மாதிரி இல்ல அப்படின்னு சொல்லும் ஆண்கள்கிட்ட கேட்டுப் பாருங்க, ஒரு நாளாவது அவங்க அம்மாகிட்ட மனசு விட்டு பாராட்டியிருப்பாங்களான்னு?!

எங்கே?! ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டிருந்தாத்தானே பாராட்டத் தோணும், அதாவது எதைப் பாராட்டணும், எப்படிப் பாராட்டணும்னு தெரியும்.

அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க ராஜா, அதனால விமரிசனம் பண்ண எல்லா உரிமையும் உண்டு. அதாவது கேலி, கிண்டல்... அம்புட்டுதான். மத்தபடி ரசனையாவது,ஒண்ணாவது.

பெண்கள் பிஸியாக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பாங்க.

வீட்டு சாப்பாடு மட்டுமில்லை, வெளியில் ஹோட்டலில் சாப்பிடும் சாப்பாட்டிலும் கூட பெண்கள் அப்படித்தான்.

ஏற்கனவே சொன்ன மாதிரி, ஆண்கள் செலக்ட் செய்யும் ஹோட்டல் விசிட், அவங்க நண்பர்கள் கருத்துப்படிதான் அனேகமாக.

அவங்களைப் பொறுத்த வரைக்கும் வெளியில் சாப்பிடும் இடங்கள் என்பது ஈட்டிங் பாயிண்ட் இல்ல, டாப்பிங் பாயிண்ட்!

பெண்களுக்கு வெளியில் சாப்பிடுவது முக்கியமான அவுட்டிங். அவங்க பெரிய ஹோட்டல், சின்ன ஹோட்டல் என்பதெல்ல்லாம் விட, அங்கே டேஸ்ட் எப்படி இருக்கும், முக்கியமாக ஆம்பியன்ஸ் எப்படி இருக்கும் என்பதில் எல்லாம் கருத்தாக இருப்பாங்க.

சுற்றுப்புறம், சூழ்நிலை என்பது சாப்பிடும் ரசனையை அதிகரிக்கும் ஒரு விஷயம்தானே.

ரொம்ப ஃபேமஸ் ஆன ஹோட்டல்களில், வெளியே சேர் போட்டு, காத்துகிட்டு இருப்பாங்க. நாம சாப்பிடுறப்ப, சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் சாப்பிடு என்று யாரோ குச்சி வச்சு விரட்டற மாதிரி ஒரு ஃபீலிங் வரும். அப்ப எப்படி ரசித்து சாப்பிட முடியும்.

அதே சமயம், அதே ஹோட்டல்களில் பீக் அவர் இல்லாம, கொஞ்சம் சீக்கிரமா போனா, நிதானமாக ரசிச்சு சாப்பிடலாம்.

இது தவிர, ஊர்ல, நாட்ல எங்க எந்த ஹோட்டல்ல சாப்பாடு சூப்பராக இருக்கும்னு பி.ஹெச்.டி. வாங்கற அளவுக்கு நமக்கு விஷயம் தெரியுமே.

இந்த ஹோட்டல் விஷயங்களில் நாமெல்லாம் எவ்வளவு ஆராய்ச்சி பண்ணி இருக்கோம், நம்ம ரசனையெல்லாம் எப்படி என்பதை நமது இளைய தலைமுறை(புதிய தோழிகளுக்கு) தெரியணும்ங்கறதுக்காக, நாம இந்தத் தலைப்பில் பேசிய இழை லிங்க் கீழே குடுத்திருக்கேன்.

http://www.arusuvai.com/tamil/node/19111(

நீங்க துவங்கிய இழைதான் நடுவரே, நாமெல்லாம் நாட்டுக்குத் தேவையான நல்ல விஷயங்களைப் பத்தி, எப்படி விலாவாரியா டிஸ்கஸ் பண்ணியிருக்கோம் பாருங்க)

ப்ப்ப்பா, புல்லரிக்குதுப்பா! (இதை விஜய சேதுபதி வாய்ஸ்ல படிங்க)

http://www.arusuvai.com/tamil/node/15101

இந்த இழையையும் பாத்துடுங்க.

பெண்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல, ஹோட்டல் சாப்பாட்டிலும் எவ்வளவு ரசனையோடு, ரசித்து ருசித்து, சாப்பிட்டிருக்கோம்னு தெரியும்!

அன்புடன்

சீதாலஷ்மி

சதம் அடித்து இருக்கும் இந்த பட்டிமன்றத்தில் முதன்முதலாக என் கருத்தை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் நடுவர் அவர்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும். உணவை ருசித்து ரசித்து சாப்பிடுபவர்கள் கட்டாயமாக ஆண்களே. அதுவும் விதவிதமாக சாப்பிடும் ஆண்களுக்கும் சமைக்க தெரிந்த ஆண்களுக்கும் ருசியாக சமைத்து கொடுத்து அவர்களிடம் பாராட்டை பெற்றால் அதைவிட பெரிய சந்தோஷம் வேரில்லை என் ஓட்டு ஆண்களுக்கே.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

காலையில் அவசரம் அவசரமாக கொஞ்சம் சமைச்சி கட்டி கொடுத்துட்டு பின்பு அவர்களை எல்லாம் பேக் செய்து அனுப்பிவிட்டு நிம்மதியாய் அந்த காபி செய்தி தாள்.....சொர்க்கம்....

மதியம் சுடு சாதம் வைத்து அதில் கொஞ்சூண்டு சாம்பார் (பின்னே எவ்வளவு வைத்தாலும் சாதம் கட்டினால் தீர்ந்து தானே போகும்!) ஊற்றி....ஆஹா அருமை......ககபோ....

உங்கள் வீடு சோபாவில் உட்கார்ந்திருப்பவர் இந்த கையேந்தி பவன் எலியாக இருக்குமோ.....நீங்கள் அவரை பிடிக்காது என்பதால் பழி வாங்க வந்திருப்பார்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

இப்பொழுது தெரிந்தது......உங்கள் "ஆங்கில பெயர்" கொண்டு என்னால் சரியாக கணிக்க முடியவில்லை :(

வாதங்களுடன் மேலும் வாங்க......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

இது தான் ஜெனரேஷன் காப் என்று சொல்றாங்களோ......பாருங்கள் உங்கள் தாத்தா உணவு ருசிக்கவில்லை என்றால் கொந்தளிப்பார், அப்பா தானே பக்குவத்துக்கு செய்துக் கொள்வார், இந்த காலத்தவர் எப்படி என்று நான் சொல்லவேண்டாம் தானே?

எங்கள் வீட்டிலும் என் தாத்தாவிற்கு இட்லி பூ மாதிரி இருக்கணும் இல்லையென்றால் தட்டு பறக்கும், இட்லி வீசிஎரியப்படும்.

என்னங்க இப்படி சமைச்சா போக மாட்டேன்பார் என்றும் சொல்றீங்க, எல்லா ஹோட்டலும் அத்துப்படினும் சொல்றீங்க, சரி இப்படி இருக்குமோ.....சண்டை இல்லை ஊருக்கு போயிருக்கும் போது தெரிந்து வைத்திருப்பார்....

என் தோழி ஒருவருக்கு கல்யாணத்திற்கு முன்னாடி சமையலே தெரியாது, அது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா......என்னது சமையல் தெரியாதது நல்ல விஷயமா எப்படி இருக்க முடியும்னு நீங்க கேட்பது கேக்குது......கல்யாணத்துக்கு பிறகு அவங்க கணவர் தான் சொல்லி தந்தார் அதனால் அவங்க கணவருக்கு ஏற்ற மாதிரி ருசியோ முறையையோ மாற்ற தேவையில்லை, என்னை மாதிரி:(

உங்க வீட்டுக்காரர் பிழைக்க தெரிந்த மனிதர்.......யார் என்ன "நன்றாக செய்வாங்க" என்று பட்டியலிட தெரிந்தவர் வீட்டில் எதுவுமே சொல்ல மாட்டார் என்றால் ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தெரியும் தெரியும், தாய் எட்டடி பாய்ந்தால் பாட்டியிடம் வளர்ந்த குட்டி பதினாறு அடி அல்லவா பாயும்?

இந்த காபியில் முறுக்கு மிச்சர் நீங்களுமா வனி ........முடியலை.......வேணாம் அழுதுருவேன் :(

நமக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரில் இருக்கும் இருட்டுக்கடை தான் பேவரைட்.......

இப்பொழுது கூட சாப்பிட்டேன், தெரிந்தவர்கள் ஊரில் இருந்து வந்தவர்கள் கொண்டு வந்தார்கள், யாரையும் விடுவதாக இல்லை, அஸ்கு புஸ்கு, நானும் சாபிட்டேனாகும், எங்களுக்கு அல்வா கல்யாணதப்பவே கொடுத்திட்டாங்க.......இங்கே யார் கொடுத்தாலும் சமாளிசிக்குவேன் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

அதென்னவோ வீட்டில் இருப்பவரை விட்டுவிட்டு கண்டிப்பாக சாப்பிட மனம் ஒப்பதான் மறுக்கிறது.

கண்டிப்பாக கண்டுபிடிப்பதும் ரசனை தான்......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்