மட்டன் பிரியாணி

தேதி: August 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

ஊற வைக்க:
மட்டன் - அரை கிலோ
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
தயிர் - 2 மேசைக்கரண்டி
வறுத்து பொடிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
மிளகு - 4
சோம்பு - ஒரு சிட்டிகை
சீரகம் - ஒரு சிட்டிகை
நட்சத்திர மொக்கு - சிறு துண்டு
ஜாதிக்காய் - கால் பாகம்
ஜாதிபத்திரி - கால் பாகம்
ஏலக்காய் - ஒன்று
கறிவேப்பிலை - 5 இலைகள்
அரைக்க:
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பற்கள்
புதினா - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - 2
பிரியாணிக்கு:
பாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 2 கப்
தயிர் - 3 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - ஒரு கப்
உப்பு
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் + தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை - பாதி
தாளிக்க:
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் + நெய் - 5 மேசைக்கரண்டி


 

மட்டனுடன் ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். மட்டன் ஊறியதும் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்த பிறகு மட்டனைத் தனியாகவும், அதிலிருக்கும் தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து வைக்கவும். அரிசி ஊற வைத்த தண்ணீரையும் தனியாக எடுத்து வைக்கவும்.
வறுத்து பொடிக்க வேண்டியவற்றை லேசான தீயில் வைத்து (தீய்ந்து விடாமல்) வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர, மற்ற பொருட்களை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).
அத்துடன் வெங்காயத்தையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
வதங்கியதும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
அத்துடன் வேக வைத்த மட்டனைச் சேர்த்து, மசாலா நன்றாக மட்டனுடன் சேரும்படி சில நிமிடங்கள் பிரட்டிவிடவும்.
நன்கு பிரட்டிவிட்டு ஒரு கப் தேங்காய் பாலுடன், மட்டன் வேக வைத்தத் தண்ணீர் மற்றும் அரிசி ஊற வைத்த தண்ணீர் சேர்த்து, தேவையெனில் மேலும் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். (சீரகச் சம்பா அரிசி என்றால் 1:2 என்ற அளவிலும், பாசுமதி அரிசி என்றால் 1:1 1/2 என்ற அளவிலும் சேர்த்தால் போதும்). கொதி வந்ததும் அரிசி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வேகவிடவும். சிறு தீயில் வைத்து பிரியாணி முக்கால் பதம் வெந்ததும் வறுத்து பொடித்த மசாலா தூவி மூடி தம்மில் போடவும். கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான மட்டன் பிரியாணி தயார்.

பிரியாணிக்கு வதக்கும் போதே கரம் மசாலா பொடி சேர்ப்பதைவிட, கடைசியாகத் தூவுவது தான் நல்ல வாசம் தரும்.

எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கக் கூடாது. அதனால் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

தேங்காய் பால் சேர்ப்பது உங்கள் விருப்பமே. தேங்காய் பால் சேர்க்காமலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எச்சில் ஊற வைக்கிறிங்க . கொஞ்சம் வேலைதான் கூட ஆகுமோ. . பொறுமையா முயற்சி செய்யறேன். கலக்கல்

Be simple be sample

கேக்ஸ் & குக்கீஸ் சீசன் முடிந்து இப்ப‌ பிரியாணி சீசனா? கலக்குறீங்க‌ வனி.
அப்படியே செய்யறதெல்லாம் ஒரு பார்ஸல் அனுப்பிடுங்க‌ :‍‍-))

கலக்குறீங்க‌ வனிதா. வனிதா ஈஸ் பேக் (பேக்கு இல்ல‌ back).

அது என்ன‌ கடைசி படத்துல‌ மட்டன் பிரியானில‌ மட்டன் பீஸ் இல்லாம‌ முட்ட‌ பீஸ் இருக்கு?

இந்த‌ ஹோட்டல்ல வெறும் கேக் அன்ட் குக்கீஸ் மட்டும் எவ்ளோ நாளா ஓடுச்சி. கார‌ சாரம் இல்லாம‌. எவ்ளோ நாள் ஆச்சி. இப்போ தான் ஹோட்டல் பிரியாணியோட‌ கலை கட்டுது.

பாஸ்கின் ராபின்ஸ் இப்போ தலப்பாகட்டி ஆகிடுச்சி.

இத‌ இத‌ இத‌ தான் நாங்க‌ எதிர் பார்த்தோம்.

எல்லாம் சில‌ காலம்.....

வனி மட்டன் பிரியாணி பார்க்கவே சாப்பிட தூண்டுது. இது உங்கள் மற்றொரு அருமையான குறிப்பு. படங்கள் ரொம்ப அருமை.
எனக்கு இது புதிய தகவல் நன்றி,
//பிரியாணிக்கு வதக்கும் போதே கரம் மசாலா பொடி சேர்ப்பதைவிட, கடைசியாகத் தூவுவது தான் நல்ல வாசம் தரும்.

nalla kurippu. Valthukkal.. Idhai cookeril seiyya evvalavu whistle vida vendum?

Pls tell me Muttonudan oora vaithathai cookerla evaalavu whistle vidanum.

Akka pls tell me how much whistle for Mutton

Akka pls tell me how much whistle for Mutton

Sorryma.. ippo dhaan paarkuren. 1 whistle vittu sim'la 10 nimisham vainga. Konjam muthalaa therinjaa 15 nimisham. Podhum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ்ஸ்... வேலை கூடன்னாலும் எல்லாம் கையால் செய்யும் மசாலா என்பதால் சுவையாக‌ இருக்கும் ரேவ்ஸ் :)

அனு... பெங்களூர் வந்தா சூடா செய்தே கொடுப்போம்ல‌ ;) சீசன் அடிக்கடி மாறுமாக்கும்.

பால நாயகி... மிக்க‌ நன்றி :) மட்டன் நான் எப்போதும் சின்ன‌ பீஸா தான் போடுறது, அதனால் சாப்பாட்டு உள்ள‌ ஒளிச்சு வெச்சிருக்கேன் ;) //பாஸ்கின் ராபின்ஸ் இப்போ தலப்பாகட்டி ஆகிடுச்சி.// =‍ என்ன‌ அருமையான‌ உதாரணம்!! ஐ லைக் இட்.

பாரவதி... ரொம்ப‌ நாள் ஆச்சு உங்க‌ பதிவு பார்த்து :) நலமா? கடைசியா சேர்த்து பாருங்க‌... வித்தியாசம் நல்லா தெரியும். மிக்க‌ நன்றி.

மெர்சி... மிக்க‌ நன்றி :) குக்கரில் நான் விசில் விடுவதில்லை. அரிசி சேர்த்து கொதி வந்ததும், சிம்மில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

மைதிலி... செய்துட்டீங்களா?? எப்படி வந்தது? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

madam... I am going to prepare the Mutton Briyani Tomorrow... I took the print out of your tips... thanks madam...

அட அட அட செம பிரியாணி வனி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

I try this receipe which comes very taste and serve more than 15 persons. They all are told very taste.This is all for Vanitha madam Thanks for your super receipe.

தாஸ் ப்ரகாஷ்... செய்தாயிற்றா? எப்படி வந்தது?

சுவா... மிக்க‌ நன்றி :)

ஜார்ஜ்.. செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியாணி அருமையாக வந்தது... நீர் அளவு தான் சரி வரல... டிப்ஸ் சீக்கிரம் கொடுங்க

நீர் அளவா இல்லை வேறு எதாவதான்னு டிப்ஸ் வந்ததும் புரியும் ;) செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி பிரியா. வருசையா நிறைய‌ குறிப்புகள் செய்து படங்காட்டி அசத்துறீங்க‌, மகிழ்ச்சியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தமுறை படம் எடுக்க முடியல... :(

Paravalla... next time paarthukkalaam :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா