நூடுல்ஸ் கட்லெட்

தேதி: August 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

மேகி நூடுல்ஸ் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - கால் கப்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 2
புதினா, மல்லித் தழை - கால் கைப்பிடி அளவு
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள - அரை தேக்கரண்டி
முட்டை - ஒன்று
ப்ரெட் க்ரம்ஸ் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைக்கவும். பச்சை பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் பட்டாணி, தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸுடன் மசித்த உருளைக்கிழங்கு, வதக்கிய பட்டாணி கலவை மற்றும் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் மல்லித் தழை ஆகியவற்றைப் போட்டுக் கொள்ளவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்றாகப் பிசையவும்.
முட்டையை நன்கு அடித்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். ப்ரெட் க்ரம்ஸை தட்டில் எடுத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள கலவையை கட்லெட்டுகளாகத் தட்டி முட்டையில் தோய்த்தெடுத்து, ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கட்லெட்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். (எண்ணெயில் பொரிக்க விரும்பாதவர்கள் தோசை கல்லில் போட்டு சுட்டெடுக்கலாம்).
சுவையான நூடுல்ஸ் கட்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதுவரை நூடில்ஸ் ஆம்லட் தான் வித விதமா ட்ரை பண்ணிருக்கேன், கட்லட் செய்துருவோம் சீக்கிரம் :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரப்பு. கலக்குறீங்க‌. நான் தோசை கல்லில் வேக‌ வைத்து செய்து பார்க்கிறேன். உங்க‌ கட்லெட் சூப்பரா வந்து இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

வாணி நேத்து ஈவ்னிங் ஸ்னாக் உங்க‌ கட்லட் தான். நான் நீங்க‌ சொன்ன‌ காய்களுடன் கேரட், ஸ்வீட் கார்ன் சேர்த்து செய்தேன். நான்காம் வகுப்பு படிக்கும் என் மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாள். தினமும் செய்ங்கம்மா என்றாள். அறுசுவைல‌ ஒரு ஆன்டியோட‌ ரெசிபி பாத்து செஞ்சேன் என்றேன். அந்த‌ ஆன்டிக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்கம்மா என்று சொன்னாள்.
குறிப்புக்கு நன்றிங்க‌.

anbe sivam

அன்பு வாணி,

நூடுல்ஸும் காய்களும் சேர்ந்து, ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அவசியம் செய்து பாருங்க வனி, நல்லா இருக்கும், வருகைக்கும் பதிவிற்க்கும் நன்றி

தோசை கல்லிலும் நல்லா வரும் பாலநாயகி. உங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி

செய்துப் பார்த்து பின்னூட்டமளித்தமைக்கு நன்றி. நன்றி தெரிவித்த உங்களுக்கும்,மகளுக்கும் எனது பாராட்டுக்களும், நன்றிகளும். மகளுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி

நன்றி சீதா மேடம்