மூச்சுபயிற்சி @ பிராணயாமா யோகா

மூச்சுபயிற்சி@ பிராணயாமா யோகா பற்றி தெரிந்தவர்கள்
அதை எப்படி வீட்டில் முறைப்படி செய்வது என‌ கொஞ்சம் விளக்கமாக‌ சொல்லுங்கள்..........

டென்சன் குறையவும், மன‌சு ரிலாக்ஸாக‌ இருக்கவும் இது ரொம்ப‌ அவசியம் என‌ சொல்கிறார்கள்,

அதை முறைப்படி செய்ய‌ விரும்புகிறேன்..........

குரு இல்லாத‌ வித்தை குருட்டு வித்தைன்னு சொல்லுவாங்க‌. முதலில் தகுந்த‌ யோகா வகுப்புக்கு சென்று கற்ற‌ பின் பயிற்சி செய்யுங்கள்.
மூச்சுப் பயிற்சிக்கு குரு கட்டாயம் தேவை.
சி டி மூலம் சரியாக‌ அறிந்து கொள்ள‌ முடியாது.
உங்கள் ஊரில் நிச்சயம் வகுப்பு நடக்கும். விசாரித்துப் பாருங்கள்.
விவேகானந்த‌ கேந்திரம்,வாழும் கலை இப்படி விசாரியுங்கள்.
வாழும் கலை வகுப்பில் சொல்லித் தரும் சுதர்ஷனக் கிரியா சூப்பரா இருக்கும்.:)

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி,
யோகா வகுப்புக்கு போறது தான் பெஸ்ட்னு தெரியும் அக்கா,
அதுக்கு போக‌ டைம் ச‌ரியா செட் ஆகல‌ அக்கா, அதான் இங்க‌ கேட்டேன்........

// விவேகானந்த‌ கேந்திரம்,வாழும் கலை இப்படி விசாரியுங்கள்.
வாழும் கலை வகுப்பில் சொல்லித் தரும் சுதர்ஷனக் கிரியா சூப்பரா இருக்கும்///
கண்டிப்பா விசாரிக்கிறேன் அக்கா........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்