சுதந்திரதின வாழ்த்துக்கள்

68வது சுதந்திரதினம் - பலர் தியாகங்களின் தயவால் இன்று நாம் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறோம். இந்நன்னாளில் அவர்களைக் கொஞ்சம் நினைப்போமா!
முதல் சுதந்திரப்போர் 1857ல் மீரட்டில் நடந்த சிப்பாய்க்கலகம் என்றே வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்நிகழ்வுக்கு முன்பே நம் தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிரான போரட்டங்களை நடத்திருந்தாலும் நம் ஒற்றுமையின்மையால் முறியடிக்கபட்டது. ஆனால் நம் ராணி மங்கம்மா அவர்கள் மட்டுமே ஆங்கிலேயருக்கு எதிரான போரில் அவர்களை வீழ்த்தி ஆங்கிலேயரிடம் மன்னிப்புப் பட்டயம் எழுதி வாங்கிய ஒரே வீரமங்கை ஆவார்.

அதற்குப் பிறகு பல தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த, பலரின் தியாகத்தால் 1947ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் கிடைத்தது.

நாம் குழந்தைகளாய் இருக்கும்போது நமக்கு தெரிந்த சுதந்திரதினம் இருபத்தைந்து காசு நிலா மிட்டாயும், விடுமுறை கிடைக்கும் என்ற ஆனந்தமும். அதற்குப் பிறகு சட்டையில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு திரியும் போது தனி கர்வம் பிறக்கும்.

50வது பொன்விழா சுதந்திரதினம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சுதந்திரதினம். அன்றைய முதல்வர், ஆளுநர் முன்னிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இரவு 12 மணியளவில்  பள்ளி மாணவியாய்  நாட்டிய நிகழ்ச்சியில் பங்களித்தது என் சுதந்திரதின மலரும் நினைவுகள்.

நம் பிள்ளைகளுக்கு சுதந்திரதினத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வோம். சாதி, மத வேற்றுமை கலைந்து இந்தியர் என்று பெருமை கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

5
Average: 5 (2 votes)

Comments

//50வது பொன்விழா சுதந்திரதினம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சுதந்திரதினம். அன்றைய முதல்வர், ஆளுநர் முன்னிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இரவு 12 மணியளவில் பள்ளி மாணவியாய் நாட்டிய நிகழ்ச்சியில் பங்களித்தது என் சுதந்திரதின மலரும் நினைவுகள்// ஒரு நாட்டிய‌ தாரகையா இருந்திருக்கிறீங்க‌ !

உங்களுக்கும், அறுசுவை தோழிகள் அனைவருக்கும் உங்கள் பதிவின்மூலமாக‌ என் இனிய‌ சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் :) இந்த வருடம் எதாவது டேன்ஸ் ப்ரோக்ராம் போட்டா முன்னாடியே எனக்கு டிக்கட் அனுப்பிடுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரேவதி,

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

ஆத்தாடி.இது என்ன வதந்தி. நான் மட்டும் ஆடலமா.பள்ளி தோழிகள் அனைவர ம் சேர்ந்து குருப்டானஸ். 50பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி.அவ்வளவுதான். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

Be simple be sample

ஹி ஹி ஹி. வனிதா குருப்டான்ஸ்தான் எனக்கு வரும்.நீங்க ரெடியா.

Be simple be sample

வாழ்த்துக்கள் சீதாம்மா.

Be simple be sample

இனிய‌ சுதந்திர‌ தின‌ வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் :-)
நல்ல பதிவுங்.

நட்புடன்
குணா

ஹாய் நிகி.தான்க்ஸ்பாஆ.

ஹாய் தம்பிங் . தான்க்ஸ்ங்.

Be simple be sample

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் :‍‍
ரேவா அக்கா நல்ல‌ பதிவு,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுதந்திரதின வாழ்த்துக்கள் ரேவ்ஸ்.

‍- இமா க்றிஸ்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

உன்னை போல் பிறரை நேசி.

தான்க்ஸ் சுபி .

தான்க்யூ இமாம்மா.

தான்க்யூ கிரிஸ்

Be simple be sample

நேசமானவர்களே,
இன்னும் சுதந்திரம் வேணூம்...........
நல்ல‌ சுதந்திரத்தை நன்றி கெட்டவர்கள் அடமானம் வைத்துவிட்டனர்.
கேளுஙகள்,
1. விவசாயம் சொல்கிறது எனனை குறுக்கி குறுக்கி அழித்துவிடாதீர்.
2. கெட்டவன் கெட்டசெயல் செய்ய‌ அஞ்சமாட்டான் ஆனால்,
3. நல்லவன் நல்லது செய்ய் அஞ்சுகிறான், காரணம் பயமில்லை பாதிப்பு.
4. கல்வி சொல்கிறது என் பாடசலையில் மனிதன் வாழகத்து கொடுக்க‌ நினைத்தேன் ஆனால் என் வழ்வை அழித்துவிடுவார் என்று பயமாக‌ உள்ளது!
5. பசுமை சொல்கிறது நான் இருந்தால் தான் மழை பொழியும், மழை பெய்தால் தான் நானும் வாழா முடியும். ஆனால் என்னையும் குறைத்து, என்னால் வரும் மழையும் குறைத்தால் என்ன‌ நியாயம்?
இவை அனைத்திற்கும் குரல் கொடுப்போம் வாருங்கள்.....

நேசமுள்ளவன்,
பிரகாசம் பி
9943723800