job

வணக்கம் தோழிகளே. என் கணவரின் நண்பர் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சென்னை யில் வீடு வாங்கி குழந்தையையும் பள்ளியில் சேர்த்தார். அவருக்கும் வேலை கிடைத்தது . இப்பொழுது சிறு குழப்பம். பள்ளியில் குழந்தை சரியாக செட்டாகவில்லை வேலையும் சரியாக செட்டாகவில்லை திரும்பவும் அமெரிக்கா செல்வது என்று(குடும்பத்துடன் ) இது சரியா இங்கு வந்து இரண்டு மாதம் தான் ஆகிறது இன்டீரியர் மற்றும் வீட்டிற்கு சாமான்கள் வாங்கி செலவு செய்திருக்கிறார். இந்த முடிவு சரியா இனி போனால் அங்கேதான் செட்டில் என்கிறார். இங்கே அம்மா அண்ணன் குடும்பம் இருக்கிறார்கள். இது சரியா ஆலோசனை சொல்லுங்கள். urgent

விட்டுருங்க. அவங்களால இங்க செட் ஆக முடியலை. இப்போ சிரமம் இருக்கும் நிச்சயம்.

வீட்டுச் செலவு அவங்க மனசுல பெருசா தெரியல. எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்தா அங்க உள்ள எல்லாம் செட்டில் பண்ணிவிட்டு இங்க வந்து.... இப்ப இப்படி முடிவு எடுத்திருப்பாங்க! உங்களால அவங்க இடத்துல இருந்து பார்க்க முடியாது; புரியாது. அம்மா, அண்ணாவையெல்லாம் நினைச்சா வந்து பார்த்துப் போற அளவுக்கு அவங்க நிலமை சீக்கிரம் வளர்ந்துரக் கூடும். நம்பிக்கை இருக்கிறதாலதான் கிளம்புறாங்க.

என்னால இனி என் நாட்டுல போய் செட்டில் ஆக முடியாது. லீவுல போறப்பவே எங்க எப்படி நடந்துக்கணும் என்று புரியல. நிறைய விஷயம் மாறி இருக்கு. போக ஆசைப்பட்டுப் போவேன். ஒரு சிலரைத் தவிர அங்க உள்ள மீதி ஆட்களைத் தெரியல. எல்லாம் வளர்ந்திருக்காங்க. உறவு யார்னும் தெரிய மாட்டேங்குது. புதிய நடைமுறைகள் புரியல.

அவங்க சிரமம் எனக்குப் புரியுது. விட்டுரலாம்.

‍- இமா க்றிஸ்

இந்த நிலைமையை கண்டிப்பாக புரிந்துக் கொள்வது கடினம் தான். இருந்தாலும் இது பெரிய முடிவு. சிலர் இதை பற்றி யோசித்து தான் தாய்நாடு திரும்பவே பயப்படுவாங்க.

இங்கே பள்ளியில் ஆசிரியர் மாணவரின் நோட்டிலோ அல்லது வினா தாளில் தவறு இருந்தால் சுட்டி காட்டுவார்கள், இல்லை ஒரு ஸ்டிக்கி நோட் இருக்கும் ஒரு பொழுதும் தவறு குறி இருக்காது. ஆனால் அங்கே தவறு குறி சர்வ சாதாரணம். இதை அமெரிக்காவில் வளர்ந்த குழந்தையால் தாங்கி கொள்ளவே முடியாது. இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் நிறைய இருக்கிறது. ஐந்து முதல் எட்டு வயதிற்குள் என்றால் ஓரளவிற்கு சாமாளித்துக் கொள்ள முடியும் அதுவுமே ரொம்பவே கடினம் தான்.

அதே மாதிரி தான் வேலை செய்யும் இடமும். கல்ச்சர் என்று சொல்லுவார்கள். பெங்களூரில் வேலை பார்த்தவர்களுக்கு சென்னையில் வேலை செய்ய பிடிக்கவே பிடிக்காது. அப்படி இருக்கும் போது இதன் கல்சுரல் மாற்றம் மனச்சுமையை தான் கொடுக்கும்.

இமா

வணக்கம். எப்படி இருக்கீங்க?

//லீவுல போறப்பவே எங்க எப்படி நடந்துக்கணும் என்று புரியல. // ஒவ்வொரு முறையும் நானும் ஆசையுடன் போய் கனத்த மனதுடன் தான் திரும்பி வருவேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்