karu sidhaivukku pin baby ku try pannurom help pls

enakku D&C seoithu 1 1/2 month aaguthu 2 year ku apparam na conceive aanen but baby growth and heart beat illa nu solli d&c pannitanga. d&c seithu 5 days la enaaku periods vanthathu athukku apparam intha month um periods vanthutu. intha month naanga baby try pannalamnu decide pannirukom. pls pray for me intha time baby nalla padiya arokiyama confirm aaganumnu enakkaga pray pannunga and baby nalla arokiyama confirm aaga naa enna pannanum pls sollunga...

en baby yen heart beat and growth illama pochinu theriyala. pls iniyum appadi nadakama nalla padiya aarokiyama en kuzhanthai thanga vazhi sollunga. ippadi aanathukku yethu reason ah irukkum. inimelum appadi aagama irukka na enna pannanum. pls yaravathu enaku help pannunga. 2 year ku apparam karu thangi ippadi aanathu enakku romba deprest ah irukku. pls help me

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

துர்கா கவலை படாமல் இருக்க முயற்சி செய்யுங்க. உங்க பேபிக்கு ஹார்ட் பீட் வந்து அதன் பிறகு துடிப்பு நின்று விட்டதா? அல்லது துடிப்பு வரவில்லையா?
மன்னிக்கவும் மீண்டும் அதை நியாபகப்படுத்தி விட்டேன்.

ஏன் இதைப்பற்றி கேட்டேன் என்றால் எனக்கும் இந்த கொடுமையான அனுபவம் ஒரு வருடத்திற்கு முன்பு நேர்ந்தது. உலகம் முழுக்க 5 இல் ஒரு குழந்தைக்கு இது போல் நடக்கிறது என்று சொன்னார் எனது டாக்டர். 3 மாதம் முழுக்க நிறைவு பெற்ற பிறகு சோனோகிராபி செய்யும் போது தெரிந்தது. அதற்கு 15 நாட்கள் முன்பே ஹார்ட் பீட் போய் விட்டது. எனக்கு வலி எதுவுமே இல்லை. எனக்கு டி அன் சி செய்த போது நாலாவது மாதம் பிறந்து விட்டது.

ஒரு வருடம் ஆனதால் மீண்டும் ட்ரீட்மென்ட் ஆரம்பித்து விட்டேன்.

உங்களின் பதிவுகளை தமிழில் போட்டு இருந்தால் நிறைய பேர் கருத்து தெரிவிப்பார்கள்.

enathu keyboard la sila problem so i cant type in tamil. en baby ku startinga laye heart beat illa nu sollitanga. enakku d&c pannumpothu 3 1/2 month aaitu. first tablet vachi clear aagala so d&c pannitanga. july 9th d&c panninanga one month la contactla irukalamnu sonnaga so intha month baby ku try pannalamnu irukkom. en baby ippadi aanathunala en mamiyar veetla yarum en kitta and en veetula ullavanga kittayum pesurathu illa. en husband kudavum konjam problem vanthu na suicide lam attend panni ippa than konjam recover aairuken.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

சாரி டா. மனதை தேத்திக்கோங்க. சீக்கிரமே நீங்க மறுபடியும் கன்சிவ் ஆவிங்க நம்பிக்கையோடு இருங்க.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சாரி டா. மனதை தேத்திக்கோங்க. சீக்கிரமே நீங்க மறுபடியும் கன்சிவ் ஆவிங்க நம்பிக்கையோடு இருங்க. குழந்தை பிறந்துட்டா எல்லா பிரச்சனையும் காணாமல் போயிடும் டா. இப்படி சூசைட் பண்ணலாம் முடிவு எடுக்காதீங்க. எல்லாதையும் தைரியமா ஃபேஸ் பன்னுங்க பா. நிச்சயம் ஒரு நாள் நல்லது நடக்கும் அதுக்கு காத்திருங்க பா. டேக் கேர்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

romba thanks pa. but romba bayama irukku. ointha toime nalkkla padoiya aarokiyama karu thanganumnu pray pannikonga pa. naan al ain la irukken pa. neenga lulu hyper market la aalupakora fruit kidaikum na anga than vanguven.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

kavala padathinga pa..neega seekaramave nala arokiyamana kuzhanthai paytruyadupenga...

thanks meenasuman but bayama irukku na soiklkiram conceive aaganum bcs enakku uterus side tube la katti irukkunu doctor sonnanga so antha katti perusu aagurathu kulla conceive aagidanum illana conceive aaga problem agumnu doctor sollitanga

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

//en baby ippadi aanathunala en mamiyar veetla yarum en kitta and en veetula ullavanga kittayum pesurathu illa. en husband kudavum konjam problem vanthu na suicide lam attend panni ippa than konjam recover aairuken.// இப்படி ஆனதுக்கு நீங்க என்னங்க பண்ண முடியும். இந்த மாதிரி நிறைய பேருக்கு இப்போ நடக்குது. நீங்களும் உங்க ஹஸ்பென்ட்டும் தான் இதுல பாதிக்க படுறீங்க. இதுக்கு இடைல உங்க மாமியார் வந்து நாட்டாமை பண்றதுல நியாயமே இல்ல. இது எதுவும் நம்ம கையில இல்லேயேங்க. நீங்க இப்படி தப்பான முடிவு எடுக்கறதுக்கு முன்னால் இந்த பிரச்சனையை எப்படி தீர்வு காண்றதுன்னு யோசிக்கணும்ங்க. உங்க கஷ்டம் என்னன்னு புரியுது. ஆனால் இந்த மாதிரி தப்பான முடிவு எடுக்கக்கூடாது. உங்க அம்மா அப்பா எவ்வளவு கஷ்டபடுவாங்க. உங்க ஹஸ்பென்ட்டும் இதுக்காக உங்ககிட்ட சண்டை போடக்கூடாது.

நடந்ததெல்லாம் மறந்துடுங்க. இனிமேல் நடப்பதை மட்டும் இப்போ யோசிங்க. நீங்க இப்படி பயப்படக்கூடாது. தைரியமா இருக்க வேண்டிய நேரம் இது. என் ஃப்ரெண்ட் ஒருத்திக்கும் 3 மாதத்தில் இதயத்துடிப்பு இல்லைனு டி.என்.சி பண்ணினாங்க. அப்புறம் அவ கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு அப்புறமா கருத்தாங்கி இப்போ பையன் பிறந்திருக்கான். அதனால் நீங்களும் பயப்படாதீங்க. உங்களுக்கு வெகு சீக்கிரத்தில் அழகான குழந்தை கிடைக்கும்.

//enakku uterus side tube la katti irukkunu doctor sonnanga so antha katti perusu aagurathu kulla conceive aagidanum illana conceive aaga problem agumnu doctor sollitanga// இந்தக்கட்டி சீக்கிரமா வளருமா? டாக்டர் என்ன சொல்றாங்க. அவங்க அட்வைஸ் கேட்டு கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. ஆனால் பயம் மட்டும் படாதீங்க. தைரியமா இருங்க. நிறைய தண்ணீர் குடிங்க. மாதுளை சாப்பிடுங்க, சூடான பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் எதும் சாப்பிடாதீங்க. செவ்வாழைப்பழம் கிடைத்தால் தினம் ஒன்று சாப்பிடுங்கள். டென்ஷன், பயம் தான் conceive ஆகாம தடுக்கிறதுல முதல் எதிரிங்க. சோ டென்ஷன் குறைங்க. முடிந்தவரைக்கும் அதைப்பற்றி நினைக்காமல் நீங்க டெய்லி செய்யற வேலையை தொடருங்கள். சீக்கிரமாக கருத்தாங்கி குழந்தை பெற வாழ்த்துகள். உங்களுக்காக ப்ரே பண்ணுறேன்.

kattina yentha mathire pco va...pa

மேலும் சில பதிவுகள்