பீட்ரூட் சாலட்

தேதி: August 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பீட்ரூட் துருவல் - ஒரு கப்
பச்சை வேர்க்கடலை - அரை கப்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
எலுமிச்சை - பாதி
உப்பு - அரை தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் துருவலுடன் தேங்காய் துருவல். பச்சை வேர்க்கடலை, கொத்தமல்லித் தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அதனுடன் துருவிய இஞ்சி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். (எலுமிச்சை சாறை பரிமாறும் போதுகூட பிழிந்து கொள்ளலாம்).
பிறகு அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கலந்து கொள்ளவும்.
சுவையான, ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சாலட் ரெடி. சிறிது கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். பச்சை வேர்க்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது. இதே போல விருப்பமான காய்கறிகளிலும் செய்யலாம்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்கள். சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாலட் நல்லா இருக்கு. நான் இது மாறி கேரட் ல‌ செய்து இருக்கேன். காய் பச்சையா சாப்டறது தான் உடம்புக்கு ரொம்ப‌ நல்லது.

எல்லாம் சில‌ காலம்.....