நம் அறுசுவை - புதிய அறிமுகம்

அன்பு தோழர் & தோழிகளே...

வனி என்ன புதுசா அறுசுவையில் அறிமுகப்படுத்த போறேன்னு யாரும் யோசிக்காதீங்க. நம்ம அறுசுவையே புதுசா வரப்போகுது. அட ஆமாங்க, அறுசுவையின் ஆங்கில தளம் இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு நாம எல்லாருமே வெகு காலமா எதிர் பார்க்கிறோம். அதுல நானும் ஒருத்தி. :) இப்போ அந்த தளம் நம்ம உதவி இருந்தா உடனே வரும்னு ஒருத்தர் சொல்றார். அவர் யாருன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டாம்.

ஆமாங்க... நம்ம அறுசுவை தமிழ் தளத்தில் உள்ள குறிப்புகள் / பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நம்ம உதவி நம்ம தளத்துக்கு தேவை. நம்ம தளம்னு சொன்னதுக்கு அப்பறம் நமக்காக நாம செய்யுற வேலையை உதவின்னு சொல்வது சரியான்னு எனக்கு தெரியல. இருந்தாலும் பயன்படுத்தினதுக்கு காரணம் இருக்கு, சொல்றேன்.

நீங்க செய்யக்கூடிய உதவி உங்க குறிப்புகளை நீங்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பலாம். அல்லது மற்றவர் குறிப்புகளையும் மொழிபெயர்த்து அனுப்பலாம். அல்லது அட்மின் உங்களிடம் கேட்கும் மொழிபெயர்பை நீங்க முன்வந்து செய்து கொடுக்கலாம். இதில் எதை நீங்க செய்ய விரும்பினாலும் மகிழ்ச்சியே. குறிப்புகள் கொடுத்தவர்கள் மட்டுமன்றி, குறிப்புகள் கொடுக்காதாங்க / மற்றவர் குறிப்புகளையும் கூட செய்ய விருப்பம்னு சொன்னா நிச்சயம் அது நம்ம தளத்துக்கு உதவி தானே ;)

பிழையின்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய தெரிந்தவர்கள், உதவ முன் வந்தால் இங்கே ஒரு பதிவை தட்டி வைங்க, அட்மின் குழு உங்களை மெயிலில் தொடர்பு கொள்வார்கள்.

"Team work divides the work and multiplies the success"

Together
Everyone
Achieves
More

பின்ன... ஆங்கில தளமாச்சே ;) ஆங்கிலத்துல எதாச்சும் சொல்ல வேணுமே. நம்ம தளத்தை நாமே உறுவாக்கின மகிழ்ச்சி நமக்கு கிடைக்க ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு... உங்கள் பதிவுகளுக்காக ஆவலுடன்.... “நாங்கள்” :)

நன்றி அக்கா

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

நம்ம தளத்திற்கு நான் மொழிப் பெயர்த்து தருகிறேன் அக்கா.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

முதலில் எனது குறிப்புகளை மொழிபெயர்த்து அனுப்புகிறேன்... பிழைகள் இல்லையெனில
மற்றவற்றையும் முயற்சிக்கிறேன்

Can I come inside...:)..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

I'm waiting(read it Vijay style).

No pains,No gains

ANANTHAGOWRI.G

திவ்யா... என்ன சொல்ல வரீங்கன்னே எனக்கு புரியல ;) நீங்க மொழிபெயர்ப்பு செய்யறீங்களா? இல்ல புது தளத்தை எதிர் பார்த்தோம்னு சொல்லிருக்கீங்களா?

ஃபரிதா... மிக்க நன்றி :) டீம் உங்க பதிவை பார்த்திருப்பாங்க. உங்களை தொடர்பு கொண்டு சொல்வாங்க.

பிரியா... மிக்க நன்றி :) உங்க குறிப்புகளை அனுப்புங்க... அவங்க பார்த்துட்டு சொல்வாங்க. முதல்ல ஒன்னு அனுப்புங்க, அதுல பிழை இல்லை, அதே ஸ்டைலில் இருக்கலாம்னு சொன்ன பின் மற்றதை அனுப்புங்க.

கனி... அறுசுவை உள்ள வரவா அனுமதி?? ;)

ஆனந்த கௌரி... யார் ஸ்டைலில் படிச்சாலும் புது சைட்டுக்கு வெயிட்டிங்கா? இல்ல மொழிபெயர்க்க வெயிட்டிங்கான்னு எனக்கு புரியலயே ;) தெளிவா ஒரு பதிவை போடுங்க ப்ளீஸ். வனி வெயிட்டிங்.

மக்களே... விருப்பம் உள்ளவங்க, மொழிபெயர்க்க விருப்பம்னு இங்க சொன்னா வசதியா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை மண்ணித்துவிடுங்கள். தளத்தில் இருக்கும் என் மெயில் ஐடியை நான் உபயோகிப்பதில்லை. தகவலை இப்போது நான் கொடுத்திருக்கும் மெயில் ஐடிக்கு அனுப்ப முடியுமா அண்ணா ப்ளீஸ்? மறுபடியும் என்னை மண்ணியுங்கள் அண்ணா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எனக்கும் மொழிபெயர்ப்பில் உதவ விருப்பம் டீம். :-)

என் குறிப்புகள் அனைத்தையும் செபா, ஏஞ்சல், அலன் & க்றிஸ் அனுப்பியவற்றையும் நானே மொழிபெயர்க்க விரும்புகிறேன். சில குறிப்புகளை ஏற்கனவே மொழிபெயர்த்து அனுப்பி இருக்கிறேன். மீதியும் விரைவில் வரும்.
நர்மதாவின் குறிப்புகள் - அவருக்கு இப்போது நேரம் கிடைக்காவிட்டால் இமா மொழிபெயர்த்துக் கொடுப்பாங்க. விசாரித்துவிட்டுச் சொல்கிறேன். இன்னொருவர் குறிப்பு ஒன்றும் இருக்கிறது. அதுபற்றி மெய்லில் விசாரிக்கிறேன்.

இதைத் தவிர... கைவினைதான் என் ஃபேவரிட் ஏரியா. எது எது மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சொன்னால் செய்துகொடுக்கிறேன்.

மாற்றம் விரைவில் வரும் என்று ஆவலாகக் காத்திருக்கிறேன்.
அட்மின் & டீமுக்கு என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

வனி,
நானும்,நானும் முடிந்த வரை உதவி செய்கிறேன்

I am Interested

என்றும் அன்புடன்,
கவிதா

ஆங்கிலத்தில் மொழி பெயா்க்க விரும்புகிறேன்,,,,

வாிகளை முடிக்காமல் போனதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்,,,,,அக்கா

நன்றி

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

மேலும் சில பதிவுகள்