பஞ்சாமிர்தம்

தேதி: August 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பேரிச்சம் பழம் - 10
வாழைப்பழம் - 4 - 5
வெல்லம் - அரை கப்
கல்கண்டு - கால் கப்
உலர்ந்த திராட்சை - 10
சூடம் - சிறிய துண்டு
தேன் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும்.
வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும்.
அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்து உண்ணவும்.
சுவையான பஞ்சாமிர்தம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் வாணி. இமா 5* கொடுத்தாச்சு.

யாழ்நகரில் நான் இருந்த ரூம் பக்கமா ஒரு தண்டவாளம் இருந்துது. அதன் ஓரத்துல இருந்த குட்டி கோவில்ல அயலவர்கள் அடிக்கடி பூசை வைப்பாங்க. அப்போ ருசி பார்த்திருக்கேன். பிடிக்கும். செய்றப்ப உதவியும் இருக்கேன்.
அப்ப வராத டவுட்டு இப்ப வந்துச்சு. 8 இன்க்ரேடியன்ஸ் இருந்தா அட்டாமிர்தம்ல! எப்படி பஞ்சாமிர்தம் எனலாம்! :-) இடிக்குதே!

வாணி வர முன்னால கிளம்பி ஓடிருறேன். ;)) டாட்டா.

‍- இமா க்றிஸ்

எங்க‌ வீட்டுல‌ இதை ரொம்ப‌ விரும்பி சாப்பிடுகிற‌ ஒருத்தர் இருக்கார், அவருக்காக‌
இதை செய்யனும். இந்த‌ ஊர் வாழைப்பழத்தில‌ எப்படி வருமோன்னு நினைத்து செய்யலை, நீங்க‌ அதுலதான் செய்தமாதிரி இருக்கு, நானும் ட்ரை பன்றேன்.

இமாம்மாவின் டவுட் எனக்கும்.

சூடம்கிறது, பச்சைகற்பூரம்னு சொல்வாங்களே அதுவா?

அடடடா !!! இந்த புள்ள குட்டிகாரி ஊர்ல இல்லாதப்ப பார்த்து இப்படி ரவுண்டு கட்டுறீங்களே :-))
இதை செய்து காட்டியது கோவை நண்பர் ஒருவர். எங்களுக்கு தம்பி முறை. அவர் சொன்ன விஷயம் என்னன்னா இந்த இனிப்பை செய்து கோவிலில் படைப்பதால் இதை அவர்கள் "அபிஷேகம்" என்றுதான் அழைப்பார்களாம். நான் தான் "அபிஷேகம்" என்று தலைப்பிட்டால் நிச்சயம் நம்ம அறுசுவை உடன் பிறப்புகள் சிலர் வந்து ஐய்ய்ய்ய் !!! இதை நாங்க ""பஞ்சாமிர்தம்"" என்று சொல்லுவோமே :)) என்க,. அதுக்கு முன் நாமளே பெயரை மாற்றி வைச்சிடலாம்ன்னு வைச்சா, இப்படின்னா அப்படி அப்படின்னா இப்படி :(( ம்ஹூம் :-)

5 ஸ்டார் கொடுத்துட்டு டாட்டா சொன்னா நாங்க விட்டுடுவோமா :))

\\அப்ப வராத டவுட்டு இப்ப வந்துச்சு.//
டீச்சருக்கு குசும்பு கொஞ்சம் தூக்கலாத்தேன்.... இருக்கு

\\வாணி வர முன்னால கிளம்பி ஓடிருறேன்.// ம்ம்ம் அது :-)))

\\இமாம்மாவின் டவுட் எனக்கும்// நீங்களுமா அனு??!! :-))
இந்த ஊர் வாழைப் பழமே தான்.
பச்சை கற்பூரம் தான் .
செய்துப் பார்த்துட்டு பிடித்ததான்னு சொல்லுங்க.
நன்றி

Supera erukkuthu entha panchamirtham pakkum podhae sapida thonuthae ma

பார்க்கவே ஆசையா இருக்குங்க‌ :) 5 / 8 சந்தேகமெல்லாம் எனக்கு வரவே வராதுங்க‌... லாஜிக்கே இல்லாம‌ நான் பண்ற‌ ஒரே விஷயம் சமையல் தான் ;) ட்ரை பண்ணுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வாணி,

அருமையாக‌ இருக்கு.

நெருப்பில்லா சமையல் பத்தி ஒரு இழையில் கேட்டிருந்தாங்க‌. அப்ப‌ இந்தப் பெயர் நினைவு வந்துச்சு. ஆனா, என்னவெல்லாம் சேர்க்கணும், எவ்வளவு, எப்படி சேர்க்கணும்னு எனக்குத் தெரியாது.

இப்பத் தெரிஞ்சுகிட்டேன். நல்லதொரு குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

வருகைக்கும் பதிவிற்க்கும் நன்றி அர்ச்சனா

செய்து பாருங்க வனி, மிக்க நன்றி

அறுசுவையிலும் அவ்வப்போது தோழிகள் நெருப்பில்லாமல் சமையல் பற்றி கேட்பதுண்டு. நீங்கள் நல்ல தகவலை தந்துள்ளீர்கள்.
நன்றி சீதா மேடம்.

வாணி, பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்வதுண்டு.
கூட தேங்காய் துருவி சேர்ப்போம். வெல்லத்திற்கு பதிலாக நாட்டுசர்க்கரை சேர்த்து பிசைவோம். எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு :)

மொத்தம் 9 பொருள் வருதுதானே!! அப்ப நவாமிர்தம்...:))))

மம்முலு குட்டிக்கு இதெல்லாம் ருசி பார்க்கும் வயது வந்தாச்சா? நலம்தானே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.