கீரை ஃப்ரைட் ரைஸ்

தேதி: January 5, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - இரண்டு கோப்பை
பிடித்தமான கீரை - இரண்டு பெரிய கட்டு
புளிச்சகீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
வெங்காயத்தாள் - கால் கோப்பை
பெரிய வெங்காயம் - இரண்டு
பூண்டு - நான்கு பற்கள்
பச்சைமிளகாய் - ஆறு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் அல்லது நெய் - கால் கோப்பை


 

அரிசியை கழுவி உப்பு கலந்த கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து வடித்துக் கொள்ளவும். பிறகு அதை நன்கு ஆறவைக்கவும்.
கீரையை ஆய்ந்து நன்கு கழுவி நீரை வடித்து விட்டு நறுக்கி வைக்கவும்.
புளிச்ச கீரையின் இலைகளை கிள்ளி எடுத்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு பொரியவிடவும்.
பிறகு வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வறுக்கவும். பிறகு கீரைகளை சிறிது சிறிதாக கொட்டி வதக்கவும்.
கீரை நன்கு வதங்கியவுடன் ஆறவைத்த சோற்றைக் கொட்டி கலக்கவும். சோறு நன்கு சூடானவுடன் உப்புத்தூள், மிளகுத்தூளைப் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாளை கொட்டி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.
வெஜிடபிள் குருமாவுடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

super nandraga vanthathu thanks

மனோகரி அக்கா பிரைட் ரைஸ் ந்ல்லா இருந்தது,என் பையனும் விரும்பி சாப்பிட்டான்,அவன் கீரையே சாப்பிட மாட்டான்,இப்படி சாப்பிட்டதில் ரெம்ப சந்தோஷம் எனக்கு,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு சகோதரி ரேணுகா, எப்படி இருக்கீங்க? இந்த கீரை சாதம் உங்களுக்கும், உங்க அன்பு செல்லமும் விருப்பி சாப்பிட்டது கேட்க சந்தோசமாய் இருந்தது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இந்த சமைத்து அசத்தலாம் பகுதியைத் தொடங்கி நீங்களும் சகோதரி அதிராவும் செய்யும் வரும் பணி போற்றுதற்குரியது அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.மீண்டும் நன்றி.

டியர் மனோகரி மேடம்,

இன்று இந்த கீரை ஃபிரைட் ரைஸ் செய்து பார்த்தேன். ரொம்ப சூப்பரா வந்தது. என்னிடம் வெங்காயத்தாள்தான் இல்லை. ஆனாலும் மணமாகவே வந்திருந்தது. அடுத்தமுறை செய்யும்போது அதுவும் சேர்த்து செய்து பார்க்கிறேன். சுவை நன்றாக இருந்தது. நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ