உரு மாறிய‌ உலோகங்கள்

நம் பாட்டி காலத்தில் வீடு முழுவதும் ஆட்சி செய்துக் கொண்டு இருந்தது பித்தளை பாத்திரங்கள். பெரிய‌ பெரிய‌ அண்டாக்கள், குண்டான்கள், தாம்பாளத்தட்டுக்கள், அடுக்குகள், சம்புடங்கள், போனிக்கள்,பேசின்கள், தவலைகள், குடங்கள், டம்ளர்கள், கரண்டிகள், வாளிகள் எல்லாமே பித்தளை சாமான்கள் தான். சமையல் அறையில் விதவிதமான‌ பித்தளை சாமான்கள் எல்லா அளவுகளிலும் இருக்கும். யார் வீட்டில் விசேஷம் என்றாலும் எல்லார் வீட்டு பித்தளை சாமான்களும் அவர்கள் வீட்டில் இருக்கும். அப்போது சாமான் வாடகைக்கு கிடைக்காதக் காலம். எங்கள் வீட்டில் கடைக்கு சாப்பாடு எடுத்து செல்லும் நான்கு அடுக்கு டிபன் கேரியர் உண்டு. அதில் பத்துப்பேர்க்கு சாப்பாடு எடுத்து செல்வார்கள். அவ்வளவு பெரியது. சோமாசி கரண்டி ஒன்று இருக்கும். அதன் ஒரு பக்கம் வண்டிச்சக்கரம் போல் இருக்கும். சோமாஸ்களின் ஓரங்களை வளை வளைவாய் கட் பண்ண‌ சோமாசி கரண்டிகளை பயன்படுத்துவார்கள்.அது பாட்டிக் காலம். கற்காலம்னு கூட‌ சொல்லலாம்.நாம் பித்தளை பாத்திரத்தை யார் கை வலிக்க‌ பளப்பளனு தேய்ப்பது என்று கவலைப்பட்ட‌ காலம்.

அடுத்து வந்தது நம் அம்மாவின் காலம். எல்லாமே எவர்சில்வர். பித்தளையில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையிலும் சில்வர் சாமான்கள்.எல்லாம் சில்வர் மயம். ஒரே பளப்பளா தகத்தகா. சில்வர் பாத்திரங்களை தேய்ப்பதும் சுலபம். பராமரிப்பும் சுலபம். வெயிட்டும் குறைவு. தூக்கிச்செல்வதும் சுலபம். பித்தளை சாமான்களை விட‌ விலையும் குறைவு என்று புகழாரம் தான். பாட்டிக்கால‌ பித்தளை சாமான்கள் எல்லாம் சில்வர் சாமான்களாக‌ உரு மாறத் தொடங்கின‌. கல்யாண‌ சீர் வரிசை சாமான்களில் சோப் டப்பாக் கூட‌ சில்வர் என்பது பெரும் பாராட்டுக்கு உரியதாக‌ இருந்தது. எங்கும் சில்வர் எதிலும் சில்வர். இந்த‌ சில்வர் காலம் பொற்காலம்னு சொல்லலாம்.

அடுத்து வருவது நம் காலம். அது தான் வண்ண‌ மய‌ பிளாஸ்டிக் சாமான் காலம். பிளாஸ்டிக்ல‌ என்ன‌ சாமான் இல்லைனு சொல்ல‌ முடியுமா?. பச்சை கலர் சிங்குச்சா, சிவப்பு கலர் சிங்குச்சா, வெள்ளை கலர் சிங்குச்சானு எல்லா கலரும் வந்துவிட்டது. இதிலே அவரவர் ராசி கலர்னு சொல்லி தேடித்தேடி பிளாஸ்டிக் சாமான் வாங்க‌ ஆரம்பித்துவிட்டோம். பித்தளையை விட‌ விலை குறைவு. சில்வரை விட‌ விலை குறைவு. வெயிட்டும் குறைவு. சுத்தப் படுத்துவதும் சுலபம்னு சொல்லிச்சொல்லி பிளாஸ்டிக் பொருட்களை நாம‌ கில்லி அடிக்கிறோம். பித்தளை போய் சில்வர் வந்தது டும்டும்டும். சில்வர் போய் பிளாஸ்டிக் வந்தது டும்டும்டும்னு கும்மி அடித்துக்கொண்டிருக்கிறோம். இது கலிகாலம்.

அடுத்து வருவது நம் பிள்ளைகள் காலம். இந்த‌ காலத்திற்கு பித்தளையும் வேண்டாம். சில்வரும் வேண்டாம். பிளாஸ்டிக்கும் வேண்டாம். ஏன்னு சொல்லட்டுமா? வீட்டுச்சமையல் என்பதே மறந்துவிட்டதே,மூன்று வேளை சாப்பாடு என்பதே இரண்டு வேளையாக‌ சுருங்கி அந்த‌ இரண்டு வேளை சாப்பாடும் வெளியில் ஓட்டலில் தான் என்பது எழுதப்படாத‌ சட்டம் ஆகிவிட்டதே. உரு மாறி வந்த‌ உலோகம், இப்ப‌ காணாமலே போய்விட்டதுங்க‌. கற்காலம், பொற்காலம், கலிகாலம் போய்விட்டது. இனி கொடுங்காலம் தாங்க‌. அந்த‌ ஆதங்கத்தில் தான் இந்தப்பதிவை கொடுக்கிறேன்.

5
Average: 4.8 (6 votes)

Comments

அன்பு ரஜினி மேடம்,

ம், வருங்காலத்தில் எதில் சமைப்பார்களோ தெரியவில்லை.

சோப்பு டப்பா கூட‌ எவர்சில்வரில் ... ஆம், சோப்பு டப்பா, சீப்பின் பிடி இதெல்லாம் எவர்சில்வரில் வந்ததுண்டு.

இப்ப‌ பிரபல‌ கம்பெனியில் அயனோடைஸ்ட் என்று அறிமுகப்படுத்தியிருக்காங்க‌. அந்தக் காலத்தில் உபயோகித்த‌ இரும்புச்சட்டி என்று நினைக்கிறேன்.

நல்ல‌ பதிவு.

அன்புடன்

சீதாலஷ்மி

அதற்கும் முந்தையது மண்பாண்டங்கள்

நீங்க‌ என்னை விட‌ வயசுல‌ சின்னவங்களா இருப்பீங்க‌ போலயே!! பின்ன‌... எங்க‌ பாட்டி காலத்துல‌ சமையல் மண் சட்டி தாங்க‌. சமைச்ச‌ பின் பரிமாற‌ தண்ணி வைக்க‌ தான் செம்பு. எங்க‌ அம்மா கல்யாணம் ஆகும் வரை அப்படித்தான். நாங்க‌ எல்லாம் பிறந்த‌ பின் தான் எவர்சில்வர் பாத்திரம். இப்போ நான் ‍ஸ்டிக் , ப்ளாஸ்டிக் என்று மாறி மீண்டும் மண் சட்டி நோக்கி நம்ம‌ பயணம் துவங்கிருக்குன்னு தான் நான் நினைக்கிறேன் :) நல்ல‌ பகிர்வு ரஜினி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சம்புடங்கள், போனிக்கள்// சம்புடம் கேள்விப்பட்டிருக்கேன். தெரியாது. போனியும்... தெரியாது. ;( குதிரைக் குட்டியாட்டம், சின்னதுல என் தலைல இருந்த குடுமியாட்டம்லாம்தான் மனசுல படம் வருது. என்ன பொருள் இது என்று அறிந்துகொள்ள ஆவல்.

எங்க பக்கம் எப்பவுமே சமையலுக்கு மட்பாத்திரம் & அலுமினியம், பரிமாற எனாமல் பூச்சுப் பாத்திரம் அல்லது சைனாதான். அபூர்வமாக பரம்பரைப் பித்தளைகள் சிலது இருக்கும். வீட்டில் ஈயம் பூசிய இரண்டு வெண்கலச் சட்டிகள் தவிர வேறு பழம்பெருமை பேசும் சமையல் உபகரணங்கள் இருக்கவில்லை. அடிக்கடி வெள்ளம் எடுக்கும் ஊரில் செபா வசித்ததால் இது தங்கியதே அபூர்வம். எவர்சில்வர்... ஆசையில் சிலது வாங்கியிருந்தேன். இங்கு வந்து... மைக்ரோவேவில் யாராவது வைத்துவிடப் போகிறார்கள் என்கிற பயத்தில் பயன்படுத்துவது இல்லை. சீர்வரிசைல்லாம்... சினிமால பார்க்கிற சங்கதி. சுவாரசியமாக இருக்கும். அத்தனையையும் எங்கே அடுக்குவார்கள் என்று நினைப்பதுண்டு.

//இனி கொடுங்காலம் தாங்க‌.// ஆதங்கம் வேண்டாம். மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா! வருங்காலத்தவர்கள் நிச்சயம் எங்களை விட ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மாறுவார்கள். 'உரு மாற' விரும்பாத தலைமுறையாக மாறுவார்கள் என்று நினைக்கிறேன்.

நாங்கள் சமையலறை எங்கள் ராச்சியம் என்று வைத்துக் கொண்டு, நாங்கள் சமைக்கும் சமையலை வீட்டார் எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் சுவையையும் ரசனையும் அவர்களிடமும் எதிர்பார்க்கிறோம். (திணிக்கிறோம் என்பதுதான் சரியான சொல்லோ!!) சின்னவர்கள் அவர்களே தங்கள் விருப்பம் போல சமைக்க அனுமதி கிடைத்தால் நிச்சயம் சமைத்துச் சாப்பிடுவார்கள். ஆனால் பித்தளை, சில்வரை விட நான்ஸ்டிக் & செரமிக் தான் அவர்கள் தெரிவாக இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

எனக்கு சீர் கொடுக்கும்போதே ரெண்டு செட்டாக கொடுத்தார்கள் ஒன்று பித்தளையில் ,மற்றொன்று எவர்சில்வரில் ,,,நீங்கள் சொல்வதுபோல் சோப்புடப்பாவும் எவர்சில்வரே @@ இப்போது எல்லாம் நான்ஸ்டிக் தான் @ குக்கர்கூட நான்ஸ்டிக் தான் இப்படியாகி விட்டது ,,,இப்போ என்ன என் நாத்துனாரே சொல்லுவா மூணு வயசு சின்னவ "வாஸ்துப்படி கிட்சென் வீட்ல இருக்கக்கூடாதுன்னு ,,,ஏன்னா அவளுக்கு சமைக்க தெரியாது ,,கிட்டதட்ட இப்பவரைக்கும் // இப்போ எல்லாமே ஹோட்டல் மயமாகி விட்டது என்ன செய்ய ???

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உலகம் உருண்டை ரஜினி. மீண்டும் மண்பானைக்கு எல்லோரும் மாறிட்டு இருக்காங்க‌.
இமா, சம்புடம் என்றால் பள்ளி செல்லும் போது சாப்பாடு கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ்
போணி என்றால் குத்துப் போணினு சொல்லுவாங்களே அது தான். குட்டியா இருந்தால் போணி.
போணி மூணு சுழி "ணி" வரும்னு நினைக்கேன்.

படத்தில் உள்ள சில்வர் குடம் போன்ற ஒன்று நான் சிறுமியாயிருந்த போது என்னிடம் இருந்தது. குடத்தினுள்ளிருந்து சலசலக்கும் மணிகளின் ஓசையுடன் கூடிய சிறிய குடம். பள்ளி முடிந்து வந்ததும் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு அந்த குடத்தில் தான் தண்ணீர் எடுத்து ஊற்றுவேன்.
எங்க அம்மாவுக்கு கல்யாண சீர்ல ஒரு சில வெண்கலப் பாத்திரங்கள் உண்டு. குத்து போணி நினைவிருக்கு. மீதியெல்லாம் எவர் சில்வர் பாத்திரங்கள் தான்.
நீங்கள் சொல்வது சரிதான் காலம் மாறி விட்டது. நம் தலை முறைகளுக்கு நாம் தான் நன்மை தீமைகளை எடுத்து சொல்ல வேண்டியுள்ளது.

நன்றி நிகிலா.
//போணி மூணு சுழி "ணி" // புரிஞ்சுது இப்போ. பேணி! வீட்ல செப்பு மூக்குப் பேணி ஒன்று இருந்துது. கூகுள் இமேஜஸ்ல இது தெரியுது.
//சம்புடம் // இமேஜஸ் வரல எனக்கு. உயரமா கைபிடியோட இருக்குமே முறுக்கு டப்பா, அதுவா!

‍- இமா க்றிஸ்

Chk ur fb msg for sambudam... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதுவா வனி! சாமி படத்துல ட்ரிஷா காலேஜுக்கு தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய் கொண்டு போற டப்பாதானே! நான் ஆசைப்பட்டேன் என்று இந்தியால இருந்து என் மாமியார் ஒன்று வாங்கிவந்து கொடுத்தாங்க. இப்பவும் இருக்கு. என் காயின் கலெக்க்ஷன் இருக்கு அதுல.

‍- இமா க்றிஸ்

hello friends புதிதாக வாங்கிய மண்பானையில் சமைப்பது எப்படி பழக்கபடுதுவது எப்படி please tell me

http://www.arusuvai.com/tamil/node/7733 - கருத்துகளை படிங்க, செல்வி சொல்லி இருக்காங்க.

http://www.arusuvai.com/tamil/node/27983 இந்த லின்கும் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

sennudaya santhekathai thayavu seithi theerthu vaiyunghal enghalukku thirumana maagi 4 maathanghal aahinrathu ithu varaikum entha positive aana results kidaikka villai; ennudaya santhaegam enna venraal ex: ennudaya wife ku period tym mudinthu 10 naatkalaaki vittathu innum menses varavillai intha naeranghalil udaluravu vaithuk kondaal yaethaavathu paathipu yaetrpada chances undaa? allathu udaluravu kollaamalirukkavaendumaa pls ur urgent aadvice.

Jafeer ungaluku doubt erundha home test aduthu parunga pathutu Dr poi consult pannuga neenga test pathutu contact vachikonga athoda entha blog la kaetkakudathuga sareya

ஹாய்,

//நல்ல‌ பதிவு//பாராட்டியமைக்கு நன்றி.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

//நல்ல‌ பகிர்வு///பாராட்டியதற்கு நன்றிபா.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அன்பு சகோதரி,

என் பதிவை படித்து கருத்து கொடுத்தமைக்கு நன்றி.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

என் பதிவுக்கு கருத்து கொடுத்தமைக்கு நன்றிமா

ரஜினிபாய்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
///உலகம் உருண்டை மீண்டும் மண்பானைக்கு எல்லோரும் மாறிட்டு இருங்காங்க‌///நம்பிக்கை கொடுத்தமைக்கு நன்றிபா.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

//சலசலக்கும் மணிகளின் ஓசையுடன் கூடிய‌ சிறிய‌ குடம்//ஆமாங்க‌, எனக்குக்கூட‌ அந்த‌ மணி சத்தம் மிகவும் பிடிக்கும்.நன்றிபா.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

thankyou vanitha madam manpaanaiyil kulambu mattum than vaikalaama illai poriyalum seiyyalama

ரஜினி மேடம், பித்தளை போனதுக்கு காரணம், ஈயம் பூசாமல் பயன்படுத்தக்கூடாது என்பதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

பிளாஸ்டிக் லன்ச்பாக்ஸ் எனக்கு ஏனோ மனம் ஒப்புவதில்லை. மிகவும் சூடாக கொடுத்தால் உருகிவிடுமோ என்று ஒரு பயம் உள்ளூர இருந்து கொண்டே இருக்கும். என்னதான் தரமானதாக இருந்தாலும், நம்மூர் கொதிக்கும், குழம்பிற்கும், சாதத்திற்கும் ஒத்து வருமானே தோணும்.
மைக்ரோவேவ் சேஃப் னு போட்டிருந்தாலும் ஒரு பயம்.
நல்லதொரு பதிவு மேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.