தலைவலி

Hai, மைகரைண் தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும்?

முதல்ல‌ டாக்டரை பார்க்கணும் :) நிஜமா தாங்க‌. தலைவலி என்பது அடிக்கடி வந்தா நிச்சயம் கவனிக்கப்பட‌ வேண்டியது. பெரிய‌ பெரிய‌ பிரெச்சனைகளின் அறிகுறியா இருக்கலாம்னு படிச்சிருக்கேன், டாக்டர்களும் சொல்றாங்க‌. அதனால் முதல்ல‌ வீட்டு வைத்தியம் முயற்சி பண்ணாம‌ ஒரு கம்ப்ளிட் செக்கப் போயிட்டு வாங்க‌. எதனால் என்று காரணம் கண்டுவிட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்பவாச்சும் வந்தா பனடோல் ஓகே. அடிக்கடி வந்தா போய் காட்டுறதுதான் நல்லது. ஸ்ட்ரெஸ் ரிலேட்டட், டென்ஷனல் ஹெட்டேக் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கு. சில சீரியஸான வியாதிகளுக்கெல்லாம் தலைவலிதான் ஆரம்ப அறிகுறியாக இருக்கு. நீங்களாவே மைக்ரெய்ன் என்று தீர்மானிக்காம போய்க் காட்டணும்.

‍- இமா க்றிஸ்

வனி, இமாம்மா என்ன ரெண்டு பேரும் இப்படி பயமுறுத்திரீங்க... எனக்கு பொதுவாங்க ட்ராவலிங்ல தலைவலி வருது, அப்பறம் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருந்தாலும் தலைவலி வருது, அதுக்காக இல்லாத வேலைகளை எல்லாம் இழுத்துபோட்டு செய்திட்டு இருப்பேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

:-) யார்னாலும் சும்மா தலைவலின்னா வீட்ல ரெண்டு பனடோல் போட்டு தண்ணி குடிச்சுட்டு விட்டிருப்பீங்க. இங்க வந்து கேட்கவா போறீங்க? :-) அப்படில்லாம் விளையாட்டுக்குக் கேட்டிருந்தா... கர்ர்... பதில் சொல்லி என் டைமை வேஸ்ட் ஆக்கிருக்கேன்னு எடுத்துப்பேன். :-)
இங்க வந்து கேட்டா இப்படி ஒழுங்காதான் பதில் சொல்லுவோம்.

ஆமா, ப்ரேமாதான் ஃபர்சானாவா!! தெரியாமப் போச்சே!! :-)

என்ன தலைவலின்னாலும், ட்ரீட்மண்ட் எடுத்தாலும் கூட... சூடா ஏதாச்சும் குடிச்சுட்டு தூங்கலாம். ரெஸ்ட் நிறையவே ஹெல்ப் பண்ணும்.

‍- இமா க்றிஸ்

//ட்ராவலிங்ல தலைவலி வருது,// இருக்கலாம். முதல் நாள் விழிச்சு இருந்து பாக் பண்ண வேணாம். அதுல்லாம் நேரத்துக்கு முடிச்சுரணும். ட்ராவல் பண்றப்ப தூங்காதீங்க. வழில போதுமான அளவு தண்ணீர் குடிக்கணும். சாப்பிடணும். வெயில் படும் பக்கம் இருக்காதீங்க. அசுத்தம்னு பார்க்காம கிடைக்கிறப்ப டாய்லட் போயாகணும்.

//வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருந்தாலும் தலைவலி வருது,// ;) பொய். ;)) சும்மா உட்கார்ந்து இருக்கீங்களா? இல்லைல்ல! அப்போ டீவீ பார்ப்பீங்க அல்லது லாப்பில இருப்பீங்க. சரிதானே! ம்... தனியா இருக்கிறப்ப எனக்கும் முன்னால வரும். :-) இதேதான் பண்ணுவேன். தனி ஆளுக்கு சமைக்க சோம்பலா இருக்கும். தனிய சாப்பிட பிடிக்காது. நேரம் போறது தெரியாம சாப்பாடு தண்ணில்லாம் மிஸ் பண்ணிட்டு ஏன்னே புரியாம உட்கார்ந்து இருப்பேன். பாவம் இமா, கம்பெனி கொடுக்கலாம்னு தலைவலி வரும். பிறகு என்ன பண்ணாலும் போகாது. தூங்கவும் முடியாது. ஒரு நாள் விடாம வாந்தி கூட வந்துது. மெதுவா என் தப்பு இது என்று புரிஞ்சுது. ட்ரிக்ஸ்சியை வாங்கினது கூட இதுக்காகத்தான். என்னை நீளமா உட்கார விடமாட்டாங்க மேடம். இடைல போய்ப் பார்க்கணும். இப்ப தனிமை தலைவலி வரது கிடையாது.

‍- இமா க்றிஸ்

Headache can be due to many reasons. Common are stress related. Adhiga velai, kavalai, mana ulaichal, kobam, azugai.. idhellaam kuuda karanam. Working for a long time in computers and looking at your mobile strains your eyes and causes headache and nausea.

I get headache even for perfume smell. Travel sickness is also common. But there are many other reasons for headache. Such as stroke, head injury, high blood pressure, seizures, tumour etc. They are very severe, frequent and continuous. Idhanaal dhaan drs thalaivalinaa 100 kelvi ketu reason therinjikka try panraanga. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் இதையே அறுசுவை ஆங்கில தளமா மாத்திட்டாங்களான்னு சந்தேகமா வருதே!

‍- இமா க்றிஸ்

:( no laptop

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளின் கருத்துக்கு நன்றி

Udambil edhavadhu prachanai irundhal dhan thalai valika aramikum , thalai vali varum poludhu siridhu neram edhayum ninaikamal velai seyalam utkara vendum edharkaga marundhu sapidavendam . edhu ungalauku evalavu natkalaga irukindradhu endru soningana tips solrathuku use ful ah irukum

Regards
Mani

மேலும் சில பதிவுகள்