help

நான் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி..நான் ஏதாவது ஒரு பிரிவில் சாதிக்க நினைக்கிறேன் ஏதாவது ஐடியா சொல்லுங்கலேன்......

டியர் பிரேமா அவர்களுக்கு, தங்கள் கேள்வியை வாசித்தவுடன் என் சிந்தனையில் ஒடியது இந்த பாடல் வரிகள் தான். அதாவது
"முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து,
முழுமூச்சாய் அதற்க்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி, என்ற இந்த பாடல் விவசாயி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடலை ஒரு முறைக்கு நான்கு முறை பாடிப்பாருங்கள் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.
மேலும் தாங்கள் ஏதாவது ஒரு பிரிவில் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பை விட்டு எதில் தங்களால் சாதிக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் என்னை கேட்டால் என் தகுதிக்கு ஏற்றது போல் இட்லி கடைப் போட்டால் பெரிய அளவிற்க்கு வந்து விடலாம் என்று ஐடியா கொடுப்பேன். ஆனால் அது உங்களுக்கு ஒத்து வராமல் போகலாம். ஆக இப்படியாக அவரவர்களுக்கு தெரிந்த ஐடியாக்களை தெரிந்துக் கொள்வதை தவிர்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த, பிடித்த பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகு இது போன்ற ஐடியாக்களை பலரிடத்தில் கட்டாயம் கேட்டு பலரின் ஆலோசனைகளை பெற்று அதையும் நன்கு ஆராய்ச்சி செய்த பின்பு தான் களத்தில் இறங்க வேண்டும்.
எல்லாவற்றும் மேலாக தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்ச்சி, என்ற இந்த மூன்று தகுதியுடைய எவறும் எதிலும் சாதிப்பார்கள் நீங்களும் சாதிப்பீர்கள், வெற்றிப்பெறுவீர்கள், என்று கூறி வாழ்த்துகின்றேன். நன்றி.

மேலும் சில பதிவுகள்