சுபிதா கவிதைகள் - 8

கிறுக்கல்கள்...

மேக கூட்டமே... நீயும்
என்னவளை நேசிக்கிறாயோ?
அவளை பின் நோக்கியே நகர்கிறாயே...

அலையே... இன்னுமா நீ
என்னவளை காணவில்லை?
இப்படி ஓயாமல் பரிதவிக்கின்றாயே
அவளைக்காண...

கண்களே... உனக்கு
ஓவியம் வரையத் தெரியுமா என்ன?
நிமிடத்தில் வரைந்துவிட்டாயே
அவள் முகத்தை என் இதயத்தில்...

- M. சுபி

எப்படி சொல்வேன்?

நான் சுவாசிப்பதே உன்னை
நேசிப்பதால் தான் என்று,

தினம் தினம் நான் அனுபவிக்கும்
மரணவலிக்கு காரணம்
உன் பிரிவு தான் என்று,

இருந்தாலும்,

உன் நினைவு எனும்
சுகமான சுமையால் தான்
நான் உயிர் வாழ்கிறேன் என்று..
எப்படி சொல்வேன்?

- M. சுபி

நினைவுகள்...

உன்னை நான் பார்க்கவில்லை என்பது
என்னவோ உண்மைதான்.. ஆனால்
ஒரு நொடி கூட நினைக்காமல் இல்லை...

உன்னை மறக்கவும் முடியவில்லை..
நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை..
தோற்றுத்தான் போகிறேன்..
உன்னிடம் சந்தோஷமாக....

தனிமை கூட இனிக்கதான் செய்கிறது
உன் நினைவுகள் உடனிருப்பதால்...

என்னில் இருந்த உன் நினைவுகளை
யார் எடுத்து தெளித்தது வானில்
நட்சத்திரமாய் ஜொலிக்குதே...

மறைக்கப்பட்ட என் இதயத்தில்
செதுக்கப்பட்ட சிற்பங்களாய்
உன் நினைவுகள்...
காலங்கள் மாறினாலும் அழியாதது...

- M. சுபி

Comments

கிறுக்கல்கள்...
கவிதை மிக‌ அருமை.

இப்படிக்கு,
க‌.கவுசல்யா பிரவீன்

ஹாய் சுபி. எல்லா கவிதையும் சூப்பர். நினைவுகள் இன்னும் சூப்பர் .

Be simple be sample

மீண்டும் எனது கவிதை வெளியிட்ட‌ பாபு அண்ணாவிற்க்கும் ,
அறுசுவை டீம் க்கும் நன்றி......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

தோழி கெளசல்யா,
முதலில் பதிவிட்டதற்கும்,
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்க்கும் ரொம்ப‌ நன்றிங்க‌......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உங்கள் வருகைக்கும்,
பாராட்டிற்க்கும் ரொம்ப‌ தான்க்ஸ் அக்கா.....

ம்ம் உங்க‌ அளவுக்கெல்லாம் கவிதை வராது, ஏதோ கொஞ்சம் தான் ரேவா அக்கா வரும்....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஒய் திஸ் கொலைவெறி சுபி. ஏதோ நானே போஸ்ட் பண்ணறதால உங்க தலையெழுத்து இதெல்லாம் பார்க்கணும்னு. இப்படியெல்லாம் சொல்லி பீதியை கிளப்பப்படாது.

Be simple be sample

ரேவா அக்கா,
ச்சே ச்சே நான் பொய்லாம் சொல்லல‌ நிஜமா தான், உங்க‌ கவிதைல‌ ஒரு எபெக்ட் இருக்கு, அது உங்களுக்கு தெரியாதுங்கோ.......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//கண்களே... உனக்கு
ஓவியம் வரையத் தெரியுமா என்ன?
நிமிடத்தில் வரைந்துவிட்டாயே
அவள் முகத்தை என் இதயத்தில்///

உங்க‌ கவிதை தலைப்பு மாதிரியே ( எப்படி சொல்வேன் ) எவ்வள‌வு அழகான‌ ஆழமான‌ வார்த்தைகள் நு

என்ன‌ வரிகள் எப்படி இப்படியெல்லாம்....

//தனிமை கூட இனிக்கதான் செய்கிறது
உன் நினைவுகள் உடனிருப்பதால்...//

//மறைக்கப்பட்ட என் இதயத்தில்
செதுக்கப்பட்ட சிற்பங்களாய்
உன் நினைவுகள்...
காலங்கள் மாறினாலும் அழியாதது...//

உங்க‌ வரிகள் மேல‌ எனக்கும் இப்போ ஒரு கிறுக்கல் வந்தாச்சு

மூன்றுமே அருமை .... சொல்ல‌ வார்த்தைகள் இல்லை.
தொடரட்டும் உங்கள் பயணம் ... உங்கள் அடுத்த‌ கவிதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.. :)... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கண்களே... உனக்கு
ஓவியம் வரையத் தெரியுமா என்ன?
நிமிடத்தில் வரைந்துவிட்டாயே
அவள் முகத்தை என் இதயத்தில்...
சூப்பர் வரி சுபி

கனி வாங்க‌,
எங்க‌ உங்கள‌ ரொம்ப‌ நாளா ஆளைக்காணோமே?

\\எப்படி இப்படியெல்லாம்....\\\ என்ன‌ பண்ண‌ கனி சில‌ டைம் இப்படிதான் எதாவது தோணும்.......இங்கு சில‌, வராமல் ப‌ல‌ பேப்பரோட‌ போனதும் உண்டு.

\\\உங்க‌ வரிகள் மேல‌ எனக்கும் இப்போ ஒரு கிறுக்கல் வந்தாச்சு/// வரிகள் மேல‌ மட்டும் தானே.........

///மூன்றுமே அருமை .... சொல்ல‌ வார்த்தைகள் இல்லை.
உங்கள் அடுத்த‌ கவிதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்// நன்றி, கண்டிப்பாக‌ முயற்சி செய்கிறேன்.

இவ்ளோ ரசிச்சு படிச்சதற்கு ரொம்ப‌ நன்றிங்க‌.....சந்தோசமும் கூட‌.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நிகிலா,
உங்கள் வருகைக்கும், பதிவிற்க்கு நன்றி அக்கா...

\\சூப்பர் வரி சுபி\\ தான்க்ஸ் அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அனைத்து கவிதைகளும் ரொம்ப அருமைங்.
நினைவுகள் ரொம்ப அருமைங்க.

நட்புடன்
குணா

subima kavithaigal ellame super. Ipathan parthen un kavithaigal thodara en vazthukalma.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து..

உங்க வருகைக்கும்,
மேலான‌ கருத்திற்க்கும் ரொம்ப‌ நன்றி அண்ணா....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹே சத்யா,
என்னமா இது, நீ அறுசுவை பக்கம்லாம் வர்றீயா என்ன‌?
இவ்ளோ இதுலேயும் வந்து கமெண்ட் போட்டதுக்கும்,
உன்னோட‌ வாழ்த்திற்க்கும் தான்க்ஸ் டா ....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கவிதைகள் அனைத்தும் அருமை. நன்றி அழகு கவிதைகளுக்கு.

உன்னை போல் பிறரை நேசி.

கிறிஸ் அக்கா,
முதலில் தாமதமான‌ பதிலுக்கு ஸாரி,
உங்கள் நல்வருகைக்கும் , பாராட்டிற்க்கும் ரொம்ப‌ நன்றி அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

super pa