disposing old items

பழைய பொருள்களை விலைக்கு போடும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்ன செய்யலாம்

வீட்டிலேயே பத்திரப்படுத்தலாம். :-)

பழையப் பொருட்களை பணமாக்குவதை தவிர்த்து, கூடுதல் பணம் கொடுத்து புதியப் பொருளாக்கினால் மனக்கஷ்டம் குறையலாம்.

அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு கொடுக்கும்போது மனது கஷ்டப்படும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தெரிந்தவர்களுக்கோ அல்லது வீட்டில் வேலை செய்பவர்களுக்கோ இலவசமாகக் கொடுத்துவிடலாம். தானம் செய்த பெருமையும், புண்ணியமும் கிட்டும்.

அப்படியும் மனது கஷ்டப்பட்டால், அறைக் கதவை அடைத்துக்கொண்டு 'ஓ' வென்று அழுது தீர்த்து மனதை இலேசாக்கிக் கொள்ளலாம். ;-)

அட்டகாசம் பண்றீங்களே பாபுண்ணா....:,(:,(:,(

விளையாட்டா சொல்ற மாதிரி தெரிஞ்சாலும் நான் சொன்னது எல்லாமே சீரியஸ்ஸான ஆலோசனைகள்தாங்க.. மேலே சொன்னதில கடைசி ஒண்ணைத் தவிர மத்த மூணும் நான் செய்யற விசயங்கள்தான்.

அவர் என்ன மாதிரியானப் பொருட்கள்னு சொல்லாததால பொதுவா நான் பாலோவ் பண்ற விசயங்களை சொன்னேன்.

புத்தகங்கள் மாதிரியான பழைய பொருட்களை என்னால விலைக்கு போட முடியாது. அன்னைக்கு அஞ்சு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாங்கினதா இருந்தாலும், இன்னைக்கும் அதை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன். இரண்டு மூணு ஷெல்ஃப் நிறைஞ்சி வழியுது. (இரவல் கொடுத்து வராமல் போனது இதைவிட அதிகமா இருக்கும். :-( )

வாகனம், சமையல் உபகரணம், பாத்திரங்கள் மாதிரியான விசயங்களை விலைக்குப் போட்டு காசாக்கிறதைவிட, கடையில கொடுத்து கூட கொஞ்சம் பணமும் கொடுத்து புதுசா பொருள் வாங்கிடலாம். இது நிறைய பேர் செய்யற விசயம்.

ஆயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள ஷர்ட், பேண்ட்டா இருந்தாலும் வெறும் பத்து ரூபாய்க்குதான் எடுத்துப்பாங்க. இல்லேன்னா பழைய துணின்னு எடுத்துக்கிட்டு எதாவது ப்ளாஸ்டிக் சாமான்தான் கொடுப்பான். செரோக்கி ஷர்ட்டையும் பேஸிக் பேண்டையும் கொடுத்து இப்படி மதிப்பே இல்லாத பொருளை வாங்குறதைவிட, அதை இலவசமா யாருக்காவது கொடுத்து சந்தோசத்தை அனுபவிக்கலாம். இதுவும் நான் செய்யற விசயம்தான்.

ஆக, இது எல்லாம் விளையாட்டான ஆலோசனைகள் இல்லை. :-)

அட்மின் அவர்கள் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்.

விலைக்கு கொடுப்பதை விட தானமாக கொடுக்கலாம். எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் துணி, பழைய பாத்திரம் போன்றவற்றை உதவி தேவை படுபவர்களுக்கு கொடுத்து உதவலாம்.

கொடுப்பதால் யாருக்கோ உதவி செய்தோம் என்ற மனநிறைவே இருக்குமே தவிர கஷ்டம் கண்டிப்பாக இராது. அதனால் கதவை அடைத்து அழும் சீன் இருக்காது என்று நம்புவோமாக ;-)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்