தேங்காய் சோறு

தேதி: January 7, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 400 மில்லி
தேங்காய்ப்பால் - 650 மில்லி
மஞ்சள்தூள்- சிறிது
உப்பு - தேவையான அளவு
பொடி செய்வதற்கு:
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்


 

பெரிஞ்சீரகம், வெந்தயம், கொத்தமல்லி விதை மூன்றையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து தட்டிக்கொள்ளவும்.

குக்கரில் தேங்காய்ப்பால் ஊற்றி அரைத்தப் பொடியைப்போட்டு மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பின்னர் அரிசியை கழுவி போட்டு குக்கரை மூடவும். வெயிட் போட்டு குறைந்த தீயில் வைத்து 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடவும்.
சுமார் 15 நிமிடம் கழித்து திறக்கவும்.
---------------------


மேலும் சில குறிப்புகள்