அவகடோ ஸ்மூத்தி

தேதி: September 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அவகடோ (Avocado) - ஒன்று
வாழைப்பழம் - ஒன்று
டேட்ஸ் - 10
க்ரீம் (Full Cream) - 50 மில்லி (விரும்பினால்)
பால் - 250 மில்லி


 

பழங்களின் தோலை உரித்துவிட்டு, விதைகளை நீக்கி மிக்ஸி ஜாரில் அல்லது ஜூஸரில் போடவும்.
அத்துடன் க்ரீமைச் சேர்க்கவும்.
பிறகு சிறிதளவு பால் சேர்த்து நன்கு கூழாக அடித்துக் கொள்ளவும்.
கூழான கலவை கெட்டியாக இருப்பின், மீதமுள்ள பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.
ஆரோக்கியமான அவகடோ ஸ்மூத்தி ரெடி.

விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்தும் அடிக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் பட்சத்தில் க்ரீம் (Full Cream) சேர்த்து அடிக்கலாம். பெரியவர்களுக்கெனில் பால் மட்டுமே போதுமானது.

விரும்பியவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். நான் சர்க்கரைக்குப் பதிலாக வாழைப்பழம் மற்றும் டேட்ஸ் சேர்த்துள்ளேன்.

காலை உணவை உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சத்தான பானம் இது. கர்ப்பிணிகளுக்கும் மிக நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்மி ட்ரிங்க் சூப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருமையா இருக்கு வாணி சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நல்லா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

So yummy i like this smoothie

ஹெல்தியான ஸ்மூத்தி....
பார்க்கும்போதே குடிக்கத்தோணுது.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரொம்ப ஹெல்தி ஸ்மூதி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கனி, உமா, பாலநாயகி, SHAIKNASEERA, Appufar, கவிதா, உங்களனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி