வெட்டுப் பலகாரம்

தேதி: September 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (4 votes)

 

பச்சைப் பயறு - அரை கிலோ
பச்சரிசி - கால் கிலோ
சீனி - அரை கிலோ
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
மேல் மாவுக்கு:
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
மைதா மாவு - ஒரு கப் (அ) ஒன்றேகால் கப்
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் ஃபுட் கலர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க


 

பயறை சுத்தம் செய்து பொன்னிறமாக வறுத்து ஆறவிட்டு அரைத்து, சலித்து வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துச் சலித்துக் கொள்ளவும். சலித்த அரிசி மாவில் மேல் மாவுக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள மாவைத் தனியாக வைக்கவும். தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் பயறு மாவு, தனியாக எடுத்து வைத்துள்ள அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தோசை மாவைவிட சற்று நீர்க்கக் கரைத்து வைக்கவும்.
சீனியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மெல்லிய கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள மாவுக் கலவையில் சூடான சீனிப் பாகை ஊற்றி பிசையவும் (பாகு முழுவதும் மாவுக்கு சரியான அளவில் இருக்கும்).
பிசைந்த மாவை பெரிய உருண்டையாக உருட்டி, சப்பாத்திப் பலகையில் மாவு தூவி கால் அங்குல அளவு தடிமனாக தட்டி, டயமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இதே போல் மீதமுள்ள மாவிலும் தடிமனாக தட்டி வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெட்டிய துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரிதெடுக்கவும். (மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டும் பொரித்தெடுக்கலாம்).
சுவையான வெட்டுப் பலகாரம் (பயறு பலகாரம்) & பயறு உருண்டை தயார்.

இலங்கையில் மிகவும் பிரபலமான பண்டிகை பலகாரம் இது. தீபாவளிக்கு இந்தப் பலகாரம் இல்லாத வீடுகள் அரிது.

மாவு சூடாக இருக்கும்போதே தட்டி வெட்டிக் கொள்ளவும். அதிகம் ஆறினால் தட்ட முடியாது. ஆறிவிட்டால் ஒன்று (அ) இரண்டு தேக்கரண்டி அளவு வெந்நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். சீனிக்குப் பதிலாக வெல்லத்திலும் பாகு காய்ச்சலாம்.

பலகாரங்களை எண்ணெயில் போட்டதும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும். அதை எண்ணெயில் பிரிக்க முயற்சிக்க வேண்டாம். அப்படி செய்தால் பலகாரம் உடைந்து எண்ணெய் முழுதும் வீணாகிவிடும் பொரித்தெடுத்து சற்று ஆறியதும் பிரித்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நலமா... பேசி ரொம்ப‌ நாள் ஆய்டுச்சு ல‌...:)

ரெசிபி சூப்பர்.. நேரம் கிடைக்கும் போது ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் அக்கா
நான் தான் முதல் பதிவு சோ ரவுண்ட் ஆ இருக்குற‌து எல்லாமே எனக்கு தான் ... டீல் ஒகேயா...?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Nalla iruku
Last plate super..

வித்தியாசமான குறீப்பு. சூப்பரா இருக்கு.

Be simple be sample

ஹாய் உமா...,
பெயரை.பார்த்தால் டெர்ரர்ரா இருந்தாலும்,செய்முறை வித்தியாசமாகவும்,சூப்பராகவும் இருக்கு தோழி....
நல்ல குறிப்பை பகிந்து கொண்டமைக்கு நன்றி.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய் கனி. ஆமா பேசி ரொம்ப ரொம்ப நாளாயிடுச்சி. சௌக்கியமா? டீல் ஒகே எடுத்துகங்க. உங்களுக்கு இல்லாததா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி ரேவ்ஸ்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப டெரர்ரா இருக்கோ? ஆனா டேஸ்ட் நல்லாருக்கும். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பார்த்து எவ்வளவு நாளாகுது... வெல்கம் பேக் :) உங்களை விட நான் உங்க குறிப்புகளை தான் ரொம்ப மிஸ் பண்ணேன் ;) ஒரு இலங்கை குறிப்போட வந்து அசத்திட்டீங்க. நீங்க பயன்படுத்தி இருக்கிறது தோலோட உள்ள பயிறு தானே? கண்டிப்பா ட்ரை பண்ணிடுறேன் இந்த மாத கடைசியில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி உங்க அன்புக்கும், அன்பான பதிவுக்கும். ஊர்லருந்து (லண்டன்) நாத்தனார் வந்துருந்தாங்க. ஒரே பிஸி அதான் வர முடியல. நான் யூஸ் பண்ணிருக்கது தோலோட உள்ள பயறுதான் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரெசிபி பெயர் டெரரா இருந்தாலும்,
ரொம்ப‌ இனிப்பா நல்லா இருக்கு,
இது புது ரெசிபியா இருக்கு கண்டிப்பா ட்ரை பண்ரேன் அக்கா...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப நன்றி சுபி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இந்த பலகாரத்தைப் பார்க்கையில் முந்திரி கொத்து நினைவுக்கு வந்து போகிறது. பண்டிகை வரட்டும், செய்துப் பார்க்கிறேன்.
வித்தியாசமான பலகாரம்.