பாச்சோறு

தேதி: January 7, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 100 மில்லி
சீனி - 400 மில்லி
தேங்காய் - 1 சிறியது
முந்திரி - 10
பாதம் - 10
பிஸ்தா - 10
ஏலம் - 4
வெனிலா எஸன்ஸ் -1 தேக்கரண்டி


 

முதலில் அரிசியை சம அளவு தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடாக வேகவைத்துக்கொள்ளவும்

பின் அதில் தேங்காயை துருவி போட்டு 10 நிமிடம் மடங்கவிடவும் பின் சீனியைப்போட்டு கிளறவும்.

பாதம்,பிஸ்தா தோலை நீக்கி,பாதம்,பிஸ்தா,முந்திரி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

பின் நறுக்கிய பருப்புகளை போட்டு எஸன்ஸ் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கவும்.


இந்த பாச்சோறு நாம் சாப்பாட்டுக்குசாப்பிட இயலாது.இது ஒரு இனிப்பான பண்டம்

தேவையானால் அரிசியின் அளவைக்கூட்டியும் செய்யலாம்.

அரிசியின் அளவைக்கூட்டும் போது மற்ற எல்லா பொருள்களின் அளவையும் கூட்டிக்கொள்ளவும்

மேலே சில்வர் பேப்பர் போட்டு அலங்கரிக்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இன்னும் ஒரு மாதத்தில் Tomisato city located in Chiba(Near to Tokyo) வர உள்ளேன். அங்கு இந்தியன் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் கிடைக்குமா. Thanks in advance.

நலமாக இருக்கிறீர்களா. மன்னிக்கவும் தாங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தர முடியவில்லை ஏன் என்றால் நான் இருப்பது osaka வில்
நன்றி.

அன்பு கதீஜா,
நலமா?மகன் நலமா?எப்பொழுது இந்தியா வருவீர்கள்.நீங்கள் கொடுத்திருக்கும் இந்த பாச்சோறு குறிப்பு போலவே நாங்களும்செய்வோம்.பாஸ்மதி அரிசியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.காயல் பாச்சோறு என்பது எங்களூர் காரர்களுக்கு ரொம்ப இஷ்டம்.வளைகாப்பு வைபவத்திற்கு காயல் காரர்களை வைத்து இந்த காயல் பாச்சோறு செய்வார்கள்.அதில் இதை விட அதிகமாக தேங்காய் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன்.அந்த குறிப்பு தெரிந்தால் போடுங்களேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website