பச்சை நெல்லிக்காய் ஊறுகாய்

தேதி: September 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய நெல்லிக்காய் - 10
காய்ந்த மிளகாய் - 20 - 24
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - அரை கப்
கல் உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிது
கடுகு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கல் உப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடி செய்து கொள்ளவும். நெல்லிக்காய்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, பொடித்து வைத்துள்ள பொடியைப் போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
அதனுடன் நெல்லிக்காய்த் துண்டுகளைப் போட்டுக் கிளறி எடுத்து வைக்கவும்.
சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார். தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன். அத்துடன் ஊற, ஊற மிகவும் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிபி சூப்பர் :)

சும்மாவே நெல்லிக்காய் ரொம்ப‌ பிடிக்கும் இப்போ ஊறுகாய் செய்து சாப்பிட்டா சூப்பர் ல‌

இது தான‌ அரை நெல்லிக்காய்னும் சொல்லுவோம் ..? :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பர் செய்து பார்க்கிறேன்

10நெல்லிக்காய்க்கு 20,25 மிளகாய் காரசாரமா இருக்குமே. கெட்டுப் போகாம‌ இருக்குமா?

இந்த‌ ரெசிபி ஜெயந்தி மேடம் கொடுத்தது உங்கள் கேள்விக்கு அவங்கப் அதில் கொடுப்பாங்க‌.. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மன்னிக்கவும் நீங்க‌ போட்ட‌ குறிப்புனு நினைச்சு சொல்லிட்டேன். திருத்த‌ முடியவில்லை.

பர‌வாயில்லை விடுங்க‌ எதுக்கு மன்னிப்பெல்லாம்... உங்கள் கேள்விக்கு விரைவில் பதில் வரும் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனது குறிப்பினை வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
ஜேமாமி

மிக்க நன்றி.

இது அரை நெல்லிக்காய் அல்ல. பெரிய நெல்லிக்காய்.

அரை நெல்லிக்காய் சின்னதா இருக்கும்.
அன்புடன்
ஜேமாமி

நான் ஒரு நெல்லிக்காய்க்கு இரண்டு வீதம் 10 நெல்லிக்காய்க்கு 20 + ஒரு 2 சேர்த்து 22 மிளகாய் போட்டேன். நல்லெண்ணெய் கொஞ்சம் கூட விட்டால் கெட்டுப் போகாது. அத்துடன் நான் பிரிட்ஜ்ல் வைத்து விட்டேன். அதனால் கூட கெட்டுப்போகாமல் இருந்திருக்கலாம்.

மன்னிப்பெல்லாம் எதற்கு. இது ஒன்றும் தவறே இல்லை.

வாழ்க வளமுடன்

அன்புடன்
ஜேமாமி

விளக்கத்திற்கு மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். நெல்லிக்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

மாமி வணக்கம். நெல்லிக்காய் ஊறுக்காய் சூப்பரோ சூப்பர். இங்கு பச்சை கிடைக்காது :( தற்போது ப்ரோசன் வைத்திருக்கிறேன்.......அதில் ட்ரை பண்ண போறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!