உல்லன் மேட் - பாகம் 2 - பின்னல் பொருட்கள் - அறுசுவை கைவினை


உல்லன் மேட் - பாகம் 2

சுபத்ரா
திங்கள், 08/09/2014 - 11:34
Difficulty level : Medium
3.333335
9 votes
Your rating: None

 

  • விரும்பிய நிற உல்லன் நூல் - 2 (அ) ஆரஞ்ச் - ஒன்று, பச்சை - ஒன்று
  • குரோசே ஊசி
  • கத்தரிக்கோல்

 

பிறகு ஏதாவது ஒரு முனையில் பச்சை நிற நூலை முடிச்சுப் போட்டு இணைத்து, 4 சங்கிலிப் பின்னல்கள் பின்னவும்.

பிறகு ஊசியில் நூல் சுற்றி படத்தில் உள்ளவாறு முதல் சங்கிலியில் ஊசியை விட்டு, நூல் சுற்றி இழுத்து ஒரு இரட்டைக் குரோசே பின்னல் பின்னவும்.

இந்த பின்னல் இதுவரை பின்னிய பின்னலைவிட இன்னும் சற்று தளர்வாகவே இருக்க வேண்டும்.

இப்போது படத்தில் உள்ளது போல் ஊசியை அதற்கு கீழ்பக்கமுள்ள பின்னலின் இடைவெளியில் விடவும்.

பிறகு படத்தில் உள்ளது போல் ஊசியில் நூல் சுற்றி இழுக்கவும்.

பிறகு மீண்டும் ஊசியில் நூல் சுற்றி இழுத்து ஒரு ஒற்றைக் குரோசே பின்னல் (Single Crochet) பின்னவும்.

ஒற்றைக் குரோசே பின்னல் பின்னியதும், 4 சங்கிலிப் பின்னல்கள் பின்னிக் கொள்ளவும். ஏற்கனவே பின்னியது போல ஊசியில் நூல் சுற்றி, 4 சங்கிலிகளில் முதலாவதாக உள்ள சங்கிலியில் ஊசியைவிட்டு ஒரு இரட்டைக் குரோசே பின்னல் பின்னவும்.

இதே போல் கீழ்பக்கமுள்ள பின்னலின் இடைவெளியில் ஒரு ஒற்றைக் குரோசே பின்னலும், பிறகு 4 சங்கிலிப் பின்னல்கள் பின்னி, அதில் முதலாவது சங்கிலியில் ஒரு இரட்டைக் குரோசே பின்னலும் எனத் தொடர்ந்து பின்னிக் கொண்டே வரவும்.

இப்படியே இந்தச் சுற்று முழுவதும் (ஆரம்பித்த இடத்திற்கு வரும் வரை) பின்னவும்.

ஆரம்பித்த இடத்திற்கு வந்ததும், ஊசியை முதல் பின்னலின் மேலுள்ள சங்கிலியில் விட்டு, ஒரு முடிச்சுப் போட்டு நூலை நறுக்கிவிடவும்.

படத்தில் உள்ளது போல் ஒரு பச்சை நிறக் குஞ்சமும், 4 ஆரஞ்ச் நிறக் குஞ்சங்களும் செய்து கொள்ளவும்.

ஆரஞ்ச் நிற குஞ்சங்களை மேட்டின் நான்கு முனைகளிலும் கட்டி விட்டு, பச்சை நிறக் குஞ்சத்தை நடுவில் கட்டிவிடவும்.

இதே போல் பூ செய்தும் நடுவில் கட்டிவிடலாம். இந்த மேட்டில் ஒரு நிறத்தில் இரண்டு சுற்றுகள், பிறகு மூன்று சுற்றுகள், நான்கு சுற்றுகள் என பின்னியுள்ளேன். இதே போல் உங்கள் விருப்பதிற்கேற்ப பின்னலாம். (அல்லது) ஒரே நிறத்திலும் பின்னலாம்.

அழகான உல்லன் மேட் தயார்.

முந்தைய பகுதிக்கான லிங்க் : உல்லன் மேட் - பாகம் 1

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பின்னல்களுக்கான செய்முறை லிங்க்: அடிப்படை குரோசே பின்னல்கள்


subathra

Romba super :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுபத்ரா

ரொம்ப அழகா இருக்குங்க.... சூப்பர்....

சந்தேகம்

என்னுடய‌ பதிவுகலை எப்படி upload செய்வது. please help me.

Woolen mat

Subathra nice work :)

Kalai

டீம்

பின்னல்களை எண்ணும் போது முடிந்த சங்கிலிகளை மட்டும் எண்ண வேண்டுமா அல்லது ஊசி கோர்த்துள்ள சங்கிலியையும் சேர்த்து எண்ண வேண்டுமா?

Priya Jayaram

ஊசி கோர்த்துள்ள சங்கிலியைச் சேர்க்காமல், முடிந்த சங்கிலிகளை மட்டும் எண்ண வேண்டும்.

அறுசுவை டீம்

நன்றி டீம்

மேலும் பல பயன் தரும் பின்னல் பொருட்களை சொல்லி தாருங்கள்

nice

nice