நெத்திலி மீன் குழம்பு

தேதி: September 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நெத்திலி மீன் - முக்கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
கத்தரிக்காய் - 2
மாங்காய் - பாதி
முருங்கைக்காய் - ஒன்று
பூண்டு - 2 பற்கள்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புளிக் கரைசல் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணேய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மீனைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கத்தரிக்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்காயை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைய வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் இக்கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு தூள் வகைகளைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.
அத்துடன் நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை கொதிக்கத் துவங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீனைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
தேங்காய் சேர்க்காத, சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.

இக் குழம்பிற்கு சின்ன வெங்காயம் சேர்த்தால் அதிகச் சுவை கொடுக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிபி சூப்பரா இருக்கு . நம்ம‌ ஃபேவரிட் நெத்திலி மீன் குழம்பு சூப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Nethilifish veg pottu nan senjathuyilla puthusayiruku thanks.uk la nethilifish kidaikuma

Allahu akbar

குட்டி நெத்திலி மாலத்தீவில் போரடிக்கும் அளவு சாப்பிட்டிருக்கேன். இங்க‌ நெத்திலின்னு கிடைக்கிறது பிடிக்கிறதில்லை. நல்லா இருக்குங்க‌ குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கடைசி படம் அழகா இருக்கு வாணி. வித்தியாசமான பாத்திரம்.

‍- இமா க்றிஸ்

இது போல காய்கறி போட்டு செய்தது இல்ல . நல்லாஇருக்கு பார்க்கவே.நெத்திலி வாங்கும்போது செய்துபார்க்கிறேன்.

Be simple be sample

Nalla receipe

நெத்திலி மீன் குழம்பு சூப்பர்.

ஆனா அது என்னமோ ஆட்டு கால் சூப் மாறி கப்ல‌ வெச்சி இருக்கீங்க‌.

ஆனாலும் வித்யாசமா ரசிக்க‌ தோணுது. சூப்பர் வாணி.

நானும் இது மாதிரி தான் செய்வேன். ஆனா புளி கரைசல்லயே தூள் உப்புலாம் கலந்து சேர்ப்பேன். இதுவும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

தோழிகளே அனைவரின் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பதிவிற்க்கும் மிக்க நன்றி

ஹஜானிஷா
இந்தியாவிலிருந்து வரும் புரோஷன் நெத்திலி தான் இது, இங்கு இந்த வகை மீன்கள் கிடையாது.

பாலநாயகி
ஒரு மாறுதலுக்காக கப்பில் பறிமாரினேன்.