EPPADI PURIYA VAIPATHU?

enaku mrg agi 2 years aguthu. mrg ana puthithil irundhae enai en mamiyar en kanavarudan thaniyaga pesa vida matar. apadiyae pesinalum aluthu pulambi nangal ena pesinoam ena en kanavaridam kaetu therinthu kolvar. nan 2 matham karpamaga irundha pothu pirachanai undaki vitar. nan en amma veetuku sendru vitaen. en kanavarum ennai vandhu parkavillai. delivary mudindhu 4 natkal kalithu vandhu prthar. pinbu avar velai parkum oorukae enai kooti sendru vitar.angu irukumpothu en meethu anbagavum enaku udhaviyum seivar anal en mamiyar veetirku sendral apadiyae thalaikeelaka mari viduvar. ippoluthum kuda ennai pesi kasta paduthukirar. avar ovvoru varthai pesumpothum avalavu kastamaga irukiradhu. en kanavaritan sonnalum purinthu kolla mataengrar. nan ena seivathu... en kanavaruku epadi puriya vaipadhu?

kavalai padatheengappa.yenakkum same ithe problem than.naa ippo chennaila irukken.yennakkum kalyaanam agi 2 years aga poguthu.naa ippo 2 monthsa than nimmathiya irukken.mumbaila irukkara varaikkum yenakkum ithe pirachanaithan.so dont worry.ungalukkum nallathu nadakkum.unga husband kitta unga maamiyaar soldratha yethayum sollatheenga. sollama manasula kadavula ninachikittu pirarthanai pannunga,kandippa antha kadavul ungalukku nalla vazhi kaattuvaar. unga husbandukkum ungala paththi puriya vaippar.naanum pirarthanai seigiren.

அன்பு தோழி, இது போல‌ பிரெச்சனை பாதி வீட்டிலாவது இருக்கும். இல்லாதவங்க‌ தான் அதிர்ஷ்டம் பண்ணவங்க‌ ;) பல‌ ஆண்களுக்கு 3 முகம். ஆஃபீஸில் ஒன்னு, வீட்டில் மனைவியிடம் ஒன்னு, அம்மா முன் ஒன்னு. நான் ஒன்னு சொல்றேன் கேளுங்க‌. உங்க‌ கணவர் உங்களுடன் தனியாக‌ இருந்தபோது நல்லா தானே இருந்தார்? இந்த‌ க்ச்சமுச்சா சத்தமெல்லாம் இல்லை தானே? அப்படின்னா அவர் உங்கள‌ நேசிக்கிறார் தானே? அது போதாதா? அம்மா இங்க‌ எதாச்சும் ஏத்தி விட்டிருக்கலாம், இல்லன்னா அம்மா முன் இப்படி இருக்க‌ வேணும் மனைவின்னு உங்க‌ கணவர் ஏதும் எதிர் பார்க்கலாம். அதனால் அவருக்கே கூட‌ அவங்க‌ முன் இப்படி நடக்குதேன்னு கோபம் வரலாம்.

அம்மா ஒன்னுமே சொல்ல‌ மாட்டாங்கன்னு எல்லாம் நான் சமாதானம் சொல்ல‌ மாட்டேன். மருமகள் பிள்ளை உண்டானா மகன் எங்க‌ அவள் மேல‌ அதிகமா பாசம் காட்டி அவ‌ பக்கம் போயிடுவானோன்னு இந்த‌ காலத்திலும் நினைச்சு நடக்கும் மாமியார்கள் உண்டு, அனுபவம். அந்த‌ பீரியட்ல‌ இது போல‌ கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன், மகிழ்ச்சியா கழிக்க‌ வேண்டிய‌ கர்ப‌ காலம் கண்ணீரில் தான் போச்சு. இனி அதை நினைச்சு பயனில்லை. முடிந்த‌ விஷயத்தில் மூழ்கி இருக்கும் மகிழ்ச்சியை கெடுக்க‌ கூடாது. அவர் அன்பா இருக்காரா இப்போ என்பது தான் முக்கியம்.

சரி இதெல்லாம் பழங்கதை. நமக்கு தேவை ஒரு விஷய‌ தான், உங்க‌ கணவர் அன்பா இருக்காரா? இருக்கார் என்றால் மாமியார் முன் பேசுவதை கண்டு கொள்ளாமல் விடுங்க‌. முக்கியமா நீங்க‌ மாமியார் பற்றி குறை சொல்லாதீங்க‌. அவர்களை பற்றி தப்பா (அது சரியாவே இருந்தாலும் அவருக்கு தப்பு தான்) ஒரு வார்த்தை கூட‌ பேசாதீங்க‌. உங்க‌ மாமியார் பேசினாலும் பதிலுக்கு பதில் நிக்காதீங்க‌. இதெல்லாம் உங்க‌ கணவருக்கு உங்க‌ மேல் இருக்கும் அன்பை அதிகமாக்கும். உங்க‌ மேல‌ இருக்க‌ கோபத்தை குறைக்கும். கோபத்தை அடக்குறதும் உடம்புக்கு நல்லதில்லையாம், அதனால் தனியா போய் உட்கார்ந்து யாருமில்லாத‌ இடத்துல‌ உங்களுக்கு யார் மேல‌ கோபமோ அவங்களை நல்லா திட்டிக்கங்க‌ ;) முடிஞ்வசா அவங்க‌ பேரை சொல்லி கையில் கிடைக்குற‌ தலையனை போன்ற‌ நமக்கு வலிக்காத‌ பொருளை நாலு அடி போடுங்க‌. நமக்கு கோபம் போயிரும், இன்னும் கொஞ்ச‌ நேரம் தாக்கு பிடிக்கலாம்.

மாமியார் மேல‌ எல்லாம் கோபப்படுறது, அவங்ககிட்ட‌ சண்டை போடுறது, அதுக்காக‌ கணவரிடம் அழுவ‌து எல்லாம் ரொம்ப‌ பழைய‌ ஸ்டைல்ங்க‌. இந்த‌ காலத்துல‌ இதெல்லாம் பண்ணக்கூடாது தெரியுமா? ;) நீங்க‌ அழுது கணவ்ரிடம் சண்டை போடுவதை தான் உங்க‌ மாமியார் விரும்புறாங்கன்னா, அவங்க‌ முன் கோபமா கணவர் பேசினாலும் கண்டுக்காம‌ சிரிச்ச‌ முகமாவே இருங்க‌, மாமியார் பிபியை கூட்டி விடலாம். உடனே கணவரை சமாதானம் பண்ணி ஒரு சாரி சொல்லிடுங்க‌. காசா பணமா? ஒரு சாரி சொன்னா கணவரின் அன்பு கிடைக்கும் என்றால் சொல்லிட்டா போச்சு. சரி தானே?

மாமியார் காலம் வரை தானே இந்த‌ தொல்லை எல்லாம்? உங்க‌ கணவரை பெற்றவர் என்ற‌ ஒரே காரணத்துக்காக‌ மன்னிச்சு விட்டுடலாம் தானே? பாவம், போனா போகுது. சரியா? இதுக்கு எல்லாம் மனசை போட்டு குழப்பிக்க‌ கூடாது, குடும்ப‌ வாழ்க்கையில‌ இதெல்லாம் சாதாரணமப்பா. மாமியார் முன்னாடி கணவர் தட்டினாலும், மாமியாரே திட்டினாலும் "இந்த‌ கொசு தொல்ல‌ தாங்கல‌ நாராயணா" என‌ நினைச்சு சிரிச்சுகிட்டே இடத்தை காலி பண்ணிடுங்க‌ :) கோபம் போய் சிரிப்பு வந்துடும்.

nanum ipoluthu porumaiyagathan irukiraen. en padippai patriyum,en amma veetai patriyum ethavadhu pesi kondae irukirar. enaku en mamiyarudan pesavae pidikavaillai. annal en kanavar pesa solli varpuruthukirar. avarukaga pesavum seikiraen. anal en mamiyar nan pesiyapothum kuda 'pesamataenguthu' endru en kanavaridam solkirar.en mamiyar veetuku sendral engavadhu veliyil sella vendumenral enai poi permission kaetka solkirar. nan kaetal ethavadhu solli thittukirarkal. idherkelam en mamanarum udanthai.nan karpamaga irundha pothu pirachanaiyil en mamanar ennai divorce seimbadi en kanavarai varpuruthinarkal. en mamanarum ennai pesuvar.

மருமகள் பிள்ளை உண்டானா மகன் எங்க‌ அவள் மேல‌ அதிகமா பாசம் காட்டி அவ‌ பக்கம் போயிடுவானோன்னு இந்த‌ காலத்திலும் நினைச்சு நடக்கும் மாமியார்கள் உண்டு, அனுபவம். அந்த‌ பீரியட்ல‌ இது போல‌ கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன், மகிழ்ச்சியா கழிக்க‌ வேண்டிய‌ கர்ப‌ காலம் கண்ணீரில் தான்
போச்சு

idhea poldhan nanum iruthaen. aluthutaedhan irunthaen. en amma appa avlo kasta patanga. conceive irundhappa 2 masam varaikum en mamiyar veetil irundhaen. nalla sapitadhae illa .sapida ukandha apadi thituvanga mamanarum mamiyarum.apadiayae sapatai vaithu vitu vandhu viduvaen. anal andha samayathil en kanavarum enakku support aga illai.

மாமியார் மாமனார்ன்னு ரவுன்டு கட்டி திட்டிருக்காங்க‌ போல‌ ;) ஹஹஹா. என்னடா நாம‌ வருத்தமா சொன்ன‌ இந்த‌ பொண்ணு சிரிக்குதுன்னு நினைக்காதீங்க‌, இந்த‌ காலத்திலும் இப்படி மக்கள்னு நினைச்சா சிரிப்பு தான் வருது. உங்க‌ படிப்பு? நல்லா படிச்சிருக்கீங்களோ? இல்ல‌ படிப்பு போதலயா? எதுக்கு திட்டுறாங்க‌? உங்க‌ அப்பா அம்மாவை திட்டுறதுலாம் ஓரம் வைங்க‌... சம்பந்திங்களை திட்டாத‌ ஆட்கள் இருந்தா தான் ஆச்சர்யம். பெண்ணை பெற்றவர்களுக்கும் இதெல்லாம் முதல்ல‌ தான் ஷாக்கா இருக்கும், அப்பறம் அது அப்படி தான்னு விட்டுட்டு போயிருவாங்க‌, அதனால் அவங்களை பற்றி மனசுல‌ நினைச்சுகிட்டு இப்போ முகத்தை தூக்கி வைக்காதீங்க‌. அதென்ன‌ அம்மாகிட்ட‌ பெர்மிஷன் கேட்டு வெளிய‌ போறது?? ம்ம்... இந்த‌ பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் ஆகும் வரை வீட்டுக்கு அடங்கியே இருக்காதுகள், ஆனதும் பொண்டாட்டியை அடங்க‌ வைக்க‌ இம்புட்டு தில்லாலங்கடி வேலை பார்க்குறது. இப்படி போய் பெர்மிஷன் கேட்டு வெளிய‌ போகனுமா? போகாதீங்க‌. நீங்க‌ பெர்மிஷன் கேட்டுட்டு வந்து என்னை கூப்பிடுங்க‌, இல்லன்னா விடுங்க‌, நான் வீட்டில் இருக்கேன்னு சொல்லுங்க‌.

அப்பறம் மாமியாரிடம் பேசாம‌ இருக்குறது.... ம்ஹூம்... அது சரி இல்லையே. என்ன‌ இருந்தாலும் வயசானவங்க‌ தானே... சின்ன‌ பிள்ளைகள் போல‌ தான். விட்டுக்கொடுக்கலாம் நாம‌. உங்க‌ கணவர் முன்னாடி நீங்க‌ மாமியாரிடம் பேசினா மாமியார் "பேசல‌" என்று குறை சொல்ல‌ முடியாதே. பேசுங்க‌... மாமியார் காது வலிக்க‌ பேசுங்க‌. ;) அதுக்கு திட்டினாலும் வாங்கிக்கங்க‌. இப்போ உங்க‌ டார்கட் உங்க‌ கணவர் அன்பு தான்னா... மற்றதை பெருசா நினைக்காம‌ விட்டுப்போங்க‌. எப்போதாவது ஊருக்கு வரும் சமயம் தானே இந்த‌ தொல்லை... கொஞ்ச‌ நாள் பதவிசா இருந்துட்டு ஓடிடுங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi friend, elarum valkaila etha natkala kadathu than vathaganum. ugal kanavar ugaludan erukum pothu anbagaum pasamagaum erukirar allava? mikka sathosam.Amma munbu appadi eruthal ugalukum avarudaya ammakum mana kastam varum. en magan enai vida avan mannaivi,kulathi meethu athiga pasamum,anbum vaithulan endra enam vathu vidum.athu ugalukum ugal athaikum ediye enum edaiveli than athikam aakum. ethai thavirka than avar apadi nadathu kolkirar. epoluthum en maganuku en mel than athiga akkarai endru sathosa paduvar ugal athai. en vitilum epadi than nadakum. arambathil nanum kasta paten. pinbu than purithu konden. epoluthu etha sandaium elai,mana kasapum elai. en athai edam pesum pothu ugal mangan endru than kuruven. athuve avarkaluku oru sathosam.ethe pol nadathu kolugal ugal valkailum oru thirupam varum. thavaraga ninaika vendam en anupavathai kurinen.

நானும் லசக்ஷ்மி சொன்னதை வழி மொழியறேன் ;) உங்க‌ கணவர் நிஜமா அவங்க‌ அம்மாக்காக‌ அப்படி பேசுறாரோ இல்லையோ, உங்களுக்கு அவர் அப்படி பேசுற‌து நல்லது தான்னு நானும் ஒத்துக்குறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி புரிய வைப்பது? இந்த தலைப்பு எப்படி புரிஞ்சிக்கிறது? அப்படின்னு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண வர்றாங்கன்னு நினைக்காதீங்க. எல்லாருக்கும் இதுல கொஞ்சம் அனுபவம் இருக்கும் அதான்.
நீங்க சொன்ன எல்லா உங்க தரப்பு வாதத்தையும், நியாயத்தையும், அவங்களும், அவங்க தரப்புக்கு சொல்லி 'எப்படி புரிய வைப்பது' அப்படின்னு கேள்வியோட முழிச்சிகிட்டு இருப்பாங்க (உங்க கணவரும் தான்) புரிய வைப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா புரிஞ்சிக்கிறது ஈசி.

உங்க கணவர், உங்க பேர்ல அன்பா இருக்கார். சரியா. அவக அம்மா முன்னாடி, அவர், அவர் அம்மா பேர்ல இருக்கிற அன்பு குறையல அப்படிங்கிறத காட்ட முயற்சிக்கிறார். அத நீங்க புரிஞ்சிக்கோங்க. அத காட்ட முயற்சிக்கிறத, பார்த்து, நீங்க நம் பேர்ல அவர் அன்பு குறையுதுன்னு தப்பா நினைக்க வேண்டாம். புரிஞ்சிக்கோங்க.

உங்க மாமியார் பெரிய சிரியல் வில்லி மாதிரி இருப்பாங்களோ? கூடவே உங்க மாமனாரும் சப்போட்டா? பொதுவா தன் முதுமையில் தன் மகனை 'நம்பி' இருக்கும் பெற்றோர், அதும் ஒரே மகனை கொண்டிருக்கும் தாய் எனில் தன் மகனுக்கு தன் மீது இருக்கும் கரிசனை குறையாமல் இருக்க எண்ணுவது உண்டு. அதற்கு தன் போட்டியாளனை எவ்விதத்திலாவது மட்டம் தட்டுவதும் நடப்பதுன்டு. அதில் தான் உங்களை திட்டுவதும், குறை கூறுவதும் அடங்கும். இதில் நீங்கள் செய்ய வேண்டுவது என்னன்னா? நீங்க அவங்களுக்கு போட்டி இல்லன்னு நிருபிக்கணும். அதுவும் செயல்களினால.

எனக்கு என்ன தோணுதுன்னா, அததான் உங்க கணவர் நிருபிக்க முயற்சிக்கிராரோ அப்படின்னு. இருவரின் தனிமையில் உங்கள் பேரில் மிகுந்த அன்பு கொண்டிருக்கும் அவர், உங்க மாமியார் முன்னாடி, நான் எப்பவும் போல இருக்கேன்னு உங்க கணவர் செயல்ல காட்டுறார். வெளிய‌ போக அம்மாகிட்ட‌ பெர்மிஷன் கேட்கிறது, இப்பவும் நாங்க உங்களுக்கு கீழதான்னு காட்ட நினைக்கிறார். (இத பத்தி நான் என் கணவர்கிட்ட கேட்டதுக்கு, 'அவர் கணவர் மகன் அப்படின்கிற ரோல கரெக்டா செய்றார்' அப்படிங்கிறார், ஆனா கணவர் ரோல் கொஞ்சம் அடிவாங்குது. ஒருவேள உங்க கணவர் அம்மா செல்லமோ?) நீங்க என்ன பண்ணலாம். உங்க கணவர் போடுற நாடகத்துல, உங்க ரோல உங்க ரோல் என்ன அப்படிங்கிறத கேட்டு, சரியா செயிங்களேன். நீங்களும் மாமியார், மாமனார் கிட்ட நான் உங்க போட்டி இல்ல, அப்படிங்கிறத நிருபிக்க உங்க கணவரோட சேர்ந்து நாடகம் போட ஆரம்பிங்க. வசன, நடிப்பு ஒத்திகை எல்லாம் நீங்க தனிமைல இருக்கும் போது போட்டுக்கோங்க. உங்க நடிப்ப பார்த்து, எதிர் தரப்புல இருந்து வர்ற ரியக்சன்ல நீங்களே உங்கள பாராட்டிகளாம்.

நாடகம் எ.கா: (நன்றி: தோழி நிகிலா: எனக்குத் திருமணமான‌ புதிதில் என் மாமியார் பகலில் தூங்கக் கூடாது என்று என்னிடம் கூறியிருந்தார்.
நான் தூங்கி விட்டேன்.
மாமியாரும் என் கணவரிடம் சொல்லப் போவதாக‌ கூறினர்.
அன்று என் கணவர் வந்ததும் நான் அவரிடம், " அம்மா சொன்னதை மீறி நான் தூங்கி விட்டேன். இப்போது சாப்பிடும் போது உங்களிடம் கூறுவார்கள். நீங்களும் என்னை சத்தம் போடுங்கள். நானும் இனி தூங்க‌ மாட்டேன்" என்றேன். நான் அவ்வாறு கூறக் காரணம் என் கணவர் அம்மா செல்லம்.எனவே, என்னால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் இடையே எந்த‌ மனக்கசப்பும் வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக‌ இருந்தது தான்.
அப்படியே என் கணவரும் திட்ட‌ நானும் லேசா தலைவலி அதனால் தூங்கிவிட்டேன். இனி தூங்க‌ மாட்டேன் என்று கூறினேன்.
உடனே என் மாமியார் மனம் சமாதானமாக‌ "தலைவலின்னா தூங்கலாம்மா. பகலில் தூங்குவது வீட்டுக்கு ஆகாது. அதனால் சொன்னேன். மற்றபடி தலைவலின்னா தூங்கக் கூடாதுன்னு சொல்லமாட்டேன்" என்றார்.
அதன்பின் நானும் என், மாமியாரும் ஒற்றுமையாக‌ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவராக‌ கூட்டுக் குடும்பமாக‌ இருந்தோம்)

உறவுகளைக் காப்போம் - நம்ம சீத்தாம்மா எழுதின ப்ளாக்க கீழ உள்ள லின்க்ல படிங்களேன். http://www.arusuvai.com/tamil/node/29249

உன்னை போல் பிறரை நேசி.

Aangal amma permission ketu veliya poradhellaam nijamave enakku thonala. Pala aangal thirumanathukku pin ippadi nadikiraanga. Pudhusaa vandha manaivi mun avar than perrorukku adangina pillaiyaa kaati manaiviyaiyum adanga vaikkira pokkaa dhaan enakku theriyudhu. :P setup... nadagam. Manaivi than appaa amma mela mariyadhaiyaa irukanumnu panradhu. Aanaa adhuve thappaa ippadi mudiyudhu. Anbu ellaathaiyum maathum... idhai perrorum purinjikirdhillai pillaigalum purinjikiradhillai. Adaki vechaa dhaan marumaga nammai ozungaa vechirupaanu bayathai undu pannum poku palaridam irukku. Anbaa irundhaa kadaisi varai kuda irupaa marumaganu puriyuradhillai.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொல்றது உண்மை வனி சிஸ். ஒருத்தர் மேல நமக்கு நம்பிக்கை வந்தாதான், அவர் பேர்ல நம் அன்பும் முழுமையா போகும். ஆனா அந்த நம்பிக்கை வரவைக்க நாம கொஞ்சம் நடிக்கவும் வேண்டி இருக்கு. என்ன பண்ண.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்