முருங்கைக்கீரை ரசம்

தேதி: September 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

முருங்கைக்கீரை - அரை கப்
எலுமிச்சை - ஒன்று
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பூண்டு - 3 பற்கள்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மல்லித் தழை (காம்புடன்) - சிறிது
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - ஒன்று


 

முருங்கைக்கீரையுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளைச் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
நுரை பொங்கி வரும் போது உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு இறக்கவும்.
ஆரோக்கியமான, சுவையான முருங்கைக்கீரை ரசம் தயார்.

அவரவர் விருப்பத்திற்கேற்ப பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்த்தும் அரைக்கலாம்.

எலுமிச்சைக்குப் பதிலாக புளியை உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முருங்கைக்கீரை ரசம் ஹெல்தி டிஷ் சூப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலக்கலா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

செய்துட்டு சொல்லுங்க பாலநாயகி. நன்றி