என்ன வகை பெயிண்ட் அடிக்கலாம் வீட்டுக்கு .

ஹாய் மக்களே. எனக்கு ஒரு உதவி பண்ணுங்க. எங்க வீட்டுல ஒரு விஷேசம் வருது. அதனால வீட்டுக்கு பெயிண்ட் பண்ணப்போறோம். எந்த கம்பெனி பெயிண்ட் நல்லாருக்கும், அதை பத்தி சொல்லுங்கப்பா. வீடு சின்ன வீடுதான். ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் அவ்வளவுதான். எது மாதிரி அடிக்கலாம். புதுசா மார்க்கெட்ல எதுனா வந்திருக்கா. தொடர்ந்து ஒரே கம்பெனி பெயிண்ட் அடிச்சாதான் நல்லதுன்னு சொல்லறாங்க. செலவுக்கும் சிக்கனமா இருக்கணும். தொடர்ந்து சுத்தமா வைக்கறதுக்கு வழி சொல்லுங்க. ஏன்னா வீட்டுல குட்டிஸ் சுவத்துலத்தான் எழுதுறாங்கபா. டிப்ஸ் குடுத்துட்டு போங்க கண்ணுங்களா .

ஏஷியன் பெயிண்ட் நல்லாருக்கும். எது அடித்தாலும் ஒரு துணியால் துடைத்தால் குட்டீஸ் கிறுக்கல்கள் க்ளீன் ஆகனும் அது முக்கியம். அப்படீன்னா தொடர்ந்து சுத்தமா பராமரிக்கலாம்.

தான்க்ஸ் பா. ஆமாப்பா வீடுமுழுக்க கிறுக்கல்தான்.அதே போல் ஸ்வீட்ச் போர்ட் பக்கத்துலயும் கொஞ்சம் கரை ஆகிடுதுபா. இவனுங்க பண்ணற அலம்பல்தாங்கல நிகி.

Be simple be sample

//எந்த கம்பெனி பெயிண்ட் நல்லாருக்கும்// உங்க ஊர் ப்ராண்ட்ஸ் பற்றி சொல்லத் தெரியல.

//தொடர்ந்து ஒரே கம்பெனி பெயிண்ட் அடிச்சாதான் நல்லதுன்னு சொல்லறாங்க.// ஆமாம், அனுபவம் இருக்கு. ஒட்டாமல் சின்னச் சின்னத் தட்டலுக்கெல்லாம் கூட உரிஞ்சு போக சான்ஸ் இருக்கு.

// செலவுக்கும் சிக்கனமா இருக்கணும்.// மேலே சொன்ன ஐடியாவே சிக்கனம்தான் ரேவ்ஸ். ;) பெய்ண்ட் உரிஞ்சு, திரும்ப சுரண்டி பெய்ண்ட் பண்றது இரட்டிப்பு செலவு. ஒரே தரமா சரியானதை, முன்னால பயன்படுத்திய ப்ராண்டை அடிக்கிறது சிக்கனம்தான். கலர் மாற்றுறது... கவனம். முன்னால இருந்த அதே கலரை அடிக்கிறதும் சிக்கனம். கொஞ்ச காலம் கழிச்சு தட்டுப்பட்டா கூட பெருசாத் தெரியாது. உள்ள வேற கலர் இருந்தா தெரிஞ்சுரும்.

இனி வரும் தடவை அடிக்கும் போது இப்போ அடிக்கிற நிறம் பிரச்சினையாக இருக்காதது போலவும் பார்த்து தெரிஞ்சுக்கறது முக்கியம்.

//தொடர்ந்து சுத்தமா வைக்கறதுக்கு வழி சொல்லுங்க.// தொடர்ந்து சுத்தமா வைக்கறதுதான் வழி. ;) அப்பப்ப பார்த்துப் பார்த்து க்ளீன் பண்ணிரணும்.

//குட்டிஸ் சுவத்துலத்தான் எழுதுறாங்க// //டிப்ஸ் குடுத்துட்டு போங்க// ம்.. பெருசா black board அல்லது white board வாங்கிக் கொடுங்க. அதுக்கு ஏற்ற மாதிரி கலர்கலரா சாக் / மார்க்கர் வாங்கிக் கொடுங்க. அவங்க அதுல வரையுறதை ரசிச்சு பாராட்டுங்க. மெதுவா சுவரை மறந்துருவாங்க. அப்படி இல்லாம திரும்பவும் தொடர்ந்தாங்கன்னா... டிப்ஸ் குடுத்துட்டு போறதுதான் ஒரே வழி. ;) சுவர் சுத்தமா இருந்தா வாரம் முடிய அவங்களுக்குப் பிடிச்சதை கிஃப்ட்டா வாங்கிக் கொடுக்கிறதா சொல்லிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

உண்மை தான் இமா. சுவரில் கிறுக்கக் கூடாதுன்னு சொன்னால் மட்டும் போதாது.
அவங்களுக்கு ப்ளாக் அல்லது ஒயிட் போர்ட் வாங்கிக் கொடுத்தால் அவங்க‌ ஆசையும் நிறைவேறும். சுவரும் சுத்தமா இருக்கும். எங்க‌ வீட்ல‌ ஒயிட் போர்ட் இருக்கு. அதிலே தினம் ஒரு பொன்மொழி எழுதுவாங்க‌. இப்போ ????

ஹாய் நிகி! கமண்ட் போட்ட பாதில போன் வர தலைப்பு போடாததைக் கவனிக்காம 'சேர்க்க' தட்டிட்டேன். மாத்திட்டுப் பார்த்தா மாறல. ;))

குழந்தைகளுக்கு கிறுக்க கட்டாயம் சுவர் வேணும். கிறுக்கல அவங்களை வளர்க்கும்.

‍- இமா க்றிஸ்

//மாத்திட்டுப் பார்த்தா மாறல. ;)) //
ஹி...ஹி..
ஆனால், "//எந்த‌ கம்பெனி பெயிண்ட்" தலைப்பே பொருத்தம் தான் இமா.;)

ரேவா, நல்ல‌ பெயிண்ட் விலை ஜாஸ்தியா இருந்தாலும் ரொம்ப‌ வருசம் நீடித்து வருவதால் லாபம் தான். அடிக்கடி பெயிண்ட் பண்ணும் செலவு இல்லியே. :)

:) இமாம்மா எல்லாத்துக்குமே நீண்ட தெளிவான விளக்கம் குடுத்து சந்தேகமே வராம தீர்த்துடறிங்க.வீடு கட்டி இப்பதான் இரண்டாவதா பெயிண்ட் அடிக்க்ப்போறோம். முதல்ல அடிச்ச கலர் சுத்தமா என் விருப்பம் கிடையாது. அதனாலதான் மாத்தணும்ன்னு நினைக்கிறேன்.

குட்டிஸ். கிறுக்கலுக்கு நல்ல ஐடியா குடுத்துருக்கிங்க இமாம்மா . நிச்சயம் அவங்க ஹாப்பியா கிறுக்கறதுக்கு வழி செய்கிறேன். தான்க்ஸ் இமாம்மா

Be simple be sample

ஆமா நிகி, அவர் எண்ணமும் அதுதான். தரம்தானே முக்கியம்

Be simple be sample

madam..gm..

Please put different colour for each rooms, this is the new trend
for modern genaration
8098022891

ரேவ், நாங்க‌ அடித்ததைப்பற்றி சொல்றேன், வெளிப்புற‌ சுவருக்கு ட்யூலக்ஸ் (வெதர்ஷீல்ட் மாக்ஸ்) அடிச்சோம்.

உட்புறப்பகுதிகளுக்கும் அதே கம்பெனி பெயிண்ட்தான். ப்ரஷ்க்கு பதிலா ரோலர்வைத்து அடித்தார்கள். அதற்குபெயர் வெல்வெட் டச்னு சொன்னாங்க‌. கிச்சனுக்கு மட்டும் ஆயில் பெயிண்ட் அடித்தோம். ரொம்பவும் வழுவழுப்பாக‌, கிளார் அடிப்பது போல் இல்லாமல் இருக்க‌ சாட்டின் ஃப்னிஷ் பண்ணோம். துடைப்பதற்கு எளிதாக‌ இருக்கிறது.

வெளிப்புற‌ சுவர்களில் சிறு சிறு வெடிப்புகள் காணப்பட்டால் ப்ர்லா ஒயிட் வால்கேர் பட்டி வைக்கலாம்.

இதே பிராண்ட்தான் அடிக்கணும்னு சொல்லல‌, எந்த‌ பிராண்டா இருந்தாலும் சாம்பிள் கலர் வாங்கி அடிச்சுப்பார்த்துட்டு அப்புறமா முடிவு பண்ணுங்க‌.

ஆனா ஒண்ணு, வீட்டைக்கட்டிப்பார் பெயிண்டை அடித்துப்பார் என்னும் அளவிற்கு ஆகிவிட்டது. இதோ அதோனுனு சொல்லிட்டே நாட்களை இழுத்துவிட்டனர். பயமுறுத்துவதற்கு சொல்லவில்லை, மனதை தயார்படுத்தவே சொல்கிறேன், தவறா நினைச்சுடாதீங்க‌ ரேவ்.

//ஏன்னா வீட்டுல குட்டிஸ் சுவத்துலத்தான் எழுதுறாங்கபா. டிப்ஸ் குடுத்துட்டு போங்க கண்ணுங்களா .// ஹீ ஹீ.. இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். இப்பவும் என் மகள் ஜம்ப் பண்ணி சுவர்ல‌ எவ்வளவு தூரம் எட்டுதுனு பார்ப்பாங்க‌, அதும் ஒவ்வொரு முறை நடக்கும் போதும், எல்லா இடத்திலயும் விரல் அச்சு விழுந்துஇருக்கு. வெளில‌ என்மகன் ஃபுட்பால் அடிச்சு சுவர்ல‌ அடையாளம் இருக்கு. கேட்லைட் மட்டும் நூலிழைல‌ தப்பிச்சிட்டே இருக்கு :)))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்