help me

Hi friends en babyku 12 month akuthu ana avan nataka matara Ella thinks putichi nadakar thaniya nadakar matara pa next month birthday pa

சில குழந்தைகள் ஓரு வருடம் சென்ற பிறகு தான் நடக்க ஆரபிக்கும் கையை பிடித்து கொஞ்ச துரம் முன்னால் கூட்டி நடந்து வந்து பிறகு கையை விட்டு விடவும் முயற்ச்சி செய்து பாருங்கள் என் பொண்ணுக்கு நான் அப்படித்தான்பழகினேன்.

//next month birthday// அன்றுதான் நடப்பாங்களோ என்னவோ! :-)

யோசிக்காதீங்க. ஒரு வயசு ஆக முன்னால நடக்காட்டா அது ஒரு குறைன்னு நினைச்சுக்காதீங்க. இன்னும் காலம் இருக்கு. யாராச்சும் கேட்டா, "என்ன அவசரம்? மெதுவாவே நடக்கட்டும். இப்பதானே ஒரு வயசு!" என்று தைரியமா சொல்லணுமே தவிர, இதையெல்லாம் பெருசா போட்டு மனசை குழப்பிக்கப் படாது.

பிறந்தநாளைப் பற்றி இப்போ குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. கொண்டாட்டம் பெரியவங்க சந்தோஷத்துக்காக மட்டும்தான். இது குழந்தைக்கான எக்ஸாம் இல்லை, அவர் நடக்காட்டா யாரும் மார்க்ஸ் போட. இயல்பா இருக்கட்டும். ரெண்டாவது பிறந்தநாளைக்குள் நடக்க ஆரம்பிக்காட்டா நீங்க நிச்சயம் யோசிக்கணும். இப்ப வேணாம்.

என் பெரியவர்... முதலாவது பிறந்தநாள் கொண்டாட்ட நடுவில் திடீரென்று எழுந்து ஈசியா நடந்தார். யாரும் எதிர்பார்க்கல. :-) அதுக்கு முன்னால பிடிக்காம தனியா நடந்தது இல்லை. அன்று யார் கைலயாச்சும் இருந்து கேக் பிடுங்க நினைச்சு இருப்பார் போல. ;) வந்திருந்தவங்களுக்கு இவர் நடக்க ஆரம்பிக்கல என்று தெரியாது. அவங்கவங்க பாட்டுக்கு சாப்பிட்டு, பேசிட்டு இருந்தாங்க. வீட்டார் நாங்க, எங்க வேலைகள் நடுவுல அங்கங்க நின்று எட்டிப் பார்த்தோம். எதிர்பாராத அந்த சந்தோஷத்தை அனுபவிக்க ரெண்டு மூணு நிமிஷத்துக்கு மேல கிடைக்கல. மறக்க முடியாத அனுபவம் அது. ஃபங்க்க்ஷன் நடுவுல என்கிறதால 'முதல் நடை' ஃபோட்டோ எடுக்கக் கிடைச்சுது.

ஈசியா இருங்க. சந்தோஷமா பிறந்தநாள் விழா ஆயத்தங்களைப் பாருங்க. என்ன கேக் பண்ணப் போறீங்க? என்ன தீம்! வேற ஏதாச்சும் ஐடியா வேணுமானா அறுசுவைல அதுக்கான த்ரெட்ல கேளுங்க. உதவி கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்