மெட்ராஸ் பெப்பர் சிக்கன்

தேதி: January 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

கோழி - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
காய்ந்த மிளகாய் - ஆறு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - பத்து பற்கள்
மிளகு - நான்கு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக் கரண்டி
மஞ்சள்த்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
இலவங்கம் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - அரை கோப்பை


 

கோழியை நன்கு சுத்தம் செய்து வேண்டிய அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், ஆகியவற்றை மைய அரைத்து, அத்துடன் மஞ்சள்தூள், பாதியளவு உப்புத்தூள் சேர்த்து கோழி இறைச்சியுடன் சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி பட்டை, இலவங்கப்பூ போட்டு, பொடியாக அரிந்த வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனவுடன், ஊறிய கோழித்துண்டுகளை போடவும். அதனைத் தொடர்ந்து தனியாத்தூளையும், இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு நன்கு கிளறவும்.
அனலை மெதுவாக வைத்துக் கிளறவும். பிறகு அரை கோப்பை நீரை ஊற்றி மீதியுள்ள உப்புத்தூளையும் போட்டு வேகவிடவும்.
அடிக்கடி கிளறி விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் மேலும் சிறிது ஊற்றவும்.
கோழி நன்கு சுருள வெந்தவுடன் இறக்கி டவும். எலுமிச்சை ரசம்(சாறு) ஒரு மேசைக்கரண்டி தெளிக்கவும்.
சுவையான மெட்ராஸ் பெப்பர் சிக்கன் தயார். இதனை சிற்றுண்டி, சாத வகைகளுக்கு பக்க உணவாக சேர்த்துக்கொள்ளலாம்.
அறுசுவையில் நூற்றைம்பதுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள திருமதி. மனோகரி ராஜேந்திரன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நீங்கள் செய்த மெட்ராஸ் பெப்பர் சிக்கனை பார்த்தவுடனே செய்து சாப்பிட தோனுது.ஆனால் எனக்கு அதில் ஒரு சின்ன சந்தேகம்.கடைசியில் எழுமிச்சை ரசம் சேர்க்க வேண்டுமென்று எழுதி இருந்தீர்கள்.இதில் எழுமிச்சை ரசம் என்பது எழுமிச்சை ஜுசா? இல்லை எனில் எழுமிச்சை ரசம் செய்வது எப்படி?

ramba

டியர் ரம்பாவிற்க்கு மிக்க நன்றி. ஆமாம் இந்த குறிப்பில் கடைசியில் சேர்க்கும் எலுமிச்சை ஜுஸை தான் எலுமிச்சைரசம் என்று குறிப்பிட்டேன். இனி மேல் சந்தேகத்திற்கிடமளிக்காத படி எலுமிச்சை ஜுஸ் என்றோ அல்லது எலுமிச்சை பழச்சாரு என்றோ குறிப்பிடுகின்றேன்.நன்றி.

உடனே என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

ramba

i tried this dish and my brothers really liked it.thanks for this receipe.

thyagu
chennai

மிக்க நன்றி திரு தியாகு அவர்களுக்கு.

திரு அட்மின் அவர்களுக்கு எலுமிச்சை சாறு என்று குறிப்பிட்டு எழுதியதற்க்கு மிக்க நன்றி.

Intha chicken 4 times seithaen...4 thadavyum super..en husband'ku pidicha dish ithu than..thanks for ur dish.

டியர் LakshRams எப்படி இருக்கீங்க? தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன். தாங்கள் இந்த குறிப்பை நான்கு முறை செய்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி இந்த குறிப்பைப் பார்க்காமளே நீங்களாகவே செய்வீர்கள் அல்லவா? நன்றி.

டியர் மனோஹரி மேடம் எப்படி இருக்கிறிங்க? உங்ளொட பெப்பர் சிக்கன் try பன்னினேன் ரொம்ப சுபெர். வீட்ல எல்லோரும் நல்லா சப்பிட்டாங்க. thanks for your recepie.
அன்புடன்
சங்கீதா

டியர் சங்கீதா எப்படி இருக்கீங்க? பெப்பர் சிக்கன் குறிப்பை செய்துபார்த்து பின்னூட்டமும் அனுப்பியுள்ளீர்கள் மிக்க நன்றி. அடுத்த முறை செய்யும் பொழுது வெங்காயத்தை போடாமல் டிரையாக செய்துபாருங்கள், சுவை இன்னும் சூப்பராக இருக்கும். நன்றி மீண்டும் சந்திப்போம்.

மனோகரி அக்கா, இந்த சிக்கன் குறிப்பை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என் மகனுக்கு ரொம்ப பிடித்து போனது. அதுவும் ஜெ.அக்காவின் மிளகாய் கிள்ளு சாம்பாருடன் சுப்பர் காம்பினேஷன் என்று வீட்டில் ஒரே பாராட்டு மழை. நன்றி உங்களுக்கு.

அன்பு தங்கை வானதி எப்படி இருக்கீங்க? இந்த சிக்கன் குறிப்பை செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. உங்கள் செல்லத்திற்கும் பிடித்துப் போனது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது மிக நல்ல காம்பினேஷனில் செய்து சுவைத்திருக்கின்றீர்கள் பாராட்டுக்கள். பருப்பு ரசத்திற்கும் கூட ரொம்ப நல்லாயிருக்கும். நன்றி.

Thanks a lot .........i tried and got good remarks....thanks a lot ...

-----

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் அருசுவைக்கு புதுசு மேடம் எப்படி இருக்கிறிங்க? உங்ளொட பெப்பர் சிக்கன் ரொம்ப நன்றாக இருந்தது. thanks for your recepie.
அன்புடன்
ரமணி

நான் அருசுவைக்கு புதுசு மேடம் எப்படி இருக்கிறிங்க? உங்ளொட பெப்பர் சிக்கன் ரொம்ப நன்றாக இருந்தது. thanks for your recepie.
அன்புடன்
ரமணி

ஹலோ நர்த்தனா தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன்,இந்த குறிப்பை செய்து பின்னுட்டம் தந்தமைக்கு எனது நன்றி அதை திறன்பட செய்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

ஹலோ மர்ழியா ஒருசில நாட்களுக்கு முன்பு தான் உங்க பின்னூட்டத்தைப் பார்த்து பதில் எழுதி வைத்திருந்தேன்.இன்று அனுப்பலாம் என்றால் உங்க அந்த பதிவைக் காணவில்லை ஆகவே அனுப்ப முடியாமல் போய்விட்டது.அறுசுவையில் உங்கள் பங்களிப்பு மிகவும் நன்றாக உள்ளது பாராட்டுக்கள் நன்றி.

ஹலோ ரமணி, அறுசுவையின் புது வரவான உங்களை வருக.... வருக என அன்புடன் வரவேற்கின்றேன் உங்கள் வரவு நல்வரவாகுக. இந்த சிக்கன் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியே. பின்னூட்டம் தந்தமைக்கும் எனது நன்றி.

மனோகரி அவர்களுக்கு வணக்கம்,
மெட்ராஸ் பெப்பெர் சிக்கன் மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் ... அடிக்கடி செய்யப் போகிறேன்.
ஆயிஸ்ரீ புகழேந்தி.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வணக்கம் ஆயிஸ்ரீ இந்த சிக்கன் குறிப்பை சுவையாக சமைத்து உண்டதற்கு மிக்க மகிழ்ச்சி, இதனை அடிக்கடி செய்யப்போவதாகவும் பின்னூட்டம் அனுப்பியதற்கு எனது மனமார்ந்த நன்றி.

sudhasri
hi madam,i tried this today.it turned out exeelent,but the colour is different(not red),do u add any powder.i also prepared chicken65,veg brinji,channa masala.everything became very nice.
thank u madam

sudhasri

நன்றி சுதா உங்க பின்னூட்டம் மகிழ்ச்சியைத் தந்தது. இந்த குறிப்பில் நான் கலர் ஏதும் சேர்க்கவில்லை காய்ந்த மிளகாயின் நிறம் தான் அவ்வாறு வந்துள்ளது.எனது மற்ற குறிப்புகளையும் செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி.

dear madam...

Though i am a member of arusuvai,i mostly don't write comments.But i have to break that after preparing your pepper chicken.It turned out to be a super dish.I prepared it for one of my friend who stopped eating non-veg for 6-7 years and started to have on that day..she loved it so much.Everytime she meets me or talks over the phone she definitely appreciates the pepper chicken and told that she never had one such wonderful non-veg dish ever.All credits to you only mam.Sorry i felt very difficult typing in tamil(though i know typewriting,the method here is quite different).