கார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட் - காகித வேலை - அறுசுவை கைவினை


கார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்

திங்கள், 15/09/2014 - 13:01
Difficulty level : Easy
4
6 votes
Your rating: None

 

  • கார்ட் ஸ்டாக் ஷீட் - 2
  • கத்திரிக்கோல்
  • பேப்பர்
  • பென்சில்
  • ஃபெவிகால்
  • க்ராஃப்ட் நைஃப்
  • லேம்ப் ஹோல்டர்
  • ப்ளக் (Plug)
  • ஒயர் (Wire)
  • LED லைட்

 

வீடு வடிவில் லேம்ப் ஷேட் தயார் செய்ய, வீட்டின் நான்கு பக்கமும் வர வேண்டிய சுவரின் அளவை பேப்பரில் குறித்துக் கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளவும். நான் 14 X 14 என்ற அளவில் சதுர வடிவமாக வெட்டியுள்ளேன். படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு பக்கங்களில் மட்டும் 1 - 1.5 சென்டிமீட்டர் கூடுதலாக இடைவெளி விட்டு வெட்டிக் கொள்ளவும்.

மேல் கூரைக்கு முக்கோண வடிவில் 4 துண்டுகள் வெட்ட வேண்டும். அதன் அடிப்பக்கம் 18 சென்டிமீட்டரும், மற்ற இரண்டு பக்கமும் 14 சென்டிமீட்டரும் வைத்துள்ளேன். அதில் ஒரு பக்கத்தில் மட்டும் கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் வைத்து வெட்டிக் கொள்ளவும்.

வெட்டி வைத்துள்ள சதுர அளவுகளை மாதிரியாகக் கொண்டு கார்ட் ஷீட்டில் வைத்து 4 துண்டுகள் வெட்டி எடுக்கவும். கூடுதலாக விட்டு வைத்துள்ள அளவைக் குறித்துக் கொண்டு கோடு வரைந்து கொள்ளவும்.

அந்த கோடுகள் இரண்டும் இணையும் இடத்தில் மேல் பகுதியில் படத்தில் காட்டியுள்ளபடி வெட்டிவிடவும். (சதுரமாக வெட்டியதில் இரண்டு பக்கம் மட்டும் தான் கூடுதலாக இடைவெளி விட்டோம். அதில் ஒன்று அடுத்த பகுதியோடு இணைப்பதற்கும், மற்றொன்று மேல் கூரையோடு இணைப்பதற்கும் உதவும்).

இப்போது கூடுதலாக இடைவெளி விட்டு வெட்டியதில் கோடு வரைந்த இடத்தோடு மடித்துக் கொள்ளவும். மடித்த இடத்தை அடுத்த அட்டையின் உட்பகுதியில் வரும்படி வைத்து ஒட்டவும்.

இதே போல அடுத்த அட்டையின் அடுத்த முனையிலிருக்கும் கூடுதலாக விட்ட இடைவெளியில் அதற்கு அடுத்த அட்டையை இணைத்து ஒட்டவும். 4 அட்டையையும் இவ்வாறு இணைத்து ஒட்டிக் கொள்ளவும்.

நான்காவது பக்கத்தை முதல் பக்கத்துடன் இணைத்து சதுரமாக்குவதற்கு முன்பு, விரும்பிய பக்கத்தில் வீட்டின் வாசல் மற்றும் ஜன்னல்கள் வரைந்து வெட்டிக் கொள்ளவும். பிறகு நான்காவது பக்கத்தை முதல் பக்கத்தோடு இணைத்தால் வீட்டின் கீழ் பகுதி (சுற்றுச் சுவர்) தயார்.

மேல் கூரையோடு இணைப்பதற்காக கூடுதலாக வெட்டிய பகுதியில் கார்னர் பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை வெட்டிவிடவும்.

இதே போல முக்கோண அளவில் வெட்டி வைத்துள்ள பேப்பரை மாதிரியாகக் கொண்டு கார்ட் ஷீட்டில் வைத்து முக்கோணங்கள் வரைந்து வெட்டி எடுக்கவும். கூரையின் உச்சியில் படத்தில் உள்ளபடி 1.5 சென்டிமீட்டர் அளந்து கோடு வரைந்து வெட்டிவிடவும். (இது லேம்ப் ஹோல்டர் பொருத்துவதற்காக உள்ள பகுதி).

இரண்டு முக்கோணத்தையும் இணைத்துப் பார்த்து, படத்தில் காட்டியுள்ளபடி இவ்வாறு கூடுதலாக கீழே நீட்டி இருக்கும் சிறிய பகுதியை வெட்டிவிடவும்.

சதுரங்களை இணைத்தது போல கூடுதலாக இடைவெளி விட்டு வெட்டிய பகுதியை மடித்து, அதை அடுத்த பகுதியின் உட்பக்கமாக வைத்து ஒட்டி கூரையை தயார் செய்யவும். விரும்பிய இடங்களில் விருப்பமான சிறு வடிவங்கள் வரைந்து வெட்டிக் கொள்ளவும். பிறகு நான்காவது பக்கத்தை முதல் பக்கத்தோடு சேர்த்து ஒட்டி முழுக் கூரையைத் தயார் செய்யவும்.

இப்போது சுவரின் மேல் பகுதியில் உள்ள கார்னர் துண்டுகளை மடித்து விட்டு பேஸைத் தயார் செய்யவும்.

அத்துடன் தயார் செய்து வைத்துள்ள கூரையை இணைத்து ஒட்டவும்.

வீடு வடிவம் தயார். இதில் லேம்ப் போட தயார் செய்து கொள்ளவும். அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு கடைசியாக 14 X 14 என்ற அளவில்;, சுற்றிலும் கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் இடைவெளி விட்டு ஒரு சதுர அட்டையை வெட்டியெடுத்து, 4 பக்கமும் உள்ள கூடுதல் இடைவெளி உள்ள பகுதியை மடித்து, வீடு வடிவத்தின் அடிப்பகுதியில் உட்பக்கம் இணைக்கவும்.

சுலபமாக செய்யக்கூடிய லேம்ப் ஷேட் தயார்.

சூடாகும் வாய்ப்பு அதிகமிருப்பதால் LED லேம்ப் மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். சிறியதாகச் செய்தால் பேப்பருக்கும், லைட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி குறையும். சூடு அதிகமாகும் என்பதால் சற்று பெரிய அளவில் செய்திருக்கிறேன். உங்கள் விருப்பம் போல அளவுகளை மாற்றிக் கொள்ளலாம். அதிக நேரம் இந்த விளக்குகளைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

வெட்டுவதற்கு க்ராஃப்ட் நைஃப் தான் சிறந்தது. அல்லது சிறிய கூர்மையான கத்தியைப் பயன்படுத்தலாம்.

கத்தரிக்கோலால் கார்ட் ஸ்டாக்கை வெட்டினால் பிசிறுகள் ஏற்படும். வளைவுகள் வரைய ஸ்டென்சில் இருந்தால் பயன்படுத்தலாம். அல்லது என்னைப் போல கையில் கிடைப்பதையெல்லாம் கூட பயன்படுத்தலாம் ;)

நான் பயன்படுத்தியவை: வளைவுகள் வரைய பழைய க்ரீன் டேப் இருந்த அட்டை. அட்டையை வெட்ட சிறிய கத்தி. கத்தியால் கோடுகள் வரைந்து வெட்ட ஒரு தகடு. ஸ்கேல் வைத்தால் கத்தி பட்டு சேதமாகும் என்பதால் மெட்டல் ஒன்று தேவைப்பட்டது.

இதில் டிசைன்கள் கொடுக்கலாம். ஜன்னல் கதவு என வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. க்ராஃப்ட் பன்ச் இருந்தால் விரும்பிய வடிவம் பன்ச் செய்துவிடலாம். பட்டாம்பூச்சி, பூக்கள், இலை வடிவங்கள், நிலா என எந்த வடிவம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எல்லாம் நம் விருப்பமே. அந்த வடிவங்கள் வழியே வெளிச்சம் சுவரில் படும் போது மிக அழகாக இருக்கும்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..லாம்ப் ஷேட்

ரொம்ப அழகா இருக்கு வனி.

இமா க்றிஸ்

vani

அழகான கிராப்ட் வனிதா.சூப்பரா இருக்கு.

Be simple be sample

வனி

பார்க்க‌ ஜோரா இருக்கு. அருமை. ஸ்டார், நிலா இப்படி வெட்டினால் வானமே வீட்டினுள் வந்த‌ மாதிரி இருக்கும் போல‌

Lamp shade

Nallarukku vanikkaa .. Nanum ithu maathiri tissue tubela seithuruken. Intha ideavum nallarukku . Seythu pakkaren :)

Kalai

வனி அக்கா

கார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட் ரொம்ப‌ ரொம்ப‌ கியூட்டா இருக்கு :) ரொம்ப‌ பிடிச்சு இருக்கு :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி அக்கா

ரொம்ப அழகா இருக்கு அக்கா. உங்க குட்டிஸ் இதை பார்த்துட்டு என்ன சொன்னாங்க?

நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா

தேன்க்யூ இமா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ்ஸ்

தேன்க்யூ ரேவ்ஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிகி

ஆமாம் அந்த வடிவங்கள் வெட்டினால் நல்ல அழகா இருக்கும் :) ட்ரை பண்ணுங்க நிகி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா