வீட்டுக்கு தேவையான லிஸ்ட்

வீட்டுக்கு தேவையான பொருட்கள் தீர்ந்தவுடன் வாங்க லிஸ்டை போடும் பொழுது சில நேரங்களில் ஒரு சில அத்தியாவசியமான பொருட்களைக்கூட குறிப்பெடுக்க மறந்து விடுவோம். அவற்றை தவிர்க்க இப்பொழுது கடைகளில் குளிர்சாதன பெட்டியின் மீது ஒட்டும் காந்தங்களுடன் கூடிய லிஸ்டை எழுதுவதற்க்கு வசதியாக நோட்டுக்கள் கிடைக்கின்றது.டாலர் ஸ்டோர்களில் கூட கிடைக்கும். அவற்றை வாங்கி ஒட்டி வைத்துக் கொண்டால் வீட்டு சாமான்கள் தீர்ந்தவுடன் உடனுக் குடன் எழுதி வைத்துவிடலாம்.பிறகு சாமான்கள் விட்டுப் போகும் நிலை ஏற்ப்படாது. வீட்டில் உள்ளவர்களிடமும் இவ்வாறு கூறி விட்டால் அவர்களும் அவர்களுக்கு தேவையானவற்றை எழுதி வைத்து விடுவார்கள் பிறகு எந்த பொருளுக்கும் தட்டுப் பாடு ஏற்ப்படாது. தேவையில்லாத பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்ப்படாது.இதைப் படிக்க மிகவும் சிறிய விசயமாக தோன்றும். ஆனால் இதை பின்பற்றும் பொழுதுதான் இதன் ஒழுங்கு முறையும் நன்மையும் தெரியும்.

மேலும் சில பதிவுகள்