தட்டப்பயறு மசாலா

தேதி: January 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தட்டப்பயறு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - ஒன்று
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
சோம்பு - கால் தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பயறை 2 மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
பின் மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
அவை வதங்கியதும் தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி பேஸ்ட் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
பின் வேகவைத்த பயறு, உப்பு, தண்ணீர் விட்டு சிறிது நேரம் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். கரம் மசாலாத்தூள், நெய், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்