பீட்ரூட் இலை / தண்டு கூட்டு

தேதி: September 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் இலை தண்டுடன் - ஒரு கட்டு
கடலைப்பருப்பு - ஒரு கப்
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு சில்லு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

கடலைப்பருப்புடன், சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கிய பீட்ரூட் இலை மற்றும் தண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். (இடையிடையே பாத்திரத்தை மூடிவைத்து வதங்கவிடவும்).
தண்டு நன்கு வதங்கியதும் தூள் வகைகளைச் சேர்க்கவும்.
பிறகு வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்துக் கிளறவும்.
அத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடங்கள் வைத்திருந்து உப்பு சரிபார்த்து இறக்கவும்.
சுவையான பீட்ரூட் இலை மற்றும் தண்டு கூட்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பீட்ரூட் இலை / தண்டு கூட்டு ரெசிபி சூப்பர் :) ஆனா பீட்ரூட் இலை நான் இப்போ தான் பாக்குறேன் கிடைச்சா அவசியம் செய்து பார்க்கணும் எனக்கு இந்த‌ ரெசிபி பிடிச்சு இருக்கு :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்கும் பிடிச்சு இருக்கு. சும்மாவே பீட்ரூட் கீரை பிடிக்கும். இந்த காம்பினேஷன் சூப்பரா தெரியுது. என் விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு வாணி.

‍- இமா க்றிஸ்

எனக்கு பழைய‌ நியாபகம் வந்திட்டு.பீட்ருட், கேரட் கீரை அதிலும் முள்ளங்கி கீரை மிகவும் விருப்பம். ரெசிபி அருமை..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாணி அக்கா,
டிஸ் சூப்ப‌ர், பார்க்கும் போதே சாப்பிட தோணுது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

nice. இதுலலாம் சமைப்பாங்கனு எனக்கு இன்னிக்கு தான் தெரியும்.

கிடைத்தால் கண்டிப்பா செஞ்சி பார்க்கிறேன்.

பார்க்க‌ இந்த‌ ரெசிபி நல்லா இருக்கு. கிடைத்தால் செய்து பார்த்துட்டு சொல்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

கிடைக்கும் போது செய்து பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். நன்றி

நன்றி இமா, வாய்ப்பு கிடைக்கும் போது செய்துப் பார்த்து பின்னூட்டம் கொடுங்க. எனக்கென்னமோ காய்கறிகளை விடவும் அதின் தண்டுகளில் அதிக சுவை தெரிகிறது.

அது சரி கேரட் இலையிலும் சமைக்கலாமா? நான் நெட்டில் தேடிய போது அது கசக்குதுன்னு போட்டிருந்தாங்க, தாமதமான கேள்வி, இதைப் பார்க்க நேரிட்டால் பதில் கொடுங்கள். எனக்கு இங்கு அதிகமாக கிடைக்கும், செய்ததில்லை. நன்றி

நன்றி

செய்து பாருங்க பாலநாயகி. நன்றி