பாகற்காய் கூட்டு

தேதி: January 11, 2007

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாகற்காய் - அரைக்கிலோ
கடலைப்பருப்பு - அரைக்கோப்பை
பச்சைமிளகாய் - ஐந்து
வெங்காயம் - நான்கு
தக்காளி - நான்கு
தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால்கோப்பை
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைக்கவும். நெத்தாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை பிசறி அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு நன்கு கழுவி வடித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப் பொரியவிடவும். தொடர்ந்து சீரகம் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.
பின்பு வெங்காயத்தை கொட்டி சிவக்க வறுத்து தனியே எடுத்துவிடவும். பின்பு பாகற்காயை கொட்டி சிவக்க வறுபட்டவுடன் அதையும் ஒரு தட்டில் கொட்டவும்.
தொடர்ந்து அதே சட்டியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூளைப் போட்டு அதை தொடர்ந்து பச்சைமிளகாய், மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு, தக்காளி பேஸ்ட், வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்புத்தூள், பருப்பு வெந்த தண்ணீர் ஒரு கோப்பை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் கொட்டி நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடவும்.
இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி மேடம் இன்னைக்கு உங்க பாகற்க்காய் கூட்டு செய்தேன், இது எனக்கு புது ரெசிபி மேடம்....என்னவர் ஆஹா பாகற்க்காயிலே கூட்டா....அப்படினு கொஞ்சம் ஒரு மாதிரிய என்னை பார்த்தார், ஏனா அவருக்கு பாகற்காய் புடிக்காது மேடம்...ஆனா என்ன அதிசயம் நிமிடத்தில் எல்லாமே காலி..போட்டோ எடுத்து இருக்கேன் மேடம் நம்ம அட்மினுக்கு அனுப்பிவைக்கிரேன் ...நான் பன்னினது சரியானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க மனோகரி மேடம் ;-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

டியர் ஹாஷினி இந்த கூட்டு குறிப்பை செய்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்,கசப்பே தெரியாமல் இந்த கூட்டு மிகவும் சுவையாய் இருக்கும். இதை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியது மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி.

திருமதி. ஹாசினி அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பாகற்காய் கூட்டின் படம்

<img src="files/pictures/pakal_koottu.jpg" alt="picture" />

ஹலோ ஹாஷினி இந்த கூட்டை மிகவும் சிறப்பாக செய்து படம் எடுத்திருக்கின்றீர்கள் பாராட்டுக்கள். குறிப்பை படத்தில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி. படங்களை வெளியிடும் அட்மினுக்கும் மனமார்ந்த நன்றி.

ரொம்ப நன்றாக இருந்தது. மனோஹரி மேடம் நிங்க எப்படி இருக்கிங்க. ஹாலிடேஸ் ஆனதினால் என்னால் நிறய்ய குறிப்புகள் செய்ய முடியல்ல. இன்று தான் வந்தோம், உங்கள் பாகற்காய் கூட்டு செய்தேன்.ஒ.கே.

டியர் விஜி இந்த குறிப்பை செய்ததற்கு மிக்க நன்றி. உண்மைதான் இது விடுமுறை சீசன் என்பதால் யாருக்கும் சமையல் செய்வதில் நாட்டம் குறைவாகவே தான் இருக்கும், இருந்தாலும் நீங்கள் இவ்வளவு பேர் இந்த வாரமும் கலந்துக் கொண்டு சமைத்து பார்த்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. தங்கள் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.