plz help me freinds

நான் அறுசுவைக்கு புதிய அறிமுகம் என்னை உங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.நான் கர்ப்பமாக உள்ளேன் எனக்கு ஏற்கனவே 3வயதில் ஒரு பென்குழந்தை இருக்கிறாள்.எந்த குழந்தையாயிருந்தாலும் நல்லபடியாக பிறக்க எல்லா மத சகோதரிகளும் வேன்டுங்கள்.எனக்கு ஒரு சந்தேகம் நான் காலையில் ஒரு தேங்காய் உடைத்தேன் அதில் வெள்ளையாக ஏதோ பருப்புபோலயிருந்தது அது நல்லதா எனக்கு குழப்பமாயிருக்கிர்ரேன்.உடனே தெரிந்தவர்கள் கூருங்கள் எனக்கு அப்பத்தான் தூக்கமே வரும் plz

அது தேங்காய்ப்பூ நல்லது தான்,உள்ள பூ இருந்தா நல்லது னு சொல்வாங்க,கவலை இல்லாமல் இருங்க.

தேங்காய்... முற்றிய காய், முளைக்க ஆரம்பித்திருக்கிறது. //அது நல்லதா// நல்லதுதான். சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அந்தத் தேங்காயையும் கூட சமையலுக்குப் பயன்படுத்தலாம். வழுவழுப்பாக இருக்கும் பாகத்தைச் சுரண்டி விட்டு ஒரு முறை கழுவி எடுத்தால் போதும். எதுவும் ஆகாது. வாடை வந்தால் சமையலுக்கு எடுக்க வேண்டாம்.

//எனக்கு குழப்பமாயிருக்கிர்ரேன்.// தேங்காய் முளைப்பதற்கும் எங்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை சமீமா. பெண்ணுக்குக்குள்ளே குழந்தை உருவாவது போல தேங்காய்க்கு உள்ளே பூரான் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் குழம்ப என்ன இருக்கிறது!

சின்னச் சின்ன வியத்தை எல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கலக்கமில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரம் இது. எதுவும் ஆகாது. பயமில்லாமல் தூங்குங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanka kiruthuka&imma madam

சகுனம் பார்ப்பவர்கள் சுவனம் புக மாட்டார்கள்

அஸ்தாஃபிருல்லாஹி தவ்பா நான் சகுனம் பார்க்கலம்மா தேங்கா ஏதோ குருத்துபோல இருந்ததா அதான் எனக்கு பயம். சாப்பிடலாமா என்னனு தெரியல அதான் சந்தேகப்பட்டு கேட்டேன்

Valakkumwassalam hasinabanu epadoyirukinga nan dubai oasiscenter pakkam irukenma dress eduthachi neenga eduthacha

அழகாகத் தமிழில் தட்டுகிறீர்கள். எப்பொழுதும் தமிழிலேயே தட்டலாமே!! :-)
நீங்கள் புதியவர் என்று இரண்டு பதில்கள் முன்பாக இன்னொரு இழையில் சொல்லி இருந்தீர்கள். அதனால் சொல்லத் தோன்றியது. உங்கள் சந்தேகம் தொடர்பாக ஏற்கனவே ஒரு இழை இல்லாவிட்டால் மன்றத்தில் கேள்வியைப் பொருத்தமான பகுதியில் சேருங்கள். "உதவி தேவை', 'சகோதரிகளே கூறுங்கள்' என்பது போல அல்லாமல் சரியான சொல்லை இழைத் தலைப்பாகக் கொடுங்கள். இது ஏற்கனவே அட்மின் பலமுறை சொல்லியிருப்பதுதான்.
-----
கர்ப்பமாக இருக்கும் போது, அவை நிச்சயம் எதுவும் செய்யாது என்று தெரிந்தால் தவிர, முன்பு சாப்பிட்டு அறிமுகமில்லாத புதிய உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கேட்ட உணவுப் பொருள் சிலருக்கு ஒவ்வாமை விளைவுகளைத் தோற்றும் என்பதை அறிந்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இம்மா அக்கா நன்றி நீங்க சொன்னதுபோல இனி செய்கிரேன்.இனி இருக்கும் இழையில் பதிவிடுகிறேன்.தெரியாத பொருளை நான் இனி சாப்பிடல உங்க பதிவுக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்