இறால் பஜ்ஜி

தேதி: January 11, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் பெரியது - 500 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங்பவுடர் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
பூண்டு பல் - 8
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரீஃபைண்டு ஆயில் - பொரிப்பதற்கு


 

முதலில் 2 மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும், உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து 2 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இறாலை வால் பகுதியை தவிர்த்து மீதி தோல்களை நீக்கி சுத்தம் செய்யவும், அதில் பூண்டை நசுக்கி போடவும்.
மேலும் உப்பு, மிளகு தூள், அஜினமோட்டோ போட்டு பிசறி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் காய வைக்கவும். இறாலை வால் பகுதியை பிடித்து மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் பஜ்ஜிகளை பொரித்து எடுக்கவும். இது சில்லி சாஸ், மீன் சாஸ்(நுக் மம்) இவைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நம்மவர்கள் சாஸ் எதுவுமில்லாமலேயே சாப்பிடுவார்கள்.


இது வியட்நாம் பஜ்ஜி, எல்லோராலும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் அஜினமோட்டோ சேர்க்காமல் செய்தேன்.அரிசிமாவு+கடலைமாவில் தான் பஜ்ஜி செய்வேன்.உங்க குறிப்பின்படி செய்தேன் நன்றாக இருண்டஹ்து.மிக்க நன்றி!!

இது நம் நாட்டு பஜ்ஜி அல்ல,வியட்னாமியன் செய்முறை,நம் ஊர் பஜ்ஜி செய்யும் போது நானும் கடலை மாவு அரிசி மாவில் தான் செய்வேன்.ஆனாலும் இந்த பஜ்ஜி நல்ல சுவையாக இருக்கும்.பின்னூட்டதிர்க்கு ரொம்ப நன்றி மேனகா!