எனக்கு பிடித்த பாடல்

'எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே' என்ன பாட்டோட ஆரம்பம் ஆகுதுன்னு யோசிக்கிறிங்களா? அட நம்பி மேல தொடருங்க, ஏன்னா நான் பாடறது நிச்சயம் உங்களுக்கு கேட்காது.

பாட்டு கேட்கறதுன்னா யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க. நம்ம உணர்வுகள் ஏதோ ஒரு பாட்டுமூலமா வெளிப்படுது. சந்தோஷம்னாலும் பாட்டு, சோகம்னாலும் பாட்டு, காதல்ன்னாலும் பாட்டு இப்படியே சொல்லலாம்.

நம்மல  தூங்க வச்சது அம்மாவை விட 'இளையராஜா'வாதான் இருப்பாரு. அவரோட இசையில் நமக்கு இந்த பாட்டுதான் பிடிக்கும்ன்னு குறிப்பிட்டு சொல்லமுடியுமா!
முதல்ல கேட்கும்போது ஒரு பத்து பாட்டு சொல்லுவோம். ஆனா நிச்சயம் அடுத்த முறை வேற பாடல் சொல்லுவோம்.
ஏன்னா நிச்சயம் எண்ணிக்கையில் அடங்காது நம் விருப்ப பாடல்.

எனக்கு ஒரு குட்டி சென்டி மென்ட் இருக்கு. காலைல எழுந்து நான் முதல்முதல்ல கேட்கற பாட்டு எனக்கு பிடிச்சதா இருந்தா அன்றைய பொழுது நிச்சயம் எனக்கு உற்சாகமா போகும்.

சாரல் மழையில் கையில் ஒரு கப் ஃகாபி மனசுக்கு பிடித்த பாட்டு கேட்கும் வேளை அது எனக்கே எனக்கான ஒரு அழகிய தருணம். வீட்டுல காற்று வரலனா இரவு 12 மணின்னாலும் தனியே போய் பாட்டு கேட்டு மொட்டைமாடியில் படுத்திருக்கும் நேரம் அமைதியான இரவில் துனையாய் இருக்கும். என் தனிமை பொழுதை எப்போதும் இனிமையாய் மாற்றும்.

இரவு தூங்கும் நேரத்துலயும் ஏதாவது கவலையில் தூக்கம் வரலனா உடனே பாட்டு கேட்டு தூங்க ஆரம்பிச்சனா எண்ணி 3 பாட்டுக்குள்ள தூங்கிடுவேன். அதனால என் பிளேலிஸ்ட்ல கடைசி 3 பாட்டு என்னோட மோஸ்ட் ஃபேவரிட்டாத்தான் இருக்கும். என்னோட பிளாக்கின் தலைப்பும் ஒரு பாடல் வரிதானே.

சில பாடல் மனசுக்கு ஒரு வலி குடுக்கும், சில பாடல் உற்சாகம் குடுக்கும், சில பாடல் சிலர் நினைவை தூண்டிவிடும். உங்களுக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க...:)

5
Average: 5 (5 votes)

Comments

nalam peara weanduhiran

கண்டிப்பா ஏதோ ஒரு சில பாடல்கள் மனச அப்டியே வருடிச் செல்லும்.என்னோட ஹாபியும்
பாட்டு கேட்குறதுதான்..எனக்கு பிடிச்ச பாடல் மறக்க முடியாத பாடல் //இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன // மரியான் பிலிம் எப்பவும் மனசுக்குள்ள அந்த மீயுசிக் கேட்டுனே இருக்கும்...அந்த பாடல் கேட்கும் போது அவ்ளோ ஒரு சந்தோஷம் எனக்குள்ள வந்துடும் .அப்றம் சில மெலடி சாங்ஸ் அவ்ளோதான்.

// சில பாடல் சிலர் நினைவுகளை தூண்டிவிடும் // உண்மையான வரிகள் :)

All is well

// உங்களுக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க.// எனக்கு எப்பவுமே காலைல எழுந்ததும் பாட்டு, தூங்க முன்னால பாட்டு என்று இருந்தது இல்லை. சத்தமில்லாம இருந்தால்தான் தூக்கம் வரும். பாடல் ரசனை மாறிட்டே இருக்கு. க்றிஸ் போடுறதுல ஏதாவது ஒரு பாட்டு காற்றலைல வந்து சிந்தனைல ஒட்டிட்டு அடுத்தது வந்து ரீப்ளேஸ் பண்ற வரைக்கும் இருக்கும். அந்த வகையில் நேற்றும் இன்றும் மனது 'ஆனந்த யாழை' மீட்டுகிறது.
மொழி அதிகம் புரியாவிட்டாலும் பிடித்த இன்னொரு பாடல், மலையாளத்தில் களிமண்ணு படத்திலிருந்து 'லாலி லாலி'. இரண்டும் இசை இதம்.

‍- இமா க்றிஸ்

THANKU fathima

Be simple be sample

ஆமா sajanya.

Be simple be sample

to all..

i am realy big for Ilayaraj..

padalgal enbathu verum thalngal alla, athu nam manathodu sampathmpatathu...

சரியா சொன்னிங்க இமாம்மா. ரசனைகள் மாறின்னேதான் இருக்கு. அழகான பாடல் 'ஆனந்தயாழை மீட்டுகிறாய்' . நீங்க சொன்ன மலையாள சாங்கும் கேட்கணும். இசைக்கு மொழி இல்லை இல்லயா.

Be simple be sample

எனக்கும் இளையராஜா பாடல் எல்லாமே பிடிக்கும்.

Be simple be sample

revathi madam

ungaluku entha Ilyaraja padal romba pidikum...

எனக்கு ரஜினி பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.அவரின் பாடல்கள் கேட்டால் என் கவலைகளை மறந்து விடும்.

rajini padalkalil entha padal pdikum..

குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை.எல்லாம் பாடல்களும் பிடிக்கும்

எனக்கு பாட்டு கேட்கிறது ரொம்பவே பிடிக்கும், நைட் தூங்கிறதுக்கு முன்னாடி பிடிச்ச‌ 2 பாட்டு கேட்டா தான் தூக்கமே வரும் அதுக்கு மொபைல் ரொம்பவே உதவி செய்யுது.....

எனக்கு பிடித்த பாடல்......... அது பெரிய‌ லிஸ்டே....... சொல்லிட்டே இருக்கலாம். மெலொடி சாங்ஸ் எல்லாம்.....

அதில் சில‌ மாலையில் யாரோ‍‍ = சத்திரியன், சந்தோசம் சந்தோசம்‍= யூத், இன்னும் இது மாதிரி நிறைய‌.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரேவ்ஸ் எனக்கும் இளையராஜா பாடல்கள் பிடிக்கும் மத்தபடி குறிப்பிட்டு எந்த பாடலையும் கேட்பதில்லை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எதுன்னு சொல்ல‌ ரேவா
கவியரசின் பாடல்கள் பிடிக்கும்.
பொருள் பொதிந்த‌ பாடல்கள் எல்லாமே பிடிக்கும்.
பாடல் ஒலித்துக் கொண்டிருந்தால் தனிமை தெரியாது.
எஃப்.. எம் கேட்டால் கூடவே யாரோ இருக்கிறாப்பல‌ இருக்கும்.:)

உங்க‌ பதிவோட‌ ஆரம்பப்பாட்டுதாங்க‌, ரொம்ப‌ நாளா என்னோட‌ மொபைல்ல‌ ரிங்டோனா வெச்சிருந்தேன். என்னவோ தெரியலை அந்தப்பாட்டு அவ்வளவு இனிமையா இருந்தது கேக்கறதுக்கு.....

ரஜினி பாடல் எல்லருக்குமே பிடிக்கும்பா. குழந்தைகளூக்கும்

Be simple be sample

சூப்பர். சுபி. எனக்கும் அது போலதான் பிடிச்ச சாங்ஸ் கேட்க பிடிக்கும். அதுவும் நீங்க லாஸ்ட்ல சொன்னிங்க சாங் ரொம்ப பிடிக்கும்..

Be simple be sample

சே பின்ச் சுவா. எனக்கும்

Be simple be sample

ஆமா நிகி.அவரோஅ வரிகள் கூட இசையும் சேரும்போது சொல்லணுமா என்ன. இசை தனிமைக்கு துனைதானே நிகி . அழகான துனை

Be simple be sample

அட சூப்பர்பா. நமக்குபிடிச்ச சாங் ரிங்டோனா கேட்கும்போதுல்லாம். இன்னும் ஹாப்பியா இருக்கும்பா.

Be simple be sample

பாட்டெல்லாம் நாங்களும் கேட்போம்ங்க.
சில நேரங்களில் ராஜா சார் & மற்ற சில நேரங்களில் ரஹ்மான் சார் இசை தான் :-)
நமக்கு பிடித்த பாட்டு நிறைய நாட்கள் தேடி கிடைக்காம ஒரு நாளிலே கிடைத்து கேட்கும் போது
அது ஒரு தனி மகிழ்ச்சிங்க. :-)

நட்புடன்
குணா

ரேவ், எனக்கு பாடலின் வரிகள் மேலோங்கி, இசை கொஞ்சம் தணிவாக இருக்கும் பாடல்கள் பிடிக்கும்.
காலை நேரம் "பச்சைமா மலை போல் மேனி"யும், அபிராமி அந்தாதியும் கேட்பேன்.
ஃபாஸ்ட் பீட் பாடல்கள் பிடிக்கதுனுலாம் சொல்லமாட்டேன்.
பம்பாய் பட பாடல்கள், ஏன் மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களும் அவ்வப்போது ஒலித்துக்கொண்டு இருக்கும்.
அலைகள் ஓய்வதில்லை
கன்னத்தில் முத்தமிட்டால்
அலைபாயுதே
ஐயா
முதல்வன்
ரோஜா
மூன்றாம் பிறை
படபாடல்கள் ரொம்பபிடிக்கும்.
அதே போல ஒவ்வொரு பூக்களுமே, உன்னால்முடியும் தம்பி, கோச்சடையான், ல வரும் தன்னம்பிக்கை வரிகளைக்கொண்ட பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.
இப்பலாம் "ஐ"யும் "கத்தி" யும் வரிசைகட்டி நிக்குது.
மாலை 4.30 வரைக்கும்தான் பாடல்கள் ஒலிக்கும். அதேபோல தூங்கப்போகும் போதுலாம் பாட்டு ஏதும் கேட்கமாட்டேன். சில வருடங்கள் முன்னாடிலாம் ஒரு குட்டி ரேடியோ என்கூடவே ஒட்டிட்டு இருக்கும். கிச்சன், ஹால், ஏன் துணிகாயப்போட போனாக்கூட. இப்பலாம் மொபைலே அந்த வேலைய செய்திடுது :)) சத்தம் மிக குறைவா வெச்சுக்கேட்கத்தான் எனக்கு பிடிக்கும்.

இந்த பதிவு தட்டும்போது "தென்றல் வந்து தீண்டும் போது என்ன நிறமோனு" இளையராஜா சாரும், ஜானகி அம்மாவும் பாடிட்டு இருக்காங்க :))

நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சரியா சொன்னிங்க தம்பிங். பதிவுக்கு நன்றீ

Be simple be sample

அட அருள் நீங்க சொன்னிங்க எல்லா பாட்டுமே மை ஃபேவரிட். சூப்பர் பா.

Be simple be sample

அன்பு ரேவா,

நல்ல‌ பதிவு.

சினிமாப் பாட்டு கேக்காம‌ ஒரு நாள் கூடப் போனது கிடையாது. பிடிச்ச‌ பாட்டெல்லாம் லிஸ்ட் போடச் சொன்னா ஆயிரக் கணக்கில் போகும்.

சில‌ படங்களில் பல‌ பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். அதில் ஒன்றிரண்டு நல்ல‌ பாடல்கள் அவ்வளவா கவனத்தில் வராமல் போயிடும்.

யூத் படத்தில் நீங்க‌ சொல்லியிருக்கும் சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் பாட்டு அந்த‌ மாதிரிதான். இந்தப் பாட்டு எனக்கும் ரொம்ப‌ ரொம்பப் பிடிக்கும்.

அதே மாதிரி பம்பாய் படத்தில் வரும் ஹல்லா குல்லா பாட்டு, 'மலரோடு' பாட்டு இரண்டும் ரொம்ப‌ பாப்புலர் ஆகலை. டி.வி.யிலும் கேக்க‌ முடியறதில்லை. ரெண்டுமே பிடிச்ச‌ பாட்டு.

வீட்டில் எப்பவும் முரசு, சன் லைஃப், ஜே மூவிஸ், அமுத‌ கானம், ஓடிட்டே இருக்கும். பாட்டு அது பாட்டுல‌ காதுல‌ விழுந்துட்டு இருக்கணும் எனக்கு.

என்னதான் இருந்தாலும் ட்ரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்ட‌ காலம் பொற்காலம். இப்ப‌ டி.வி.ல‌ பாட்டு கேக்கறப்ப‌, காட்சிதான் முதன்மையா கருத்துல‌ பதியுது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாம்மா. எதை சொல்லி எதை விட. எனக்கும் நீங்க சொன்ன அத்தனை பாட்டும் பிடிக்கும். என் அப்பாவும் நான் சின்னவயசுல பார்த்திருக்கிறேன். டிரான்சிஸ்டர் உடன் தான் இருப்பார்.

Be simple be sample