ஜவ்வரிசி பேர்ல் கேசரி

தேதி: October 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ஜவ்வரிசி - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - தேவைக்கேற்ப
பால் - கால் கப்
ஏலக்காய் பொடி - தேவைக்கேற்ப
ஃபுட் கலர் - சிறிது
விரும்பிய நட்ஸ்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்க்கவும்.
பால் கொதித்ததும் அத்துடன் ஊற வைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிடவும்.
அத்துடன் ஃபுட் கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கலந்துவிடவும்.
நன்கு கலந்துவிட்டு சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
சர்க்கரை நன்கு கலந்தவுடன் தேவைக்கேற்ப நெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியான பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.
சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி பேர்ல் கேசரி தயார்.

பால் சேர்க்க விரும்பாதவர்கள் ஜவ்வரிசியைத் தண்ணீரில் வேக வைக்கலாம்.

ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்தெடுத்து வேக வைப்பதால் எளிதில் வெந்துவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். வித்தியாசமான‌ குறிப்பு. இந்த‌ கேசரியின் பதம் அல்வா போல‌ இருக்குமா? ஜவ்வரிசி வழு வழுப்பாக‌ இருக்கும் அல்லவா? அதனால் கேட்கிறேன். நான் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

ரொம்ப‌ நல்லா இருக்கு. இன்னிக்கே செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

அக்கா டிஷ் ரொம்ப‌ சூப்பரா இருக்கு :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நீங்கள் குறிப்பிட்டது போன்று கொஞ்சம் சேர்ந்து கொண்டு தான் இருக்கும்.அவசியம் செய்து பாருங்கள். நன்றி

நன்றி பாலநாயகி, செய்து பார்த்து பின்னூட்டம் கொடுங்க.

நன்றி. உங்களை எல்லோரும் புதுப் பெண் என்று பேசிக்கிறாங்க.
திருமணத்திற்க்கு ரெடியாகிட்டு இருக்கீங்களா :-)) வாழ்த்துக்கள்.

புதுப்பெண்லாம் இல்லை அறுசுவைக்கு ரொம்ப‌ பழைய‌ பெண் தான் அக்கா;)

மேரேஜ் இன்னும் கொஞ்ச‌ நாள் ல‌ எப்போனு எனக்கெ தெரியல‌ ஆனா சீக்கிரமானு மட்டும் தெரியும் 2 வருஷமா வேணாம் நு எஸ்கேப் ஆயிட்டேன் கண்டிப்பா இந்த‌ டைம் முடியாது ஆனா நெக்ஸ்ட் இயர்ல‌ தான் இருக்கும் திருமணத்துக்கு ரெடி ஆயிக்கிட்டே இருக்கேன் :) அக்க‌ நீஙக் எங்க‌ இருக்கீங்க‌ ..?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இன்னும் ஒரு வித்தியாசமான‌ ஸ்வீட்டா , பார்க்கும்போதே சாப்பிடனும்னு தோனுது. கலக்குங்க‌....

நல்ல விஷயங்கள் அதுவாக அமையும் போது விலகி போகக் கூடாது. இனிமே எஸ்கேப் ஆகாதீங்க. சீக்கிரம் எங்க க்ரூப்ல சேர்ந்திடணும் சரியா :-)) நான் UK யில் இருக்கிறேன் கனிமொழி

வாங்க அனு, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. வய்ப்பு கிடைக்கையில் செய்துப் பாருங்க அனு. நன்றி

ஜவ்வரிசி பேர்ல் கேசரி மிகவும் அருமை.....
முடிந்த போது செய்து பார்த்திட வேண்டியதுதான்.
ஸ்வீட்டெல்லாம் விட்டு வைக்க மாட்டோமுல்ல....
பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி ..

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி அப்சரா. செய்துப் பார்த்து பின்னூட்டமும் கொடுங்க.

ஜவ்வரிசி பேர்ல் கேசரி பார்க்கவே அருமையா இருக்கு 2 நிமிசத்துல வெந்துடுமா ஜவ்வரிசி?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு வாணி,

மாதுளை முத்துக்களில் செய்தது போல‌, பாக்கவே அழகா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர் கலர்புல் ஸ்வீட் , ஈஸி டிப்ஸ்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கொதித்த பாலில் வேகவைப்பதாலும், ஜவ்வரிசி ஏற்கனவே நன்றாக ஊறி சாஃப்ட்டாக இருந்ததாலும் எனக்கு 2 நிமிடத்தில் வெந்து விட்டது ஸ்வர்ணா. நன்றி

\\மாதுளை முத்துக்களில் செய்தது போல‌// உங்கள் உவமையை ரசித்தேன் சீதா மேடம், நன்றி

நன்றி சுபி.