சேமியா கேசரி

தேதி: January 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேமியா - 500 கிராம்
சீனி- 400 கிராம்
தண்ணீர் - 4 கப்
நெய்- 300 கிராம்
முந்திரி - 10
ஏலம் - 4 (பொடி செய்யவும்)
கேசரி பவுடர்- சிறிது


 

சேமியா,முந்திரி பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும்.

ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.சேமியா வெந்ததும் சீனி சேர்த்து கிளறி முந்திரி,மீதியுள்ள நெய்,கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் ஏலப்பொடி சேர்க்கவும்.பின்பு தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கி பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்