கோடா கஞ்சி

தேதி: January 11, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மைதா மாவு - 300 கிராம்
தேங்காய் - ஒன்று
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 3
ஏலம் - 3
சீனி - 400 கிராம்
நெய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் மைதாமாவை சலித்துக் கொள்ளவும். அதில் ஒரு மேசைக்கரண்டி தனியாக எடுத்து வைக்கவும்.
பாக்கி மாவில் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவைப் போல் பிசையவும். பின்பு பூரி கட்டையால் மெல்லிதாக தேய்க்கவும்.
பின்பு 2 அங்குல சதுரங்களாக கத்தியால் கீறவும். அதன் பின்பு சதுரத்தின் நடுவே இரண்டு விரல்களால் கிள்ளி திருகவும். இப்பொழுது பூவைப்போல் காணப்படும்.
இவற்றை நல்ல வெயிலில் ஒரு மணி நேரம் காய வைக்கவும். தேங்காயை துருவி முதல் பால் தனியாக எடுத்து கொள்ளவும். மறுபாலை ஒரு லிட்டர் போல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டாவது எடுத்த பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பின்பு அதில் காய வைத்திருக்கும் கோடாக்களை போட்டு வேக விடவும்.
வெந்தப்பின்பு அதில் சீனியை சேர்க்கவும். சுவையை கூட்ட சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு அதில் முதலில் எடுத்த பாலை சேர்த்து கொதி வந்த பின்பு இன்னொரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம், முந்திரி, திராட்சை ஆகியவற்றை சிவக்க வறுத்து கொட்டவும்.
கடைசியாக எடுத்து வைத்துள்ள மைதா மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதித்த பின்பு இறக்கவும்.


இது பாயசம் வகையை சார்ந்தது. இஸ்லாமிய வீடுகளில் பூரியான் ஃபாதிஹா என்ற விஷேச தினங்களில் செய்வார்கள். சிலர் மக்ரோனியை வைத்தும் தற்பொழுது செய்கிறார்கள். முந்தைய காலத்தில் இப்படித்தான் செய்தார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் ரஸியா!
கோடா செய்வது எப்படி என்று உங்களிடம் டிஜிட்டல் கேமரா இருந்தால் போட்டோ எடுத்து காட்டுங்களேன். ப்ளீஸ்!

நல்லது செல்லமா கூடிய விரைவில் எடுத்து அனுப்புகிறேன்

thank you(mercy)Rasia!

டியர் செல்லமா!தங்களுக்கு ப்ஃரென்ச் புரிகிரது!மெர்ஸி புக்கூ (merci beaucoup-thankyou very much)

ஏதோ கவனக்குறைவால் அப்படி பிழையாக எழுதிவிட்டேன். சாரி!(oui, j'ai compris français, mais j'ai écris 'mercy' pour 'merci'. vraiment c'est faut. excusez-moi!)

நல்லது செல்லமா,தாங்கள் கேட்டதுபோல் கோடா செய்முறை போட்டோ எடுத்து விட்டேன் ஆனால் குறிப்போடு சேர்க்க முடியவில்லை எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை!மன்னிக்கவும்!

சகோதரி ரஸியா அவர்களுக்கு,

படம் சேர்ப்பது குறித்த உங்களின் மின்னஞ்சலுக்கு நான் ஏற்கனவே பதில் அனுப்பியிருந்தேன். தாங்கள் அதனைக் கிடைக்கப்பெறவில்லை என்று எண்ணுகின்றேன்.

படங்கள் சேர்க்கும் அனுமதி, பல்வேறு காரணங்களை முன்னிட்டு, உறுப்பினர்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, தாங்கள் சேர்க்க விரும்பும் படத்தை, குறிப்பின் பெயரைக் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். நான் அதனை சேர்த்து விடுகின்றேன்.

feedback@arusuvai.com என்ற முகவரிக்கு attachment செய்து அனுப்பவும்.

அன்பு ரஸியாவுக்கு,
செய்முறை ஃபோட்டோவுக்கு ரொம்ப நன்றி. ஆனால் பூ மாதிரி செய்வதில் இன்னொரு ஸ்டெப் அதிகமாக எடுத்து காட்டியிருந்தால் நன்கு புரியும். கையில் பிடித்திருப்பதுதான் தெரிகிறது ஆனால் எப்படி பூ மாதிரி வந்தது என்று புரியவில்லை. சரி நான் முயற்சிசெய்து பார்க்கிறேன்.

நலமா?ஆம்மாம் இன்னொரு ஸ்டெப் எடுத்து இருந்தால் தங்களுக்கு நன்று புரிந்து இருக்கும்,நீங்கள் கட் செய்யப்பட்ட ஒரு கட்டத்தை நடுவே இரண்டு விரல்களால் கிள்ளி எடுங்கள் அதை அப்படியே திருகுங்கள் இப்பொழுது உங்கள்கையில் பூ மலர்ந்து இருக்கும்.(நானெ செய்துக்கொண்டு நானே போட்டோ எடுத்ததால் வந்த குறை)

ரஸியா, நான் நலம், நீங்கள் நலந்தானா? ஓகே இப்பொழுது ஓரளவு நன்றாக செய்யும்படி புரிகிறது. ரொம்ப நன்றி. ஃபோட்டோவை பார்த்தாவே தெரிகிறது நீங்களே ஃபோட்டோ எடுத்த மாதிரி. பூரிக்கட்டையின் மீது ஒருகைதான் தெரிகிறது :) . பரவாயில்லை நல்ல ஆர்வம்தான் உங்களுக்கு.

நாங்கள் நலம்,நீங்கள் நலமா?குளிர் எப்படியுள்ளது,தங்களுக்கு இப்பொழுது புரிந்தது என்றீர்கள்,மிக்க நன்றி!எனக்கு சமையலில் மிக்க ஆர்வம் தான்,சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்பதர்க்காக சிரமம் எதையும் பார்க்க மாட்டேன், என்னுடய விருப்பம் சுவையாக சமைக்க வேண்டும் என்பதே!எல்லோரும் என்னுடைய சமையலை விரும்பி உண்ணவேண்டும் என்பதே!