அத்திப்பழ அல்வா

தேதி: October 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

அத்திப்பழம் - 10
பேரிச்சம் பழம் - 30
பாதாம் தூள் - 3 மேசைக்கரண்டி
சீனி - ஒரு கப்
நெய் - 50 கிராம்
எண்ணெய் - கால் கப்
கார்ன் ஃப்ளார் - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிறிது
முந்திரி - 8


 

அத்திப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பேரிச்சம் பழத்திலுள்ள விதையை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரியை உடைத்துப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
ஒரு நாண் - ஸ்டிக் கடாயில் சீனியைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
அத்துடன் நறுக்கிய அத்திப்பழம், பேரிச்சம் பழம், பாதாம் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கிளறவும்.
நன்றாகக் கிளறிவிட்டு சுருள வேகவிடவும்.
அத்துடன் கால் கப் தண்ணீரில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து ஊற்றி, நன்கு இடைவிடாது கிளறவும்.
பிறகு சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.
கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சோ யம்மி ரெசிபி :) சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அழகு படம்... சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான குறிப்பு. சுவையாக இருக்கும் போல தெரிகிறது.

‍- இமா க்றிஸ்

ஐய்யோ வாய் ஊருது. பார்க்கவே சூப்பரா இருக்கு.

ஆனா எனக்கு இவ்ளோ கரெக்டா பதமா வராது. சோ எனக்கு ஒரு பார்சல் பண்ணிடுங்க‌ ப்ளீஸ்.

ரொம்ப‌ நல்லா பண்ணி இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

அத்திப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.பேரீச்சையிலும் இரும்பு சத்து உள்ளது. இது பெண்களூக்கு மிக‌ நல்லது. உடலில் இரத்த உற்பத்தி அதிகமாககும்.இது என் அனுபவம்.

நன்றி தோழி.

வித்தியாசமான‌ பழத்தில் ஒரு அல்வா!....நல்ல‌ குறிப்பு.

குறிப்பினை வெளியிட்ட டீமிர்க்கு மிக்க நன்றி.

முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி:கனி.

மிக்க நன்றி:வனி.

சுவையும்,ஆரோக்கியமும் கூட,நன்றி:இமாம்மா.

கடைசி ப்லேட் அப்படியயே உங்களுக்கு தான்,செய்து பார்க்க‌ பார்க்க‌ பதம் வரும்.நன்றி பாலநாயகி.

இது இரும்பு சத்து நிறைந்தது தான்,இதயதிர்க்கும் அத்தி நல்லது.நன்றி:காயத்திரி கனேசன்.

பாராட்டிர்க்கு நன்றி:அனு செந்தில்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பரா இருக்கு முசி.

Be simple be sample

அத்திப் பழ ஜூஸ் தான் குடித்துள்ளேன், பழம் சாப்பிட்டதில்லை முசி, இங்கு இந்த பழம் கிடைக்குது. அல்வா செய்துப் பார்த்திட வேண்டியதுதான். டேட்ஸ் நிறைய சேர்ப்பதால் நல்ல இனிப்பாக இருக்குமே, சீனி ஒரு கப் சேர்க்கணுமா?

முசி பார்க்கும் போதே சாப்பிடதோனுது சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி,ரேவதி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பழமாக‌ சாப்பிடவும் நல்லா இருக்கும்.முக்கால் கப்பாக‌ சீனியின் அளவை குறைத்து கொள்ளுங்க‌.ஒரு கப் சீனி கரக்டாக‌ தான் இருந்த‌து.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாராட்டிர்க்கு நன்றி;சுவர்ணா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,

மிகவும் ஹெல்தியான‌ ரெசிபி கொடுத்திருக்கீங்க‌, பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

Muhasina assalamu alaikum epadiyikinga enna niyabagam iruka namna oor pakkam seyvaangala.kayal pakkamthan enaku oru ponnu senjukoduthu nan saapituyirukenma thanks trypannitu selren thanks

பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி,சிதாம்மா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ் அலைக்கும் சலாம்,நல்லா நியாபகம் இருக்கு.நாகூர் பக்கம் அல்வா கடைகளில் கிடைக்கும்.எப்படி செய்வார்கள் என்று தெறியாது,யூகித்து செய்தேன்.நல்லா வந்தது,டேஸ்டும் சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.