முட்டை புளிக்குழம்பு

தேதி: October 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

முட்டை - 4
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - 2
முழுப் பூண்டு - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
திக்கான தேங்காய்ப் பால் - முக்கால் கப்
கடுகு, வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மூன்று முட்டைகளை வேகவைத்து கீறி வைக்கவும். மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து ஊற்றி தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
அத்துடன் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை அடங்கி குழம்பு சற்று கெட்டியானதும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி வேகவிடவும்.
முட்டை வெந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி லேசாக கொதிக்கவிடவும்.
பிறகு அவித்த முட்டைகளைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.
சுவையான முட்டை புளிக்குழம்பு தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முட்டை புளிக்குழம்பு மை ஃபேவரிட் சூப்பர் ரெசிபி ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Muttai pulikulambu simply superb..... by dhana

முட்டை புளிக்குழம்பு கலர் அள்ளுது சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சமையல் சூப்பருங்க. நாளை அல்லது நாளை மறுநாள் கட்டாயம் இதையே செய்துடுறேன் லன்ச்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதே செய்முறையில் நான் காய் சேர்த்து செய்வேன் உமா, அடுத்த முறை முட்டை சேர்த்து செய்து பார்க்கிறேன்.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தோழிகள் அனைவரின் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. செய்துட்டு சொல்லுங்க..

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது. சூப்பரா இருக்கு. கலர் அள்ளுது. வாழ்த்துகள் உமா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எனக்கு இந்த‌ டைப் முட்டைக்குழம்பு புதுசு. பார்க்கும்போதே ரொம்ப‌ நல்லாயிருக்குங்க‌....

உமா கலர் பார்த்தாலே செம டேஸ்டாயிருக்கும்போல கன்டிப்பா உடனே பன்னிசாப்பிட தோனுது நன்றி

Nethu madhiyame muttai pulikulambu senjom nalla irundhathu, micham irundha kulambu nightku dosaiku sapitom athuvum nalla irundhathu.... by dhana

Nethu madhiyame muttai pulikulambu senjom nalla irundhathu, micham irundha kulambu nightku dosaiku sapitom athuvum nalla irundhathu.... by dhana

இப்பத்திக்கு முட்டை இல்லாம புளிக்குழம்பு வைக்கப்போறேன்..:) கலர் பார்த்தாலே தெரிது சுவையாக இருக்கும்னு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

thanks for sharing the receipe