ஈச்சங்கொட்டை பணியாரம்

தேதி: January 12, 2007

பரிமாறும் அளவு: 8 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - ஒரு படி
முட்டை - 2
நெய் - 150 கிராம்
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3/4 லிட்டர்


 

முதலில் முட்டையை கலக்கவும், ஒரு தாம்பாளத்தில் மாவை கொட்டி நடுவில் குழி பரிக்கவும். மேலும் நெய்யை சூடு செய்து மாவில் ஊற்றவும், தேங்காய் பாலையும் சூடு செய்து ஊற்றவும்.
கலக்கிய முட்டை, உப்பையும் சேர்த்து நன்கு பிசையவும்.
இரண்டு இன்ச் நீளத்திற்கு ஈச்சங்கொட்டைப்போல் உருட்டி நடுவில் ஒரு குச்சியால் அழுத்தவும். அனைத்து மாவுகளையும் இதேபோல் செய்துக் கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டிய மாவுகளை போட்டு வேக விடவும். பொன்னிறமானவுடன் எடுக்கவும். இதுவே ஈச்சங்கொட்டை பணியாரம்.
இந்த மாவை 1/2 அங்குல உயரத்திற்கு தட்டி அச்சுக்கலில் பதித்தும் செய்யலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள ரஸியா, எப்படி இருக்கீங்க? இந்த பணியாரத்தை செய்து பார்த்தேன். குண்டக்க மண்டக்கன்னு ஒரு ஷேப்பில செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. எண்ணையும் குடிக்கவில்லை. நன்றி உங்களுக்கு.

நான் நலமாக இருக்கேன், நீங்களும் நலம் தானே? ஈச்சங்கொட்டை பனியாரத்தை செய்து பார்த்தமைக்கு ரொம்பவும் நன்றி,நீங்கள் செய்த ஷேபுக்கு ஏற்றார்ப்போல் பேரை மாற்றிக்கொண்டால் போச்சு!உங்களுடைய பின்னூட்டம் மிகவும் உற்ச்சாகத்தை தருகிறது!நன்றி!

அன்புள்ள ரஸியா!

நலமாக இருக்கிறீர்களா? இந்த ஈச்சங்கொட்டை பணியாரம் செய்ய நினைத்தேன். படி கணக்குக்கு பதிலாக அரிசி மாவு எத்தனை தம்ளர் அல்லது கிராம் என்று கூற முடியுமா? சாதாரண அரிசி மாவா அல்லது ஊறவைத்து வறுத்த மாவா? பச்சரிசி மாவுதானே?

நான் நலமா இருக்கேன்,நீங்கள் நலமா இருக்கிறீர்களா?இதர்க்கு சாதாரன அரிசி மாவு பயன் படுத்தலாம்,5 ட்ம்ளர் மாவு எடுத்துக்கொள்ளலாம்,மேலும் இதர்க்கு சில குறிப்புகளைய்யும் சொல்லவேண்டும்,இதர்க்கு தேங்காய்ப்பால் பயன் படுத்தும் போது பொறிக்கும் போது எண்ணை பொங்குகிறது,இதனால் சிறிது சிறிதாக போட வேண்டியுள்ளது.அதனால் தேங்காய்ப்பாலை தவிர்த்துக்கொள்ளலாம்.மேலும் இதில் 1 1/2 மேஜைக்கரண்டி சீனி சேர்த்தால் லேசான இனிப்பு சுவைய்யுடன் சுவைய்யாக இருந்தது!இப்பொழுது இப்படி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது!இந்தபனியாரம் இனிப்பு வேண்டுமானால் சீனி பாகு செய்து அதில் போட்டு பிறட்டுவது தான் எங்கள் ஊர்பக்கம் பழக்கத்தில் இருப்பது,ஆனால் இங்கு ப்ரான்ஸில் ஒருத்தர் மாவிலேயே சிறிது சீனி கலந்து செய்ததை சாப்பிட்டேன் நன்றாக இருந்தது அதனால் நானும் செய்து பார்த்தேன் அன்றே எனது பிள்ளைகள் காலி செய்துவிட்டார்கள்!செய்து பார்த்து சொல்லுங்கள்!உங்களிடம் இந்த சந்தர்ப்பத்தில் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது!

அன்புள்ள ரஸியா!

இன்று ஈச்சங்கொட்டை பணியாரம் செய்தேன். நன்றாக வந்தது. நான் 3 கப் அரிசி மாவுதான் எடுத்துக்கொண்டேன். ஆனாலும் நீங்கள் குறிப்பிட்ட சீனியின் அளவு போதவில்லை. இன்னும் கொஞ்சம் கூடவே சேர்க்க வேண்டியிருந்தது. உங்களுடைய ஸாசேஜ் சீஸ் ப்ரெட் டோஸ்ட்டும் செய்தேன். நன்றாக வந்தது.

நான் இனிப்பு அதிகம் விரும்பாததாம் கொஞ்சமாக சேர்த்தேன்,பிள்ளைகள் கடலை சாப்பிடுவது போல் ஒரு வேலையிலேயே சாப்பிட்டு முடித்துவிடுவார்கள்.ஸாசேஜ் சீஸ் ப்ரட் டோஸ்ட்டும் நன்றாக வந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!சரியாக வராவிட்டால் எனக்கு தான் கஷ்ட்டமாக இருக்கும் எத்தனை பொருட்க்கள் வீணாகியது என்று!அப்படி எதுவும் ஆகாமல் நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம்!உங்கள் பின்னூட்டம் பார்க்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு!மிக்க நன்றி மேடம்!