தக்காளி குருமா

தேதி: October 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

தக்காளி - 5 - 6
வெங்காயம் - 2
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப் பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
தக்காளியின் அடிப்பகுதியில் கூட்டல் குறி வடிவில் கத்தியால் கோடிட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு தக்காளியிலுள்ள தோலை நீக்கிவிடவும். (இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வைத்தெடுத்து தோலை உரித்தால் தோல் எளிதில் வந்துவிடும்). தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு தூள் வகைகள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
அத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்கவிட்டு, மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி குருமா தயார். இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.

தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப எளிமையான குறிப்பு நல்லாருக்கு வாணி. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஈஸி அன்ட் டேஸ்டி சைட் டிஷ் சப்பாத்திக்கும், தோசைக்கும்... நல்ல‌ குறிப்பு .:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தக்காளி குருமா ரொம்ப சுலபமா இருக்கு .பார்க்கும் போதே நல்லா இருக்கும்னு தோணுது ..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

எப்பவுமே தேங்காய் அரைத்து சேர்த்து செய்துதான் பழக்கம், தேங்காய்ப்பால் அதைவிட‌ நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.

நல்ல‌ குறிப்பு வாணி.

ரொம்ப ஈசியா நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இட்லிக்கு உங்கள் தக்காளி குருமா செய்தேன் நன்றாக இருந்தது... தேங்காய்,சோம்பு அரைத்து சேர்த்தேன்பா..

அன்பு வாணி,

தேங்காய்ப் பால் சேர்த்து செய்திருப்பது ரொம்பவும் நல்லா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

தக்காளி குருமா செய்வதற்கு எளிமையான குறிப்பாக உள்ளது வனி.....
பார்க்கும்போதே சூப்பராக இருக்கிறது.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எளிமையான குறிப்பு நல்லாருக்குங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப ஈசி தான் உமா, நன்றி
நன்றி கனி. இதை சப்பாத்திக்கு நான் டிரை பண்ணினதில்லை. இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்திற்க்கு ரொம்ப நல்லா இருக்கும்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி சங்கீ

நானும் தேங்காய் அரைத்து சேர்ப்பேன் அனு. தேங்காய் இல்லாத சமயத்தில் தேங்காய்ப் பால் சேர்ப்பதுண்டு. நன்றி

நன்றி வனி

செய்துப் பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்க்கு நன்றி பிரியா. நானும் வீட்டில் தேங்காய் இருக்கும் சமயம் தேங்காய், சோம்பு அரைத்து சேர்ப்பதுண்டு.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி அப்சரா.
நன்றி ஸ்வர்ணா.

வாணி கொஞ்சம் இதே ஸ்டைலில் அடிக்கடி தக்காளிகுழம்பு வைப்பது வழக்கம்.
அடுத்தமுறை இது போல் செய்து பார்க்கிறேன் :) குறிப்பு அருமை.:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தங்களின் தக்காளி குருமா ரெசிபி செய்தேன். தோசைக்கும் சப்பாத்திக்கும் நன்றாக‌ இருந்தது. நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!