சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேதி: January 12, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்மதி அரிசி - 3 கப்
இறால் - 250 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
முட்டை - 2
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டுபல் பெரியதானால் - 8
உப்பு - தேவையான அளவு
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி(சைனீஸ் எள் எண்ணெய் கிடைத்தால்
நல்லது, இல்லை என்றால் சூரிய காந்தி எண்ணெய் உபயோகபடுத்தலாம்)


 

முதலில் பாஸ்மதி அரிசியை உப்பு போட்டு பொலபொலவென்று சோறு ஆக்கிக் கொள்ளவும்.
இறாலை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கிகொள்ளவும், பட்டாணியை வேக வைக்கவும். (வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஐஸில் இருக்கும் பட்டாணியை அப்படியே சேர்க்கலாம்).
முட்டையை கலக்கி சிறிது எண்ணெயில் பொரித்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
பூண்டை நசுக்கி கொள்ளவும், பின்பு ஒரு நாண் ஸ்டிக் சட்டியில் எண்ணெய் ஊற்றவும். அதில் நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
அதில் இறாலை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் பச்சைபட்டாணி, முட்டை, மிளகு தூள், அஜினோமோட்டோ, உப்பு அனைத்தையும் போட்டு கிளறவும்.
பிறகு சோற்றை போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியா, இந்த வ்பிறைட் றைஸ் ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்கள் எடுக்கவுள்ளேன். யாரும் சமைக்கலாமில் தேடினேன், இப்படி ஒன்று இல்லை. எனவே செய்கிறேன். பார்க்கவே ஆசையாக இருக்கு, சுவை சொல்லவே தேவையில்லை என நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரொம்ப நன்றிமா,யாரும் சமைக்கலாம் பகுதிக்கு படம் எடுப்பதர்க்கு,உங்கள் முயர்ச்சியால் எல்லோருடைய்ய சமையலைய்யும் எல்லோரும் சமைக்கிறார்கள் உங்களுக்கு நன்றிகள் பல பல...!அத்தோடு ரேணுவுக்கும்!நான் காத்திருக்கிறேன் படத்தோடு இந்த குறிப்பை காண!